![]() |
கவிதைத்திருவிழா 4 -அரிக்கண்ணன்Posted : செவ்வாய்க்கிழமை, மே 02 , 2006 01:46:46 IST
ஒரு பைத்தியக்காரனைப் போல்
நான் இன்னும் உன்னைப் பற்றியே கனவு காண்கிறேன். நீயோ பிள்ளை பெற்று பள்ளிக்கு அனுப்பிவிட்டு பகலில் உறங்கப் பழகிவிட்டாய். ************************** என் செல்லமாவிற்கு... கவிதைகளில் அகப்படாத அழகுகள் மலிந்து கிடக்கிறது அவளிடம். சதா மனதை நச்சரித்து தூக்கி வைத்துக் கொள்ளச் சொல்கிறாள்.போகுமிடமெல்லாம் கூட வருகிறாள் ஏதேனும் தொணதொணத்துக்கொண்டே. முத்தமிடுகிறாள். அழுத்தமாக. தலைகோதி கலைத்து விடுகிறாள். ¿றுமணங்களை அணிந்து கொள்கிறது மனம் பூக்களைப் போல. என் எல்லாக் கவி¨¾களும் தோற்றுப் போகின்றன அவளிடம்! ************************** என்னைப் பிரிந்து உன்னாலும் போக முடிகிறது. என்னாலும் இருக்க முடிகிறது. ************************** டிபன் பாக்ஸில் ஒற்றை முடி ஊடலின் கவிதையாக! ************************** ஒரு சொம்பு நீர் இறுதியாய் உன் பிரேத முகச்சிரிப்பில் மௌனமாய் அழுது பத்தோடு நானும் ஒரு சொம்பு நீர் ஊற்றி சுடுகாடு வரை நடந்திருந்தால் எல்லாம் முறையாக முடிந்து போயிருக்கும். ஆச்சியை எனக்குக் கட்டிவைக்கும் உன் கேலிகளும், போன பொங்கல்வரை திருநீறு பூசித் தந்த காசும், தொலைந்து போகாமல் உன் அரவணைப்பில் வைகையில் கள்ளழகரைப் பார்த்த சித்திரையும், வரும் விழியில் வாங்கித்தந்த பலூன்களும், பீடி வாங்கத் தந்த ஐந்து பைசாக்களும் எல்லாம் ஒரு சொம்பு நீரில் சரிக்கட்டப்பட்டிருக்கும். நெய்ப்பந்தம் கொளுத்த நானில்லாமல் தாத்தா உனக்கு அப்படியென்ன அவசரம். தந்தி படித்து நான் திரும்பி வருவதற்குள் மண் தின்னும் அவசரம். ************************** ஒழுங்கான வளைவுகளோடு தெருநெடுக நீர்க்கோடு தெரிகிறது. நின்றுமோள முடியாமல் வண்டியிழுத்துப் போகின்றதொரு மாடு. ************************** என் வீட்டில் வளர்கின்ற னாயின் வால் நிமிர்ந்துதான் இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற மனிதர்களுக்குச் சொல்ல என்ன இருகின்றது. -அரிக்கண்ணன் இயந்திர வாழ்வில் மிச்சமிருப்பது நாஸ்டாலஜிக்கான கவிதைகள் மட்டும் தான். பூஞ்சை மனதுடன் தொலைந்து போன நேற்றை வார்த்தைகளுக்குள் பத்திரப்படுத்தும் முயற்சியில் அரிக்கண்ணன். மத்திய பிரதேசத்தில் வங்கி பணி புரியும் அரிக்கண்ணனுக்கு சொந்த ஊர் மதுரை.அரிதாக எழுதும் அரிகண்ணனின் கவிதைகள் காலச்சுவடு உட்பட பல இதழ்களில் வெளிவந்திருக்கிறது. தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன. கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும். பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க... கவிஞர் சுகுமாரன் கீதாஞ்சலி பிரியதர்ஷனி தேன்மொழி.எஸ் தேவதேவன் ம.திலகபாமா கோ.வசந்தகுமாரன் மதியழகன் சுப்பையா முத்துமகரந்தன் ரவிசுப்ரமணியன் அழகுநிலா அய்யப்ப மாதவன் அன்பாதவன் ஜே.கே.73
|
|