அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழ் நேயம் - சிற்றிதழ் அறிமுகம் 34

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   25 , 2006  05:59:02 IST

தமிழ் இன்று பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. தமிழின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சில சிற்றிதழ்கள் களமாக அமைந்திருக்கின்றன. அவ்வகையில் தமிழ் குறித்த காத்திரமான எழுத்துக்களைக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது தமிழ் நேயம் சிற்றிதழ். இதன் ஆசிரியர் கோவை ஞானி 1998, செப்டம்ரில் தமிழ் நேயம் முதல் இதழ் வெளிவந்தது. 32 பக்க அளவில் மாதம் ஓர் இதழ் என்ற முறையில் 99 ஜீலை வரை 12 இதழ்கள் வெளிவந்தன. இடையில் சில மாதங்கள் இதழ் வெளிவரவில்லை. 2000க்குப் பிறகு தமிழ் நேயம் 64, 80, 92 என்ற முறையில் ஓராண்டுக்கு குறைந்தது, 5 இதழ்கள் என்ற முறையில் இதுவரை 5 ஆண்டுகளாக 24 இதழ்களை பலவகையான நெருக்கடிகள் குறித்து ஆய்வதும் தமிழுணர்வாள÷களின் கருத்துக்களைத் திரட்டுவதும் தமிழ் நேயத்தின் முதன்மையான நோக்கம், என்கிறார் ஆசிரியர் ஞானி.

தமிழ் நேயத்தில் தொடர்ந்து இடம்பெறும் எழுத்தாளர்கள் என பலரைக் குறிப்பிட முடியும். அறிஞர் மா, இலெ.தங்கப்பா, பேரா.க.ப.அறவாணன், அருள்திரு.சுதாகர், மரு.வே.ஜீவானந்தம், பூ.அர.குப்புசாமி, ஜே.மஞ்சுளாதேவி, பேரா.அரங்கசாமி, அகமுடைநம்பி, அறிவுடைநம்பி, முதலியவர்கள் குறிப்À¢டத்தக்கவர்கள். பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம், நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்று இன்று வளர்ந்து வருகின்ற வளமான பார்வைகளை தமிழ் நேயம் வெளிப்படுத்துகிறது.

2000ஆம் ஆண்டில் தமிழ் நேயம் சில தனி வெளியீடுகளைக் கொண்டு வந்தது. தமிழ் அறிவியக்கத்தின் சார்பில் கோவையிலும் சுற்று வட்டாரத்திலும் உள்ள தமிழாசிரியர்கள், சிந்தனையாளர்கள் எழுத்தாளர்களை கோவை கல்வியகத்தில் கூட்டி வைத்துச் சில சந்திப்புகளை நடத்தி அவற்றைப் பதிவு செய்து மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் 'வாழ்வியல் வழி வள்ளுவர்' 'எங்கள் வாழ்வும் எங்கள் தமிழும்' எனும் நூல்களை வெளியிட்டிருக்கிறது தமிழ்நேயம். காவிரிச் சிக்கல் மட்டுமல்லாமல் முல்லைப் பெரியாறு, கண்ணகி கோவில், கர்நாடகத்தில் தமிழர் நிலை முதலியவை பற்றி சிந்தித்து வரும் அறிஞர் கரூர் பூ.அர.குப்புசாமி அவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து 'தண்ணீரும் கண்ணீரும்' என்ற சிறு நூலையும் வெளியிட்டிருக்கிறது. 99-இல் நவீன தமிழ் இலக்கியத்தில் வெளிவந்த சில புதிய படைப்புகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து 'புதிய தமிழலக்கியம்' என்ற சிறு நூலையும் நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடòதக்க படைப்பாளராக உருவாகி வரும் எம்.ஜி.சுரே‰ அவர்களின் அட்லாண்டிஸ் மனிதரும் மற்றும் சிலரும் என்ற நாவலைப் பற்றி வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு சிறு நூலையும் வெளியிட்டிருக்கிறது.

தரமான மதிப்புரைகளை தவறாமல் வெளியிடுகிறது. ¸விதை நூல்களை அறிமுகப்படுத்தும் முறையில் குறிப்பிட்ட கவிதை நூலிலிருந்து மிகச் சிறந்த இரண்டு (அ) மூன்று கவிதைகளை தமிழ் நேயம் தெÇ¢வு செய்து வெளியிட்டு வருகிறது. அறிஞர் பெருஞ்சித்தரனார், தமிழன்பன், ம.இல.தங்கப்பா, சாலை இளந்திரையன் முதலியவர்களின் சில சிறந்த கவிதைகளை தொகுத்து முன்பின் பக்க அட்டைகளில் வெளியிடுகிறது.

இலண்டன் தமிழ் எழுத்தாளர் திருமதி. ᧺சுவரி பாலசுப்ரமணியம் அவர்களின் திட்டப்படி தமிழ்நேயம் கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டிகளை நடத்தி நூல்கள் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. காயங்கள், உடலே சவப்பெட்டியாக, காற்றாய் புயலாய், பிளாஸ்டிக் மனிதர்கள், உழவுமாடுகள், புதிய ஏவாள், கனாக்காலம், புதியகாளி ஆகியவை இதுவரை வெளிவந்த தொகுப்புகளாகும். இத்தொகுப்புகளில் ஒரு காதல் கதை கூட இல்லை என்பது சிறப்பாகும். இத்தகை போட்டிகளின் விளைவாக சுமார் 10க்கும் மேற்பட்ட சிறந்த பெண் எழுத்தாளர்கள் தமிழுக்கும் கிடைத்துள்ளனர். தமிழின் ஆக்கம் - தடையும் விடையும் எனும் தலைப்பில் 40க்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் எழுதிய கட்டுரைகள் மூன்று தனி வெளியீடுகளாக சமீபத்தில் வெளிவந்துள்ளன.

க.ப.அறவாணனின் ஆய்வுக் குறித்து சில திறனாய்வு கட்டுரைகளை தமிழ் நேயம் தொடர்ந்து வெளியிட்டுள்ளது. உலகமயமாதலால் தமிழகத்தின் வேளாண்மை, கல்வி முதலிய களங்களில் நேர்ந்து வரும் தீமைகள் குறித்து மரு.ஜீவானந்தம் தொடர்ந்து எழுதுகிறார். இந்திய வரலாற்று சிக்கல் குறித்து அறிஞர் பலர் எழுதிய ஆய்வு நூல்களின் தொகுப்பு என்ற முறையில் சுதாகர் சில விரிவானக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அம்பேத்கரின் 'புத்தரும் அவர் தம்மமும்' என்ற நூலின் சிறந்த கருத்துக்களை தொகுத்து இவர் எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்கது.

பகவத்கீதையை வரலாறு, மெய்யில் நோக்கில் ஆய்வு செய்து பேரா.அரங்கசாமி தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.
ஜெ.கிரு‰ணமூர்த்தியையும் திருவள்ளுவரையும் இணைத்துப் பார்க்கும் முறையில் அகமுடைநம்பி எழுதிய கட்டுரையை எதிர்க்கும் முறையிலும் ஆதரிக்கும் முறையிலும் சில கட்டுரைகள் தமிழ் நேயத்தில் வெளிவந்தன. குவாண்டம் கோட்பாடு குறித்து ஜீவஒளி எழுதிய கட்டுரை ஒன்றும் தமிழ் நேயத்தில் வெளிவந்தது. கிறித்துவத்தில் புதிய போக்காக வெளிப்பட்டுள்ள விடுதலை இறையில் குறித்தும் அறிஞர் எரோனிமுஸ் முதலியவர்களின் கட்டுரைகளும் தமிழ் நேயத்தில் இடம் பெற்றன. தமிழிலக்கிய ஆய்வில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் அணுகுமுறைகள் குறித்தும் பேரா.க.ப.அறவாணன் அவர்களின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு, கட்டுரைகள் தமிழ் நேயத்தில் இடம் பெற்றன. ஈழத் தமிழ் எழுத்தாளர் எஸ்.பொவின் வரலாற்றில் வாழ்தல் நூல் குறித்து சுதாகரும், உலக அளவில் பேசப் படுகின்ற 'தாவின்சி கோடு' என்ற ஆங்கில நாவல் குறித்து அருள்திரு அந்தோணிசாமியும் திறனாய்வுக் கட்டுரைகள் இதில் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு இதழிலும் 'தமிழ் நேயம் - அகமும் புறமும்' என்ற பகுதி தவறாமல் இடம் பெற்றது. தமிழ் மக்களுக்கு உலகப் பார்வை தேவை என்ற முறையில் உலகளவில் அமெரிக்காவின் ஆக்கம் குறித்தும் தேசிய இன விடுதலைக்கான போராட்டங்கள் உலக அளவில் நடைபெறுவது குறித்தும் இந்திய அரசியல் அரங்கில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் திறனாய்வுக் குறிப்புகள் இப்பகுதியில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

"தமிழுக்காக, தமிழ் மக்களின் மேன்மைக்காக தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கும் மக்கள் ஒரு பெரும் படை போலத் திரண்டாலொழிய தமிழ் மக்களுக்கு இனி வாழ்வில்லை. இது பற்றிய கவலையை நண்பர்களோடு பகிர்ந்துக் கொள்ளும் பணியையே தமிழ் நேயம் இது வரை செய்தது. சில மாதங்களாக தமிழ் நேயம் இதழ் வெளிவரவில்லை. காரணம் பொருள் வசதியின்மை. மீண்டும் தமிழ்நேயம் எப்பொழுதாவது வெளிவரலாம்" என்கிறார், ஆசிரியர் ஞானி. இது போன்ற சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவது காலத்தின் தேவையாகும்.

ஆசிரியர் பற்றி....

தமிழிலக்கிய உலகம் நன்கறிந்த ஆய்வாளர் கோவை ஞானி. இவர் தள்போது கோவையில் வசித்து வருகிறார். "மார்க்சியத்திற்கு அழிவில்லை உள்ளிட்ட பல முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார்.

முகவரி

ஆசிரியர்
தமிழ் நேயம்
24, வி.ஆர்.வி.நகர்,
ஞானாம்பிகை ஆலை (அïசல்)
கோயம்புத்தூர் - 641 029.
¦¾¡லைபேசி : 0422 2648119

- மு. யாழினிவசந்தி

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.


கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து
விழிப்புணர்வு
வடக்கு வாசல்
இனிய ஹைக்கூ
உழைப்பவர் ஆயுதம்
தை , மண்மொழி
தச்சன்
அதிர்வு , குழலோசை


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...