???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி: குலாம் நபி ஆசாத் 0 உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் ஒப்புதல் 0 கோடநாடு கொள்ளைகளின் பின்னணி என்ன? : ஸ்டாலின் கேள்வி 0 தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது 0 மோடி தலைமையிலான பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: மு. க. ஸ்டாலின் 0 கோடநாடு கொள்ளை சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: முதல்வர் மறுப்பு 0 பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா 0 உலக முதலீட்டாளர் மாநாடு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 0 அயனாவரம் சிறுமி வழக்கில் 16 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து 0 பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம் 0 தமிழகத்துக்கு நன்மை செய்பவருடனே கூட்டணி: எடப்பாடி பழனிசாமி 0 அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை அறிக்கை தாக்கல் 0 பேட்ட படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு ரஜினிகாந்த் நன்றி 0 ஆட்சிக்கு வந்தவுடன் ஜெ.மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம்: மு.க.ஸ்டாலின் 0 அயோத்தி வழக்கு விசாரணை தள்ளிப்போகிறது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அந்த நாள் ஊஞ்சல் 2- யாழ் சுதாகர்

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   29 , 2006  15:42:59 IST

திரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்' ஆடவிருக்கிறது.

'வானம்பாடி' படத்தில்...ஒரு பாடல்...

'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
அவன் காதலித்தே வேதனையில்
சாக வேண்டும்...'

என்று கவியரசர் கண்ணதாசன் எழுத...'திரை இசைத் திலகம் 'கே.வி.ம¸¡தேவன் இசையமைக்கிறார்.

அந்தப் பாடலை...டி.எம்.எஸ் அவர்களிடம்...கே.வி.மகாதேவனின் உதவியாளர் பாடிக் காட்டுகிறார்.

பாடலைக் கேட்டுப் பார்த்த டி.எம்.எஸ்...இந்தப் பாடலின் பல்லவியில் கடவுளை சாக வேண்டும் என்று வரும் வரியை நான் எப்படிப் பாடுவது?

மனிதனுக்குத் தான் மரணம் உண்டு...கடவுள் சாகா வரம் பெற்றவர்...

எனவே அவரை சாக வேண்டும் என்று வரும் வரிகளை...கடவுளை சதா புகழ்ந்து பாடிய என் வாயினாலேயே பாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்.

டி.எம்.எஸ் இப்படிச் சொல்லும் போது...கவியரசர் கண்ணதாசனும் அருகில் இருந்தார்.

'கடவுளை சாடுவதற்காக அப்படி எழுதவில்லை.
கதாபாத்திரம்...காதல் தோல்வியில் அப்படி பாடுவதாக...கதையின் போக்கை அனுசரித்து அப்படி எழுதினேன்.'.என்று..கவிஞர், டி.எம்.எஸ்ஸிடம் சமாதானம் சொன்னார்.

உடனே டி.எம்.எஸ்..கதாநாயகன்...முட்டாள் தனமாக காதலித்து..பின்பு அது..கை கூடாமல் போகும் போது..அந்தக் குற்றத்தை...அறிவார்ந்த பொருளான கடவுள் மீது சாட்டுவதற்கு எந்த நியாயமும் இல்லை.

எனவே...கடவுள்..சாக வேண்டும் என்ற வரியை மட்டும் நான் பாட மாட்டேன்...என்றார் மீண்டும் பிடிவாதமாக.

கண்ணதாசன் மட்டுமல்ல..கே.வி.மகா தேவனும்...எவ்வளவோ சமாதானம் செய்தும்...டி.எம்.எஸ் தனது முடிவில் தீர்மானமாக இருந்தார்.

உடனே கண்ணதாசன்...'அவ்வளவு தானே முருக பக்தரே...சாக வேண்டும் என்ற வரியை...வாட வேñடும் என்று மாற்றி எழுதித் தருகிறேன்...' என்று சொல்லி...அதை வாங்கி திருத்தம் செய்து கொடுத்தார்.

கவியரசராக அவர் இருந்த போதிலும்...சக கலைஞனின் உணர்வுகளை மதிக்க வேñடும் என்ற உணர்வுடன் கண்ணதாசன் அன்று பெருந்தன்மையாக நடந்து கொண்ட விதம்...இன்றும் என்னை வியக்க வைக்கிறது...வணங்க வைக்கிறது என்கிறார் டி.எம்.எஸ்.

'வானம்பாடி' படத்தில்..டி.எம்.எஸ்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க தனது பாடல் வரியில் கண்ணதாசன் திருத்தம் செய்ததைப் போல...

'சங்கே முழங்கு' படப் பாடலிலும் எம்.ஜி ஆரின் திருப்திக்காக ஒரு திருத்தம் செய்து கொடுத்தார்.

'நாலு பேருக்கு நன்றி...
அந்த நாலு பேருக்கு நன்றி...

தாயில்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கிச் செல்லும்

அந்த நாலு பேருக்கு நன்றி..'

என்று கவியரசர் எழுதிய பாடலில் வரும்
கடைசி சரணத்தில்..

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்.

போகும் போது வார்த்தை இல்லை...
போகு முன்னே சொல்லி வைப்போம்...'

என்று முடித்திருந்தார்.

'போகும் முன்னே சொல்லி வைப்போம்..'என்ற வார்த்தையை கொஞ்சம் Á¡ற்றலாமே... என்று

எம்.ஜி.ஆர்..அபிப்பிராயப்பட்டார்.
உடனே கவியரசர்..அந்த சரணத்தை..சிறு மாற்றங்களுடன்...

''வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்..

வார்த்தை இன்றிப் போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்...'

என்று எழுதிக் கொடுக்க...
மக்கள் திலகத்தின் முகத்தில்...பரம திருப்தி.

தனது பாடல்களில்...
வலிமையான எதிர் மறை வார்த்தைகள்..
அல்லது அறச் சொற்கள் வருவதை
எம்.ஜி.ஆர் தவிர்ப்பது வழக்கம் என்பதற்கு
இந்த சம்பவமும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

[ஊஞ்சல் இன்னும் ஆடும்]


யாழ் சுதாகர்

அற்புதமான பழைய திரைப்பட பாடல்களுக்கு இடையே யாழ்சுதாகரின் குரலை சென்னை 'சூரியன் எப்.எம்மில் ' நீங்கள் கேட்கலாம்.

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் ,யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர்.

'தேவி' ,'சாவி' ,'பொம்மை' ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய யாழ்சுதாகர் பிரபல பெண்கள் மாத இதழான 'மங்கை'யில் ஆறு ஆண்டுகள் (1993 - 1998) பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார்.

'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' (1986) ,'புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ்சுதாகர் பதிøகள்' ஆகிய புத்தகங்களை யாழ் சுதாகர் எழுதியுள்ளார்.

யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளை...அபூர்வமான ப¨Æய பாடல்களுடன்...கீழ் வரும் இணைய தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.
yazhkavi.blogspot.com

யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சல்' வாரந்தோறும் வெள்ளியன்று வெளியாகும்.

அந்த நாள் ஊஞ்சல் பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


Article 1


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...