???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து! 0 ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு 0 புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் 0 பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 0 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி 0 தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி 0 கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு 0 மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] 0 மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் 0 தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் 0 தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் 0 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அந்த நாள் ஊஞ்சல் 6 - யாழ் சுதாகர்

Posted : சனிக்கிழமை,   மே   27 , 2006  18:21:14 IST

திரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்' ஆடவிருக்கிறது.

1955 ஆம் ஆண்டு என நினைக்கிறேன்.

ஜி.ராமனாதனின் இசையில் 'அம்பிகாபதி' படத்தின் பாடல் ஒலிப் பதிவு தேனாம்பேட்டையில் அமைந்துள்ள ரேவதி ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருக்கிறது. [சிவாஜி-பி.பானுமதி நடித்த படம்]

அந்த ஒலிப் பதிவுக் கூடம் மிகவும் வசதி படைத்த கூடம் அல்ல.

சாதாரண ஒரு தகரக் கொட்டகை.

பாடகர், பாடகியர் தனியாக நின்று பாடக் கூடிய கண்னாடிக் கூண்டு வசதி எதுவும் அந்தக் காலத்தில் இல்லை.

தரையில் மணல் பரப்பி அதன் மீது அமர்ந்து கொண்டு தான் பாட வேண்டும்.

ஒலி வாங்கி எனப்படும் 'மைக்' பாடகர், பாடகி அமர்ந்திருக்கும் இடத்துக்கு மேலே அதாவது அவர்களின் தலைக்கு மேலே கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும்.

அந்த மைக் மிக பாரமாக இருக்கும்.

அதாவது இரும்புக் குñடைப் போல கனமாக இருக்கும்.

அந்த மணலின் மேல் கம்பீரமாக அமர்ந்து கொண்டு ஜி.ராமனாதனின் மெட்டை கவனமாக உள்வாங்கிக் கொண்டு பாடல் வரிகளோடு இரண்டறக் கலந்து உணர்ச்சிப் பிரவாகத்துடன் அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றார் டி.எம்.எஸ்.

அப்போது யாருமே எதிர்பாராத விதமாக அந்த அசம்பாவிதம் நிகழ்கிறது.

டி.எம்.எஸ்ஸின் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த அந்த மைக் அறுந்து நேராக டி.எம் எஸ்ஸின் தலையை குறி பார்த்து விழுகிறது.

பாடும் போது அந்த கதா பாத்திரமாகவே தம்மை மாற்றிக் கொண்டு அதாவது நடித்துக் கொண்டே பாடுவது டி.எம்.எஸ்ஸின் இயல்பு.

கைகளை நளினமாக அங்கும் இங்கும் ஆட்டுவார்.

தலையை பக்க வாட்டிலும் முன்னும் பின்னுமாக ஸ்டைலாக அசைப்பார்.

அப்படி அவர் தலையை ஸ்டைலாக பின்னுக்கு இழுத்தபடி பாடிய அந்த மின்னல் நேரத்தில் மைக் கீழே வந்ததால் அவர் தலை தப்பியது.

அறுந்த மைக்கானது சம்மணமாக உட்கார்ந்திருந்த டி.எம்.எஸ்ஸின் கால்களுக்கும் உடலுக்கும் இடையில் போய் விழுந்தது.

ஸ்டூடியோவில் இதைப் பார்த்த வாத்தியக் கலைஞர்கள் அனைவருமே சில வினாடிகள் பிரமை பிடித்தவர்கள் போல நின்றார்கள்.

ஜி.ராமனாதன் பயந்தே போய் விட்டார்.

'இவன் இன்னும் பல்லாண்டுகள் உயிரோடு இருந்து காலா காலத்துக்கும் அழியாத பாடல்களால் தமிழன்னையின் காதுகளை குளிர வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது இறைவன் சித்தம் போலும் அது தான் அது தான் அடியேனுக்கு அவன் மறு வாழ்வு தந்திருக்கின்றான்'
என்கிறார் ஏழிசை அரசர்.

[ஊஞ்சல் இன்னும் ஆடும்]

யாழ் சுதாகர்


அற்புதமான பழைய திரைப்பட பாடல்களுக்கு இடையே யாழ்சுதாகரின் குரலை சென்னை 'சூரியன் எப்.எம்மில் ' நீங்கள் கேட்கலாம்.

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் ,யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர்.

'தேவி' ,'சாவி' ,'பொம்மை' ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய யாழ்சுதாகர் பிரபல பெண்கள் மாத இதழான 'மங்கை'யில் ஆறு ஆண்டுகள் (1993 - 1998) பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார்.

'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' (1986) ,'புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ்சுதாகர் பதிøகள்' ஆகிய புத்தகங்களை யாழ் சுதாகர் எழுதியுள்ளார்.

யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளை...அபூர்வமான ப¨Æய பாடல்களுடன்...கீழ் வரும் இணைய தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.
yazhkavi.blogspot.com

யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சல்' வாரந்தோறும் வெள்ளியன்று வெளியாகும்.

அந்த நாள் ஊஞ்சல் பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Article 1
Article 2
Article 3
Article 4
Article 5


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...