???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து! 0 ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு 0 புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் 0 பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 0 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி 0 தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி 0 கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு 0 மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] 0 மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் 0 தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் 0 தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் 0 துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு 0 தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அந்த நாள் ஊஞ்சல் 1 - யாழ் சுதாகர்

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   29 , 2006  15:43:24 IST

திரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்' ஆடவிருக்கிறது.

நடிகர் திலகத்திற்காக முதன் முதலாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்த போது ...

எனக்காக நீங்கள் குரலை மாற்றிப் பாட வேண்டாம்,உங்கள் பாணியிலேயே பாடுங்கள் நடிக்கும் போது உங்கள் குரலுக்கு இசைவாக எனது நடிப்பை அமைத்துக்கொள்கிறேன் என்றாராம் சிவாஜி.

சிவாஜி சொன்னபடி எஸ்.பி.பி. தமக்கே இயல்பான 'நளினம் கொஞ்சும்' நந்தவனக் குரலில் அந்தப் பாடலை மிக சுதந்திர உணர்வோடு பாடினார்.

பாடல் பிரமாதமாக பதிவானது.

ஆனால் பாடலைக் கேட்ட போது, டி.எம்.எஸ்ஸின் குரலைப் போல இந்த புதிய குரல் அதுவும் மென்மையான குரல் நடிகர் திலகத்தின் நடிப்போடு இசையுமா? என்று சிலர் சந்தேகப் படவும் செய்தனர்.

ஆனால் அந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்ட போது எஸ்.பி.பியின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும் பாவனைகளையும் அசைவுகளையும் குழையக் குழைய வெளிப்படுத்தினார் நடிகர் திலகம்.

சந்தேகப் பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள்.

பிரமிப்பின் மறு பெயர் தானே நடிகர் திலகம் !

அந்தப் பாடல் ...சுமதி என் சுந்தரி படத்தில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் மலர்ந்த' பொட்டு வைத்த முகமோ'.

காலப் புயலில் கலைந்து போகாத பாட்டு தீபங்களில் இன்றும் இளமை ஊஞ்சலாடும் இந்தப் பாடலும் பாடல் காட்சியும் ஒரு வசந்த வரலாறு.
இது போன்ற மற்றுமொரு சம்பவம்

நடிகர் திலகம் திரையில் பாடுவதாக வரும் அந்தப் பாடலை வழக்கம் போல
டி.எம் எஸ்ஸைப் பாட வைக்காமல் வேறொரு பாடகரைப் பாட வைத்தார் மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி.
மிகவும் உணர்வு பூர்வமான ஒரு சோகப்பாடல் அது.

ஆனாலும் அந்தப் பாடகர் மிகவும் சிறப்பாகப் பாடியதால் மெல்லிசை
மன்னருக்கு திருப்தி.
சிவாஜியும் அந்த குரலை ஏற்றுக்கொன்டார்.சிவாஜி வாயசைத்து நடிக்க அந்தப் பாடல் காட்சி படமானது.ஆனால் அந்தப்
பாடல் காட்சியை திரையில் போட்டுப் பார்த்த போது பாடகரின்
குரல்,சிவாஜியின் நடிப்பு எல்லாமே நன்றாக இருந்தும் ,ஏதோ
ஒன்று குறைவது போலத் தோன்றியÐ ;மெல்லிசை
மன்னருக்கும் அந்தக் காட்சி போட்டுக் காட்டப்பட்டது.ஆமாம் சிவாஜியின்
செழுமையான நடிப்போடு அந்தக்குரல் ஒட்டவில்லை என்றார்
எம்.எஸ்.வி.
பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோமே இனி
என்ன செய்வது என்று எல்லோருக்குமே குழப்பம்.அந்தக் காலத்தில்
இன்றைக்கு இருப்பதைப் போன்ற அதி நவீனதொழில் நுட்ப
வசதிகள் இல்லை.எனினும்,எம்.எஸ்.வி. யோசித்துப்பார்த்தார்.
திடீரென ஒரு எண்ணம் அவர் மூளையில் மின்னலிட்டது.உடனே
டி.எம்.எஸ்.அவர்களை ஸ்டூடியோவுக்குஅழைத்து வந்தார்.அந்தப்
பாடலுக்கு சிவாஜி நடித்தகாட்சியை திரையில்ஓட விடும்படி சொன்னார்.
அதில் சிவாஜியின் வாய் அசைவை பார்த்து...அதற்கு ஏற்ற படி அந்தப்
பாடலைப் பாடும்படி டி.எம்.எஸ்ஸிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மிகவும் சவாலான ஒரு வேலை தான்.ஆனால் டி.எம்.எஸ்,சிவாஜியின்
வாய் அசைவையும்' முக பாவங்களையும் நன்கு கவனித்துக் கொண்டே அந்தப்பாடலைப் பாடிமுடித்தார்.மெல்லிசை
மன்னர் ஓடி வந்து டி.எம்.எஸ்ஸை கை கொடுத்துப்பாராட்டினார்.
இந்தப்பாடல் எம்.எஸ்.வி,டி.எம்.எஸ் இருவருக்கும் ஒரு
சவாலான அனுபவம் மட்டுமல்ல. வித்தியாசமான அனுபவமும்
கூட.
வழக்கமாக டி.எம்.எஸ் பாடிய பாடலைக் கேட்டு அந்தப் பாடலுக்கு ஏற்ப சிவாஜி வாய் அசைப்பார்.ஆனால் இந்தப் பாடலைப்பொறுத்தவரை சிவாஜியின் வாய் அசைவை பார்த்துஅதற்கு
ஏற்ப டி.எம்.எஸ் பாடினார்.டிஜிட்டல்,ஸ்டீரியோ, நவீன டிராக் சிஸ்டம் போன்ற அதி நவீனவசதிகள் இல்லாத எழுபதுகளில் கருவிகளை
நம்பாமல் திறமையையும் தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பி இந்த
சாதனையை படைத்த இருவரும் தமிழ்த் திரை இசையின் அதிசÂங்கள்!
இந்த இசை அதிசயங்களின் கூட்டணியில் பதிவானஅந்த பாடல் எது?
என்று கேட்கின்றீர்களா? 'கௌரவம்'படத்தில்
இடம் பெற்ற 'பாலூட்டி வளர்த்த கிளி'என்ற பாடல் தான் அது.

[ஊஞ்சல் இன்னும் ஆடும்]


யாழ் சுதாகர்

அற்புதமான பழைய திரைப்பட பாடல்களுக்கு இடையே யாழ்சுதாகரின் குரலை சென்னை 'சூரியன் எப்.எம்மில் ' நீங்கள் கேட்கலாம்.

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் ,யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர்.

'தேவி' ,'சாவி' ,'பொம்மை' ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய யாழ்சுதாகர் பிரபல பெண்கள் மாத இதழான 'மங்கை'யில் ஆறு ஆண்டுகள் (1993 - 1998) பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார்.

'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' (1986) ,'புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ்சுதாகர் பதிøகள்' ஆகிய புத்தகங்களை யாழ் சுதாகர் எழுதியுள்ளார்.

யாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளை...அபூர்வமான ப¨Æய பாடல்களுடன்...கீழ் வரும் இணைய தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.
yazhkavi.blogspot.com

யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சல்' வாரந்தோறும் வெள்ளியன்று வெளியாகும்.

அந்த நாள் ஊஞ்சல் பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...