???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து! 0 ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு 0 புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் 0 பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 0 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி 0 தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி 0 கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு 0 மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] 0 மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் 0 தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் 0 தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் 0 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அந்த நாள் ஊஞ்சல் 5 -யாழ் சுதாகர்

Posted : வெள்ளிக்கிழமை,   மே   19 , 2006  18:37:02 IST

திரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்' ஆடவிருக்கிறது.

'பாகப் பிரிவினை' படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு 'ஏழிசை அரசர்' டி.எம்.எஸ் அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

விழாவுக்கு வந்த டி.எம்.எஸ்ஸை அன்புடன் வரவேற்ற சரவணா பிலிம்ஸ் அதிபர் வேலுமணி விழாவின் துவக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

டி.எம்.எஸ் கடவுள் வாழ்த்துப் பாடியதும் விழா துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 'பாகப் பிரிவினை' படதில் நடித்த நட்சத்திரங்களுக்கும், அந்தப் படத்தோடு சம்பத்தப்பட்ட கலைஞர்களுக்கும் வெற்றிக் கேடயங்களை பரிசளித்தனர்.

அந்தப் படத்தில் மிகவும் ஹிட்டான நான்கு பாடல்களை தாம் பாடியிருப்பதால் தம்மையும் அழைத்து வெற்றிக் கேடயம் வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கடைசிவரை டி.எம்.எஸ் காத்திருந்தார்.

ஆனால் நடிகர் நடிகைகள் துவங்கி இசையமைப்பாளர் வரைக்கும் எல்லோருமே மேடைக்கு அழைக்கப்பட்டனர். வெற்றி கேடயங்களைப் பெற்றுச் சென்றனர்.

ஆனால் டி.எம்.எஸ் மட்டும் அழைக்கப்படவே இல்லை.

இந்த சம்பவம் டி.எம்.எஸ்ஸை மிகவும் ஏமாற்றமடையச் செய்ததோடு வருந்தவும் வைத்தது.

விழா நிறைவடைந்ததும் டி.எம்.எஸ்ஸை 'ஜன கண மண' பாடும்படி வேண்டுகோள் விடுத்தார்கள்.

தமது வருத்தத்தை வெளியே காட்டாமல் அதையும் பாடி முடித்து விட்டு மனச் சுமையுடன் வீடு திரும்பினார் டி.எம்.எஸ்.

வீட்டுக்குத் திரும்பிய பிறகும் இந்த சம்பவம் டி.எம்.எஸ்ஸை உறுத்திக் கொண்டே இருந்தது.

ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு சுதேச மித்திரன் ஆசிரியரை தொலை பேசியில் தொடர்பு கொண்டார் டி.எம்.எஸ்.

நடந்த சம்பவத்தை அவரிடம் பகிர்ந்து கொண்ட டி.எம்.எஸ்....தமது உள்ளத்து உணர்வுகளை ஒரு பேட்டியாகத் தர விரும்புவதாகக் கூறினார்.

'ஏன் இந்த ஓர வஞ்சனை?' என்ற தலைப்பில் சுடச் சுட அந்தப் பேட்டி சுதேச மித்திரனில் பிரசுரமானது.

அந்தப் பேட்டியில் டி.எம்.எஸ் இவ்வாறு கூறியிருந்தார்.

" சென்ற வாரம் 'பாகப் பிரிவினை' படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு எனக்கும் அழைப்பு வந்தது.

விழாவில் நானும் கலந்து கொண்டு ஆரம்பத்தில் கடவுள் வணக்கமும் , நிறைவாக தேசிய கீதமும் பாடினேன்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடிகர் நடிகையர்களுக்கும்,இசையமைப்பாளருக்கும்,பாடலாசிரியருக்கும் வெற்றிக் கேடயங்களை வழங்கினார்கள்.

இத்தனை பேரையும் மறக்காமல் பரிசு கொடுத்தவர்கள் ஏன் பாடகர்களை மட்டும் மறந்து போனார்கள்?

இந்தப் படத்திலே நான் நான்கு பாடல்களைப் பாடியிருக்கிறேன்.
மறுபடியும் அந்தப் படத்தை திரையிடும் போது நான் பாடிய பாடல்களை நீக்கி விட்டு அந்தப் படத்தை திரையிட்டுப் பாருங்கள்.அப்போதும் படம் வெற்றிகரமாக ஓடினால் நான் பாடுவதையே நிறுத்திக் கொள்ளுகிறேன்.'
என்றபடி டி.எம்.எஸ்ஸின் அந்த ஆவேசமான பேட்டி தொடர்ந்தது.

திரை உலகில் டி.எம்.எஸ்ஸின் பேட்டி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அன்றைய பாடகர்,பாடகிகள் எல்லாரும் அந்தப் பேட்டியைப் பார்த்து மனம் குளிர்ந்தார்கள்.

டி.எம்.எஸ்ஸிடம் தொலை பேசியிலும் நேரிலும் தமது நன்றியை தெரிவித்தார்கள்.

இந்தப் பேட்டியைப் படித்துப் பார்த்த தயாரிப்பாளர் வேலுமணி அவர்கள் , அடுத்த நாளே அவசர அவசரமாக டி.எம்.எஸ்ஸை வந்து பார்த்தார். சமாதானம் சொன்னார்.

சுதேச மித்திரன் பேட்டியில் உங்கள் உள்ளத்து உணர்வுகளையும், வருத்ததையும் புரிந்து கொண்டேன்.

பாடுவதை நிறுத்தி விடுவேன் என்றெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகளை நீங்கள் சொல்லக் கூடாது.

உங்கள் கோபம் நியாயமானது தான்.

நான் இப்போது 'பாவ மன்னிப்பு' என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கின்றேன்.

நிச்சயம் அந்தப் படம் பெரும் வெற்றியைப் பெறும்.
அந்தப் படத்தின் நூறாவது நாள் விழா நடைபெறும் போது நிச்சயமாக பாடகர்களுக்கும் வெற்றிக் கேடயம் வழங்குவேன் ' என்று உறுதிபடக் கூறினார்.

சொன்னது போலவே செய்தும் காட்டினார் வேலுமணி.

சென்னை அசோகா ஹோட்டலில் நடந்த பாவ மன்னிப்பு நூறாவது நாள் விழாவில் படத்திற்காக உழைத்த அத்தனை பாடகர்களும் பாடகிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.

அன்று முதல் மற்ற பட நிறுவனங்களும் பாடகர்களுக்கும் வெüறிக் கேடயம் வழங்கத் துவங்கின.

பாடகர்களுக்காக முதன் முதலில் உரிமைப் போர் நடத்தி அதில் வெற்றியும் கண்ட உத்தமர் என்று டி.எம்.எஸ்ஸை பாடகர் உலகமே பாராட்டியது.

[ஊஞ்சல் இன்னும் ஆடும்]

யாழ் சுதாகர்


அற்புதமான பழைய திரைப்பட பாடல்களுக்கு இடையே யாழ்சுதாகரின் குரலை சென்னை 'சூரியன் எப்.எம்மில் ' நீங்கள் கேட்கலாம்.

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் ,யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர்.

'தேவி' ,'சாவி' ,'பொம்மை' ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய யாழ்சுதாகர் பிரபல பெண்கள் மாத இதழான 'மங்கை'யில் ஆறு ஆண்டுகள் (1993 - 1998) பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார்.

'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' (1986) ,'புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ்சுதாகர் பதிøகள்' ஆகிய புத்தகங்களை யாழ் சுதாகர் எழுதியுள்ளார்.

யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளை...அபூர்வமான ப¨Æய பாடல்களுடன்...கீழ் வரும் இணைய தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.
yazhkavi.blogspot.com

யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சல்' வாரந்தோறும் வெள்ளியன்று வெளியாகும்.

அந்த நாள் ஊஞ்சல் பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Article 1
Article 2
Article 3
Article 4


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...