???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி: குலாம் நபி ஆசாத் 0 உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் ஒப்புதல் 0 கோடநாடு கொள்ளைகளின் பின்னணி என்ன? : ஸ்டாலின் கேள்வி 0 தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது 0 மோடி தலைமையிலான பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: மு. க. ஸ்டாலின் 0 கோடநாடு கொள்ளை சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: முதல்வர் மறுப்பு 0 பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா 0 உலக முதலீட்டாளர் மாநாடு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 0 அயனாவரம் சிறுமி வழக்கில் 16 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து 0 பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம் 0 தமிழகத்துக்கு நன்மை செய்பவருடனே கூட்டணி: எடப்பாடி பழனிசாமி 0 அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை அறிக்கை தாக்கல் 0 பேட்ட படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு ரஜினிகாந்த் நன்றி 0 ஆட்சிக்கு வந்தவுடன் ஜெ.மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம்: மு.க.ஸ்டாலின் 0 அயோத்தி வழக்கு விசாரணை தள்ளிப்போகிறது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அந்தநாள் ஊஞ்சல் 3- யாழ்சுதாகர்

Posted : திங்கட்கிழமை,   மே   01 , 2006  14:55:49 IST

திரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்' ஆடவிருக்கிறது.

‘திரை இசைத்திலகம்’ கே.வி.மகாதேவன் முதன்முதலாக இசையமைத்த படம் ச.து.சு.யோகியின் ஆனந்தன்.

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி முதன் முதலாகப் பாடிய தமிழ்ப் படம் ‘விதியின் விளையாட்டு’.

[ டி.சலபதிராவ் இசையமைத்த படம் இது.]

‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் முதன்முதலாக(எம்.ஜி.ஆர்
நடித்த)’ஜெனோவா’ படத்தில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்தார்.

டி.கே.ராமமூர்த்தி, எம்.எஸ்.வி.யிடம் இருந்து பிரிந்த பிறகு
முதன்முதலாக இசையமைத்த படம் ‘சாது மிரண்டால்.’

அதில் இடம் பெற்ற முதல் பாடல் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா பாடிய ‘அன்பின் திருவே’.

டி.எம்.எஸ்.ஸின் இசைத்தட்டை முதன்முதலாக ஒலிபரப்பிய பெருமை
இலங்கை வானொலியைச் சேரும்.

டி.எம்.எஸ். முதன்முதலாக எம்.ஜி.ஆருக்காக குரல் கொடுத்த பாடல்...

‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.’
(படம் - ‘மலைக்கள்ளன்’,
இசை -எஸ்.எம்.சுப்பையா நாயுடு)

டி.எம்.எஸ்....சிவாஜிக்காக முதன்முதலாக குரல்கொடுத்த பாடல்,
‘ஏறாத மலைதனிலே’
(படம் -தூக்குத் தூக்கி,
இசை – ஜி.ராமநாதன்)

பி.சுசீலா, பெண்டியாலாவின் இசையில் ‘பெற்ற தாய்’ படத்தில் பாடிய
‘ஏன் அழைத்தாய்
என்னை ஏன் அழைத்தாய்’
என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரை இசைக்கு அறிமுகமானார்.

டி.எம்.எஸ்.ஸும் , பி.சுசீலாவும் முதன்முதலாக ஏவிஎம்.மின் ‘செல்லப்பிள்ளை’ (1952) படத்தில் இணைந்து பாடினார்கள்
(இசை – ற்.சுதர்சனம்).

சீர்காழி கோவிந்தராஜனும்,பி.சுசீலாவும் இணைந்து பாடிய முதல் பாடல், ‘பட்டணம்தான் போகலாமடி’ (படம் - எங்க வீட்டு மகாலட்சுமி).

பி.சுசீலாவும், ஜேசுதாஸும் முதன்முதலாக ‘டாக்டர்’ என்ற மலையாளப்
படத்தில் இணைந்து பாடினார்கள்.

பி.சுசீலாவும், எல்.ஆர்.ஈஸ்வரியும் முதன் முதலில் இணைந்து
பாடிய பாடல் ‘மலருக்குத் தென்றல் பகையானால்’
(படம் - எங்க வீட்டுப் பிள்ளை’).

பி.பி.ஸ்ரீநிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் ‘சிந்தனை
என் செல்வமே’(படம் ஜாதகம்).

வாணி ஜெயராம் முதன்முதலாக ‘குட்டி’ என்ற இந்திப் படத்தில்
பாடினார் (இசை – வசந்த் தேசாய்)

வாணி ஜெயராம் முதன்முதலாகப்பாடிய தமிழப் பாடல்,‘பொன்மயமான
எதிர்காலம்’ (படம்-தாயும் சேயும், இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு).

பி.லீலா பாடிய முதல்பாடல்‘ஜெகம் புகம் புண்ணிய கதை’ (படம் - ‘லவகுசா’).

ஜெயச்சந்திரன் பாடிய முதல் தமிழ்ப் பாடல் ‘தங்கச் சிமிழ் போல்’(படம் -
‘மணிப்பயல்’)

எஸ்.பி.சைலஜாவின் முதல் பாடல் சோலைக்குயிலே
(படம் - ‘பொண்ணு ஊருக்குப்புதுசு’,
இசை -இளையராஜா,
பாடல் -எம்.ஜி.வல்லபன்).

கவியரசர் கண்ணதாசன் அமரரானார் என்ற சேதி வந்ததும் அவருக்குஅஞ்சலி
செலுத்தும் நிகழ்ச்சியை தயாரித்து உலகிலேயே முதலில் வழங்கிய அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா (சிலோன் ரேடியோவில்)

மருதகாசியின் முதல் பாடல் ‘அடிச்சது யோகம்’ (படம்-‘மாயாவதி’).

தஞ்சை ராமைய்யாதாஸின் முதல் பாடல் ‘வச்சேனாவச்சதுதான்புள்ளி’
(படம் - ‘1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி)’.

கண்ணதாசனின் முதல் பாடல், கலங்காதிரு மனமே’(படம் - ‘கன்னியின் காதலி)’.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் முதலில் பாடல் எழுதிய படம் -‘படித்த
பெண்’ (1954).

வாலி எழுதிய முதல் பாடல் - நிலவும் தரையும் நீயம்மா’
(படம் - ‘அழகர் மலைக் கள்வன்’)

எஸ்.பி.பி.பாடி முதலில் வெளிவந்த தமிழ்ப்பாடல்
‘மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’
(படம் -பால்குடம்)

[ஊஞ்சல் இன்னும் ஆடும்]


யாழ் சுதாகர்


அற்புதமான பழைய திரைப்பட பாடல்களுக்கு இடையே யாழ்சுதாகரின் குரலை சென்னை 'சூரியன் எப்.எம்மில் ' நீங்கள் கேட்கலாம்.

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் ,யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர்.

'தேவி' ,'சாவி' ,'பொம்மை' ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய யாழ்சுதாகர் பிரபல பெண்கள் மாத இதழான 'மங்கை'யில் ஆறு ஆண்டுகள் (1993 - 1998) பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார்.

'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' (1986) ,'புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ்சுதாகர் பதிøகள்' ஆகிய புத்தகங்களை யாழ் சுதாகர் எழுதியுள்ளார்.

யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளை...அபூர்வமான ப¨Æய பாடல்களுடன்...கீழ் வரும் இணைய தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.
yazhkavi.blogspot.com

யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சல்' வாரந்தோறும் வெள்ளியன்று வெளியாகும்.

அந்த நாள் ஊஞ்சல் பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

Article 1
Article 2


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...