![]() |
தமிழ்ப் பணி - சிற்றிதழ் அறிமுகம் 40Posted : வெள்ளிக்கிழமை, ஜுன் 23 , 2006 08:09:58 IST
பேச்சுத் தமிழும் ,ஆங்கிலக் கலப்பும் மலிந்திருக்கும் பெரும் பத்திரிகைச் சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு , தமிழை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுபவை சிறு பத்திரிகைகள். நவீன கலை இலக்கியத்திற்கென்று பல சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருப்பதைப்போல் தமிழ் மரபைப் போற்றும் பல சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.அவற்றில் குறிப்பிடத்தக்க இதழ் 'தமிழ்ப்பணி' மாத இதழ்
" என்னை நன்றாய் எந்தைப் படைத்தனன் அன்னைத் தமிழை அகிலம் உயர்த்தவே" என்பதை முழக்கமாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் இவ்விதழ் , 1971 ஆம் ஆண்டு சித்திரை மாதம் ( ஏப்ரல்) முதல் இதழ் வெளிவந்தது. தொடர்ந்து 36 ஆண்டுகளாக இடைவிடாது வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.இவ்விதழின் நிறுவனர் மற்றும் சிறப்பாசிரியர் பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன். ஆசிரியர் வா.மு.சே. திருவள்ளுவர். " உலக அரங்கில் தமிழுக்கும் தமிழருக்கும் ஓர் இடம் பெற்றுத் தருவதும் , கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் தமிழ்ப் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்பதும் தமிழ்ப்பணியின் நோக்கமாகும் " என்கிறார் வா.மு.சே. தமிழுக்காகப் போராடுகிறவர்கள், இயக்கவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் போன்றவர்கள் இவ்விதழில் தொடர்ந்து எழுதி வருகின்றனர். கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், இராமகுருநாதன்,அவ்வை நடராசன், கோவை ஞானி ஆகியோர் தொடர்ந்து எழுதி வருகின்றனர். மரபுக் கவிதை, புதுக் கவிதை, நூல் மதிப்புரை, அறிவியல் தமிழ் கட்டுரைகள், சங்க இலக்கியப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு போன்ற பகுதிகள் வெளியாகிவருகின்றன. தமிழ்ப் பணி இதழுடன் பன்னாட்டுத் தமிழ் மன்றத்தையும் நடத்தி வருகிறார் வா.மு.சேதுராமன். பல உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இணைப்பு பாலமாக இருப்பது , உயர்தனிச் செம்மொழி தமிழ் என்பதை உலக அரங்கில் நிலை நாட்டுவது போன்ற முக்கிய குறிக்கோள்களுடன் இயங்கி வருகிறது பன்னாட்டு தமிழுறவு மன்றம். ஆசிரியர் பற்றி தற்போது 79 வயதாகும் முனைவர் வா.மு. சேதுராமன் 'க¨Äமாமணி' உள்ளிட்ட பல்§Åறு பட்டங்களைப் பெற்றவர்.பல்வேறு உலக நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டு வருபவர்.இலக்கியம், பயண நூல் , ஆய்வு, மொழிபெயர்ப்பு என பலதுறை சார்ந்து ஏறக்குறைய 90 நூல்களூக்கு மேல் எழுதியிருக்கிறார்.நூற்றுக்கணக்கான தமிழறிஞர்களுக்கு பாராட்டு விழாக்களை நடத்தி சிறப்பு செய்திருக்கிறார். தமிழ்மணி புத்தகப் பண்ணை என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். சந்தா மற்றும் தொடர்பு முகவரி: சந்தா விபரம்: தனி இதழ் ------ ரூ 7/- ஆண்டு உறுப்பினர் ----- ரூ 100/- வெளி நாடுகள் ----- 20 USD முகவரி: தமிழ் பணி வா.மு.சே.திருவள்ளுவர், 12, சாயி நகர் இணைப்பு, சென்னை - 92 தொ.பே: +91 - 44 - 24871375 +91 - 44 - 28552237 மின்னஞ்சல்: va-mu-Sethuraman@yahoo.com - மு. யாழினிவசந்தி வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது. கல்வெட்டு பேசுகிறது நவீன விருட்சம் நிழல் முகம் உயிர்மை புதுவிசை கவிதாசரண் கூட்டாஞ்சோறு பன்முகம் நடவு உன்னதம் உங்கள் நூலகம் புதிய புத்தகம் பேசுது கலை காலம் தாய்மண் புதுகைத் தென்றல் சமரசம் நம் உரத்த சிந்தனை திரை கதை சொல்லி புதிய பார்வை தீராநதி காலச்சுவடு படப்பெட்டி ஆயுத எழுத்து விழிப்புணர்வு வடக்கு வாசல் இனிய ஹைக்கூ உழைப்பவர் ஆயுதம் தை , மண்மொழி தச்சன் அதிர்வு , குழலோசை தமிழ் நேயம் யாதும் ஊரே மது மலர் தலித்முரசு மீண்டும் கவிக்கொண்டல் அநிச்ச
|
|