???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 தமிழக விவசாயிகளின் நலன்களை காவு கொடுக்க மத்திய அரசு தயாராகி விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 பண மோசடி வழக்கு : செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு 0 முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு : கேரளா முதல்வர் பேட்டி 0 அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள்:முதல்வர் அறிவிப்பு 0 இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்:பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்! 0 கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு: தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு : தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அந்த நாள் ஊஞ்சல் 8 - யாழ் சுதாகர்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   16 , 2006  17:01:45 IST

திரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்' ஆடவிருக்கிறது.

தெருவில் உள்ள தேனீர் கடைகளில்
வானொலிப் பெட்டிகளில் திரைப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.

சிறுவனாக இருந்த போது ஜேசுதாஸ்...அந்தத் தேனீர் கடைகளின் பக்கம் நீண்ட நேரம் கால் கடுக்க நின்று வானொலியில் இருந்து வரும் பாடல்களை எல்லாம் ரசித்து விட்டு தாமதமாக பள்ளிக்குப் போவாராம்.

இதனால்...இசை தவிர்ந்த மற்றப் பாடங்களில் அவர் குறைவான மதிப்பெண்களைத் தான் பெற முடிந்தது.

ஜேசுதாஸின் ஐந்தாவது வயது முதல் பள்ளியில் அவர் கலந்து கொண்ட அத்தனை இசைப் போட்டிகளிலும் அவருக்குத் தான் முதற் பரிசு கிடைத்தது.

எல்லா வருடங்களிலும்...எல்லா இசைப் போட்டிகளிலும் அவர் ஒருவரே பரிசுகளைத் தட்டிச் சென்றதால்...தலைமை ஆசிரியர் யோசித்துப் பார்த்தார்.

ஜேசுதாஸை தமது..இருப்பிடத்துக்கு வரவழைத்து....

'இது வரை நீ பங்கு பற்றிய எல்லாப் போட்டிகளிலும் முதற் பரிசுகளைத் தட்டிச் சென்று விட்டாய்.

சந்தோஷமாகத் தான் இருக்கிறது...

ஆனால்...புதியவர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் அல்லவா?

ஆகவே இனிமேல் இந்தப் பள்ளிக்குள் நடை பெறும் இசைப் போட்டிகள் எதிலும் நீ கலந்து கொள்ளாதே.

ஆனால்..பள்ளிக்கு வெளியே நடக்கும் இசைப் போட்டிகளில் நீ தாராளமாகக் கலந்து கொள்ளலாம்..என்றாராம்.

தலமை ஆசிரியர் சொல்வதில் இருந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டு அன்று முதல் ஜேசுதாஸ் பள்ளியில் நடந்த எந்த ஒரு இசைப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.

பின்னாளில் தொடர்ந்து பல வருடங்கள்...யாருக்குமே விட்டு வைக்காமல் ஜேசுதாஸ் தேசிய விருது உட்பட பல உயர்ந்த விருதுகளைத் தட்டிக்கொண்டது சங்கீத சரித்திரத்தில் இன்றும் முறியடிக்கப் பட முடியாத 'அசுர ' சாதனை.

'விளையும் பயிரை முளையிலேயே தெரியும் ' என்பதற்கு...ஜேசுதாஸின் பள்ளிப் பருவத்தில் நடந்த இந்த சம்பவம் ஒரு எடுத்துக் காட்டு.

[ஊஞ்சல் இன்னும் ஆடும்]

யாழ் சுதாகர்


அற்புதமான பழைய திரைப்பட பாடல்களுக்கு இடையே யாழ்சுதாகரின் குரலை சென்னை 'சூரியன் எப்.எம்மில் ' நீங்கள் கேட்கலாம்.

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் ,யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர்.

'தேவி' ,'சாவி' ,'பொம்மை' ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய யாழ்சுதாகர் பிரபல பெண்கள் மாத இதழான 'மங்கை'யில் ஆறு ஆண்டுகள் (1993 - 1998) பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார்.

'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' (1986) ,'புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ்சுதாகர் பதிøகள்' ஆகிய புத்தகங்களை யாழ் சுதாகர் எழுதியுள்ளார்.

யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளை...அபூர்வமான ப¨Æய பாடல்களுடன்...கீழ் வரும் இணைய தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.
yazhkavi.blogspot.com

யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சல்' வாரந்தோறும் வெள்ளியன்று வெளியாகும்.

அந்த நாள் ஊஞ்சல் பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


Article 1
Article 2
Article 3
Article 4
Article 5
Article 6
Article 7


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...