![]() |
மீண்டும் கவிக்கொண்டல் - சிற்றிதழ் அறிமுகம் 38Posted : வியாழக்கிழமை, ஜுன் 08 , 2006 23:30:11 IST
".. பாவேந்தர் பரம்பரையை வளர்ப்பதற்கும்
பாத்தமிழிற் சுவை விருந்து படைப்பதற்கும் மூவேந்தர் வளர்த்த தமிழ் காப்பதற்கும்... .... .... .... .... தமிÆ¢னத்தார் தலைநிமிர உழைக்கும் என்றும்". எனும் முழக்கத்துடன் 1979, மே மாதம் 'கவிக்கொண்டல்' எனும் பெயரில் இவ்விதழ் தொடங்கப்பட்டது. 24 பக்கத்தில் வெளிவந்த இவ்விதழின் விலை அப்போது 0.75 பைசா. ஆசிரியர், மா.செங்குட்டுவன். பாவேந்தர் பாரதிதாசனின் அட்டைப் படத்தை தாங்கி வந்த முதல் இதழில் மரபுக் கவிதைகள், விழாக் குறிப்புகள், பாராட்டுதல், நூற்களம் போன்ற பகுதிகள் வெளியாகியுள்ளன. அனைத்தும் கவிதை நடையிலேயே வெளியிடப்பட்டிருக்கிறது. பிறகு உரைநடையும் கலந்து வெளிவரத் தொடங்கியது. 1983 ஜீன் மாதம் வரை 'கவிக்கொண்டல்' எனும் பெயரிலேயே வெளிவந்தது. அதன்பிறகு சில வருடங்கள் இதழ் வெளிவராமல் நின்றுவிட்டது. 1991-இல் 'மீண்டும் கவிக்கொண்டல்' எனும் பெயரில் ஜீலை மாதத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. 'மீண்டும் கவிக்கொண்டல்' முதல் இதழை மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்களின் துணைவியார் திருமதி இந்திராணி சாமிவேலு அவர்கள் வெளியிட்டார். இன்றுவரை தொய்வில்லாமல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது 'மீண்டும் கவிக்கொண்டல்'. "தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், மொழி ஞாயிறு பாவாணர் வழியில், தமிழ் மொழியுணர்வு, இன உணர்வு மேலோங்கவும், பகுத்தறிவுக் கொள்கை பரவவும் பணியாற்றி வருகிறது மீண்டும் கவிக்கொண்டல்", என்கிறார் ஆசிரியர், மா.செங்குட்டுவன். மூத்த கவிஞர்களை சிறப்பித்து வருவதுடன் மரபுக்கவிதை வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் பணியாற்றி வருகிறது. கலைஞர் மு.கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, பெரியார், பாரதிதாசன், க.அன்பழகன், அண்ணாமலை செட்டியார், போன்றோரது படங்களை அட்டையில் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலை செட்டியார் நூற்றாண்டு சிறப்பிதழ் (1980 அக்-நவ) ஒன்றையும் பாவேந்தர் பாரதிதாசன் சிறப்பிதழ் (1984 மார்ச்-ஏப்) ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. 'எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தÁ¢ழென்று சங்கேமுழங்கு' எனும் பாரதிதாசனின் பாடல் வரியை தலையங்கப் பக்கத்தின் தொடக்கத்தில் தாரக மந்திரமாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மணிமொழி, கவிஞர் பல்லவன், த.கோ.வேந்தன், முருகு சுந்தரம், புலவர் வெற்றியழகன், அரிமதி தென்னகன், கவிஞர் இளமாறன், ஆறு.அழகப்பன், மூவேந்தர் முத்து போன்றோரது படைப்பாக்கங்கள் இவ்விதழில் வெளியாகியுள்ளன, தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஆசிரியர் பற்றி... 1928 இல் பிறந்த இவர், பள்ளிப்பருவத்திலேயே 'அறிவுச் சுடர்' எனும் கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியவர். அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட 'மாலைமணி' நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். பல்வேறு காலகட்டத்தில் நம்நாடு, விடுதலை, முரசொலி உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையில் பணியாற்றியவர். பல்வேறு சிறப்புப் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு கவிதைத் துறைக்கான டி.லிட் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. 'தமிழ்ச் சொல் கேளிர்', 'இலக்கிய முழக்கம்', உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சந்தா மற்றும் முகவரி : தனி இதழ் - 7.00 µÃ¡ண்டுக் கட்டணம் - 100.00 மீண்டும் கவிக்கொண்டல் 14/3, பீட்டர் சு குடியிருப்பு, இராயப்பேட்டை, சென்னை - 14. தொ.பே - 28524052 - மு. யாழினிவசந்தி வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது. கல்வெட்டு பேசுகிறது நவீன விருட்சம் நிழல் முகம் உயிர்மை புதுவிசை கவிதாசரண் கூட்டாஞ்சோறு பன்முகம் நடவு உன்னதம் உங்கள் நூலகம் புதிய புத்தகம் பேசுது கலை காலம் தாய்மண் புதுகைத் தென்றல் சமரசம் நம் உரத்த சிந்தனை திரை கதை சொல்லி புதிய பார்வை தீராநதி காலச்சுவடு படப்பெட்டி ஆயுத எழுத்து விழிப்புணர்வு வடக்கு வாசல் இனிய ஹைக்கூ உழைப்பவர் ஆயுதம் தை , மண்மொழி தச்சன் அதிர்வு , குழலோசை தமிழ் நேயம் யாதும் ஊரே மது மலர் தலித்முரசு
|
|