???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயலலிதா ஆட்சியில்தான் கல்வி புரட்சி ஏற்பட்டது: முதல்வர் பெருமிதம் 0 இந்தியாவில் 1% பேரிடம் 73% சொத்துக்கள்: ஆக்ஸ்போம் ஆய்வு முடிவு 0 பிப் 1. முதல் திமுக மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ஸ்டாலின் 0 உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டி: விஜயகாந்த் 0 ரஜினி, கமல் வருகையால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை: தினகரன் 0 நடிகர் கமல் ரசிகர்களுடன் ஆலோசனை! 0 பேருந்து கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் 0 ஆளும் கட்சி மீது விமர்சனம்: விஜயகாந்த் மேடை மீது கல் வீச்சு! 0 பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது: எம்.ஆர். விஜய பாஸ்கர் 0 காரைக்காலில் சுஸ்மா சுவராஜை பெண்கள் முற்றுகை! 0 ஆண்டாளின் புகழ்பாட தாம் ஆசைப்பட்டது தவறா? வைரமுத்து உருக்கம் 0 உயரம் குறித்து தொலைக்காட்சியில் கேலி: சூர்யா ரசிகர்கள் போராட்டம் 0 திராவிட இயக்கத்தை தூசிகூட தொட முடியாது: ஸ்டாலின் 0 பாரதிராஜாவை கைது செய்யவேண்டும்: இந்து அமைப்பு புகார்! 0 பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அந்த நாள் ஊஞ்சல் 4- யாழ் சுதாகர்

Posted : வியாழக்கிழமை,   மே   11 , 2006  11:45:52 IST

திரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்' ஆடவிருக்கிறது.

'மென்மைக்குரல் மன்னர்'பி.பி.சீனிவாஸ் அவர்கள் முதன்முதலாகப்
பாடிய படம் 'மிஸ்டர் சம்பத்' என்ற தெலுங்குப் படம்.

பிரபல வீணை வித்வான் ஈமனி சங்கர சாஸ்திரி¸Ç¢ý இசை வார்ப்பில் உருவான படம்.

தமிழில் இவர் பாடிய முதல் பாடல் எது தெரியுமா? 'பிரேம பாசம்'படத்தில் இடம் பெற்ற 'அவனல்லால் புவியில் ஓர் அணுவும் அசையாது '.

தமிழில் இவருக்கு முதல் திருப்பு முனை கொடுத்தபடம் 'அடுத்த
வீட்டுப் பெண்'.

ஆதி நாராயண ராவின் அமுத இசையில் மலர்ந்த இந்தப் படத்தில் இவர்
பாடிய 'கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே' ,வாடாத புஷ்பமே'ஆகிய பாடல்கள் தமிழ் ரசிக நெஞ்சங்களில் பெரும் வரவேற்பைப்
பெற்றுத் தந்தன.

'கவியரசர்'கண்ணதாசன் எழுதி இவர் பாடிய பாடல்கள்
±ø்லாமே இவருக்குப் பிடித்த பாடல்கள் தான் என்றாலும் அவற்றில் இவர்
அடிக் கோடிட்டுக் காட்டி ஆனந்தப் படும் பாடல்கள் இரண்டு.

1.காலங்களில் அவள் வசந்தம். [பாவ மன்னிப்பு ]

2. மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்பட வேñடும் [கொடி மலர்]

பி.பி.எஸ் அவர்களை ஒரு முறை யான் சந்தித்துப் பேசிக்
கொண்டிருந்த போது அவரது இசை வாழ்வில் அவரை மிகவும் நெகிழ வைத்த ஒரு சம்பவம் பற்றிக் கூறும்படி வேண்டினேன்.

அவர் சொன்னார்.

கேரÇ¡வைச் சேர்ந்தவன் அந்த இளைஞன்.

அவன் தொட்டதெல்லாம் தோல்வியில் முடிந்தன.

ஏமாற்றங்களும் ,அவமானங்களுமே அவன் வாழ்க்கையில் அன்றாட வரவுகள்.

கனவுகள் எல்லாமே கானø் நீராக ,வாழ்க்கையின் நிஜங்களும்,யதார்த்தமும் அவனைப் பயமுறுத்த தற்கொலை என்ற
விபரீத முடிவுக்கு அவன் தள்ளப்படுகிறான்.

அந்த சூழ்நிலையில் எதிர் பாராத விதÁ¡க வானொலியில் ஒலித்துக்
கொண்டிருக்கும் அந்தப்பாடலை அவன் கேட்க நேரிடுகிÈது.

அந்தப் பாடல் அவன் உள்ளத்தில் ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது.

மூன்று நிமிடõ மட்டுமே ஒலித்த அந்தப்பாடல் மின்னல் வேகòதில் அவனுக்குள் ஏராளமான மாறுதல்களை நிகழ்த்துகிறது!

குழப்பங்களைக் குலைத்து ,கலக்கங்களைக் கலைத்து, தெளிந்த
நீரோடை போல அவன் மனதை மாற்றுகிறது.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் சாதனைகளின்
சாலைகள் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற தெளிவும். வாழ்ந்தே
ஆக வேண்டும் என்ற வைராìகியமும் அவனுள் உருவாகிறது.

'ஆயிஷா' என்ற மலையாளப் படத்தில் யான் பாடிய....'யாத்ரக்காரா போகுக போகுக'என்ற பாடல் தான் அந்த இ¨Çஞனுக்கு மறு வாழ்வு கொடுத்த பாடல் எýறு அறிந்தேன்.

அந்தப் பாடலில் வரும்..'ஒரு வழி அடைக்கும் போது...ஒன்பது
வழி திறக்கும்'என்ற வரி தான் திக்கற்றுப் போய் நின்ற தன் கைப்பிடித்து
வந்து நம்பிக்கையின்கரை சேர்த்தது என்று அந்த இளைஞன் நன்றிக்கடிதத்தில் எழுதியதை நான் படித்த போது......

இசைப் பணி செய்யுமாறு என்னைஅனுப்பி வைò¾
இறைவனுக்கு கண்கள் பனிக்க நன்றி
சொன்னேன் என்றார் பி.பி.எஸ் உணர்வு பொங்க.

[ஊஞ்சல் இன்னும் ஆடும்]


யாழ் சுதாகர்


அற்புதமான பழைய திரைப்பட பாடல்களுக்கு இடையே யாழ்சுதாகரின் குரலை சென்னை 'சூரியன் எப்.எம்மில் ' நீங்கள் கேட்கலாம்.

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் ,யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர்.

'தேவி' ,'சாவி' ,'பொம்மை' ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய யாழ்சுதாகர் பிரபல பெண்கள் மாத இதழான 'மங்கை'யில் ஆறு ஆண்டுகள் (1993 - 1998) பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார்.

'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' (1986) ,'புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ்சுதாகர் பதிøகள்' ஆகிய புத்தகங்களை யாழ் சுதாகர் எழுதியுள்ளார்.

யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளை...அபூர்வமான ப¨Æய பாடல்களுடன்...கீழ் வரும் இணைய தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.
yazhkavi.blogspot.com

யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சல்' வாரந்தோறும் வெள்ளியன்று வெளியாகும்.

அந்த நாள் ஊஞ்சல் பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Article 1
Article 2
Article 3


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...