அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முத்துமகரந்தன் - கவிதைத்திருவிழா 7

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   08 , 2006  01:57:21 IST

மனைவி

கொஞ்சம் பேர் சந்தித்தார்கள்
ஏதேதோ பேசினார்கள்
பூக்களையும் கனிகளையும் புறக்கணித்து
மரத்தைத் தடவிப் பார்த்தார்கள்
ஆசிரியைக் கூட்டி வந்து
அறுத்துப் பார்த்தார்கள்
பக்கத்துத் தோட்டக்காரனிடம்
விசாரித்துப் பார்த்தார்கள்
திருப்தியானதும் சிலுவையை
நேர்த்தியாய்ச் செய்தார்கள்
நுப்றைய பேர் முன்னிலையில்
புத்தாடையும் புதுச் சரிப்புமாய்
என்னை அறைந்தார்கள்
வலிக்கவில்லை
ரத்தம் வரவில்லை
காலமெல்லாம் சுமந்து திரிகிறது
என் சிலுவை

ஜெபிக்கிறவனுக்கான சிலுவை

உனக்காக மட்டுமல்ல
நீ மண்டியிடும் போது
எனக்காகவும் ஜெபி
லஷ்மிக்காய் காத்திருக்கிற
கணங்கள் யாவும்
நீர் மேல் நடக்கிற
நிமிடங்களாய்
நம்புதலற்று நகர
நீர் தவறி நீருக்குள்
நான் மூழ்குமுன்
ஏன் ல‰மி வரணுமாய்
உரக்க ஜெபி
முடிந்து
ரா போஞனத்திற்கு
நீ தாமதமாவெயெனத் தெரிந்து
உனக்கான ரசத்தையும்
ரொட்டியையும்
ஈ விழாதவாறு மூடி
தனியே எடுத்து வைக்கிறேன்
என் சாமானியனே!

- முத்துமகரந்தன்

கவிஞர் முத்துமகரந்தன், தென்காசியில் மனைவி, மகளுடன் வசிக்கிறார். "கவிதை மூலம் ஒன்றைத் தேடுவதோ, கண்டடைவதோ சாத்தியமில்லை. அது ஒரு அனுபவம். மேலும் வாழத்தூண்டும். அனுபவிக்கத் தூண்டும். ஊச்சி" என்று கவிதையைப் பற்றி கருத்து வைத்திருக்கிறார். கலாப்ரியா, விக்ரமாதித்யன் ஆகியோரிடம் ஈடுபாடு கொண்ட முத்துமகரந்தன் கவிதைகள் கலாப்ரியாவின் கவியுலகத் தொடர்ச்சியைக் கொண்டவை. 'பெருவியாதிக்காரனின் கடவுள்கள்" என்பது இவரது முதல் தொகுதி. அவரது இயற்பெயர் எஸ்.பாலசுப்ரமணியன். எண்பதுகளின் பிற்பகுதியிலிருந்து சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார். புதிய தலைமுறைக் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.

தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.

கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...

கவிஞர் சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
மதியழகன் சுப்பையா
ரவிசுப்ரமணியன்
அழகுநிலா
அரிக்கண்ணன்
அய்யப்ப மாதவன்
அன்பாதவன்
ஜே.கே.73


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...