செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
மதியழகன் சுப்பையா - கவிதைத்திருவிழா 8
குறுனைகள்
* வேகமாய்
வேர்பிடிக்கிறது
ஓரிலைத் தாவரம்
இலைகள் குவித்து
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
மதியழகன் சுப்பையா - கவிதைத்திருவிழா 8
Posted : வியாழக்கிழமை, ஜுன் 15 , 2006 03:27:04 IST
குறுனைகள்
* வேகமாய்
வேர்பிடிக்கிறது
ஓரிலைத் தாவரம்
இலைகள் குவித்து
கிளைகள் பரப்ப.
* பசுமை இலைகள்
சிறு- பெறு கிளைகள்
வண்ண, நறுமண
மலர்கள்
பழுத்த, சுவைமிக்க
கனிகள்
முடங்கிக் கிடக்கிறது
வீசி பிடித்து
விளையாடுவதை நிறுத்து
விதைத்துப்பார்
விந்தை புரிவாய்
அல்லேல்
விட்டெறி
தானே முளைத்து
வாழும்
* இலையுதிர்த்து
மெலிகிறது
மரம்
ஈரம் தேடி
அலைகிறது
வேர்கள்
***** ***** ***** *****
நினைவு பந்துகள்
* வளர்பிறை காலம்
வருமென்ற நம்பிக்கையில்
தேய்கிறது
மதி
தினந்தோறும்
* இருள் வெளியில்
எரிந்த பந்தை
எடுத்துத் திரும்ப
காத்திருக்கின்றன
நாய்கள்
காற்றைப் பிதுக்கி
கடாசியவைகள் பல
மிதிபடுகிறது
கைபடுகிறது
காணாமல் போவதில்லை நாளும்.
வெற்றிடங்கள் எல்லாம்
விழுந்து நிறைகின்றன
பந்துகள்
மறுபந்தை உதைக்கையில்
திரும்பி வந்து மோதுகிறது
முதல் பந்து
வீசியெறிந்தும்
உதைத்துத் தள்ளியும்
சோர்ந்து விழுகிறேன்
பந்துகளின் மேல்
இறுதியாய்
அமுக்குகிறேன் நீருக்குள்
நினைவு பந்துகளை.
***** ***** ***** *****
துணையெழுத்தின்றி
எப்படியென்றால் என்ன?
இப்படித்தான் என்பது
யாரிட்ட விதி?
எப்படியும் என்பது
எதற்கும் ஒவ்வாது
இப்படியுமில்லாமல்
எப்படியுமில்லாமல்
எப்படித்தான் ????
கட்டுக்குள் அடங்குமா?
அடங்காது
திசைகளை தீர்மானிக்கத்
தெரியும் அதற்கு
தானே எழுதிக் கொள்ளட்டும்
அவரவர் கவிதைகளை
***** ***** ***** *****
கேட்டால் தெரியுமா?
என்ன வேண்டுமென்கிறாய்
எப்பொழுதும்
எதாவது பேசச் சொல்கிறாய்
தனிமை வாய்ப்புகளில்
அப்படியிப்படி செய்யச்
சொல்கிறாய், அடிக்கடி
யாரைப் பிடிக்குமென்கிறாய்
நாள் தோறும்
வினவிக்கொண்டிருப்பாய்
வாழ்வு முழுமையும்
நிச்சயம்
புரிந்துணர மாட்டாய்
ஜன்மங்களுக்கும்
ஜன்மங்களுக்கும்.
***** ***** ***** *****
தேடல்
தொலைத்துவிடவில்லை
எதையும்
ஆனாலும் தொடர்கிறது
தேடல்கள்
அவசியங்கள் வேண்டி
தேடுகிறோம்
நமக்கான தேடுதல்கள்
முடிந்த நிலையில்
தேடுகிறோம் பிறருக்காய்
சொல், பொருள்,
இன்னபிற தேடுகிறோம்
தேடிக்கொண்டே
இருக்கின்றன உயிர்கள்
உயிரற்றவைகளையும்
தன்னையே தேடுவது
தெய்வீகமாம்
தேடுகிறார்கள்
பிறரில் என்னையும்
பிறர் என்னிலும்
கிடைத்தபாடில்லை எதுவும்
தொடர்கிறது தேடல்கள்
-மதியழகன் சுப்பையா
மும்பையில் வாழும் மதியழகன் சுப்பையா திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர்.ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் மதியழகன் சுப்பையா காதல் கொப்பளிக்கும் கவிதைக¨Çயும் நி¨Èய எழுதுகிறார். மதியழகன் சுப்பையாவின் ' மல்லிகைக்காடு ' என்ற கவிதை தொகுப்பு ஆகஸ்ட் 2005ல் வெளிவந்துள்ளது.
தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.
கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...
கவிஞர் சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
முத்துமகரந்தன்
ரவிசுப்ரமணியன்
அழகுநிலா
அரிக்கண்ணன்
அய்யப்ப மாதவன்
அன்பாதவன்
ஜே.கே.73
|