செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
கோ.வசந்தகுமாரன்-கவிதைத்திருவிழா 9
அரிவாள் மீதேறி
ஆடுகுடித்து
சந்நதம் கொண்டாடிய
பூசாரிக்கு
கூட்டத்தில் ஒருத்தியாய்
மனைவியைக் கண்டதும்
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
கோ.வசந்தகுமாரன்-கவிதைத்திருவிழா 9
Posted : வியாழக்கிழமை, ஜுன் 22 , 2006 05:29:59 IST
அரிவாள் மீதேறி
ஆடுகுடித்து
சந்நதம் கொண்டாடிய
பூசாரிக்கு
கூட்டத்தில் ஒருத்தியாய்
மனைவியைக் கண்டதும்
மலையேறியது சாமி.
***** ***** ***** *****
கடவுள்
உண்டென்றான்
ஒருவன்.
இல்லையென்றான் இன்னொருவன்.
இருவரையும் விழுங்கி
அமைதியாயிற்று
ஆழிப்பெருங்கடல்.
***** ***** ***** *****
காகிதம்
திருடியேனும்
கவிதை எழுதலாம் சமுதாயம் திருத்த.
***** ***** ***** *****
கடனாக
வாங்கிவந்த அரிசி.
எறும்புகள்
ஒவ்வொன்றாய்
இழுத்துச்செல்ல
பார்த்துக்கொண்டிந்தேன்
பசிமறந்து போச்சு.
***** ***** ***** *****
துணைக்கு யாருமற்ற
இடுகாட்டுத் தனிமைகளில்
சட்டெனப்
பூத்க்டுவிடுகின்றன
கவிதைகள்.
***** ***** ***** *****
கவலைகள் பிசைந்து
பெருங்கவலை செய்தேன்.
பெருங்கவலையொழிக்க
எத்தனித்து
தற்கொலை முனையில்
தத்தளித்த என்னை
ஒரு பூவைசிரித்துக்
கேலி செய்தது
பாறை பிளந்து
முளைத்த செடி.
***** ***** ***** *****
அற்புதக் கவிதைகள்
ஆயிரம் எழுதியென்ன
நட்பைச் சிதைத்த உனக்கு
நரகமே வாய்க்கட்டும்.
*******************
சந்தேகம்
கண்கள் பொய்யாகும்
காரிருளில்
மனம் பசிக்கும்
மானுடத்தின்
காலமறியாக்
காமப்புணர்ச்சியை
எங்குமிருக்கும்
எக்களிப்பில்
கண்டுகளிப்பானோ
கடவுள்.
- கோ.வசந்தகுமாரன்
நேசிக்க தூண்டும் இயல்பான கவிதைகளுக்கு சொந்தக்காரரான கோ.வசந்தகுமாரன் (பிறந்தநாள் 8 - 2- 1961) தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரத்தநாட்டைச் சார்ந்தவர்.
கோ.வசந்தகுமாரனது கவிதைகள் 'பாலைவனத்து பூக்கள்' (1985),'சொந்த தேசத்து அகதிகள்' (1987), 'மனிதன் என்பது புனைப்பெயர்' (1995) ,'மழையை நனைத்தவள்'(2003) ஆகிய நான்கு தொகுப்புகளாக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
'மனிதன் என்பது புனைபெயர்' என்ற தொகுப்பு சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பாடநூலாக இருக்கிறது.
'திருப்பூர் தமிழ் சங்கம்' மற்றும் 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் ' கோ.வசந்தகுமாரனுக்கு பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறது.
தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.
கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...
கவிஞர் சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
மதியழகன் சுப்பையா
முத்துமகரந்தன்
ரவிசுப்ரமணியன்
அழகுநிலா
அரிக்கண்ணன்
அய்யப்ப மாதவன்
அன்பாதவன்
ஜே.கே.73
|