![]() |
கவிதைத் திருவிழா 2 - அன்பாதவன்Posted : ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 16 , 2006 05:23:50 IST
இரண்டாம் தாய்
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில் தொலைந்துவிட்ட என்னை நதியில் திளைத்துக் குளிர்ந்த கூழாங்கல்லாய் தண்ணென்ற பொழுதுகள் உன்னோடு கழிபவை உரையாடலில்லா நாட்களோ மணல் சுடும் வெறுமை பரிமாறலில் ஊறுகிற உற்சாக ஊற்று சட்டென வடியும் மவுனம்கவிந்த பொழுதுகள் மனக்குகையில் வரைந்த என் ஓவியங்களுக்கு தேர்ந்த ரசிப்பை வழங்குமுன் விழிகள் பாறையாயிருந்தேன்; சிற்பமானேனுன் செதுக்கலில் கைம்மாறுக்கு வாய்ப்பில்லா கடன் பெற்ற நெஞ்சம் உன் விசுவரூபத்தின் முன் வாமனனாய் தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில் தொலைந்துவிட்ட என்னை. ************************** ஹைபுன் ஏமாற்றங்களிலான சரளை நிறைந்த என் பூமியில் மாற்றத்தை விதைத்த முதல் மழைத்துளி நீ பெருமழையாய்ப் பெய்த ப்ரியத்தில் பூமி நனைந்தது தன்னை இழந்தது;கவலை மறந்தது இதமான உரையாடலில் பதமானது பயிர் வளர்க்க ஊடுபயிராய் நுழைந்து பெரும்பயிராய் வளர்ந்த கதிரசைவில் தீண்டும் மென்தென்றல் பரிவு சுமந்த பனித்துளி வார்த்தைகள் உள்நுழையும்போதெல்லாம் உளக்குளிர்ச்சி என்னுள் பசுமை வளர்த்த இயற்கையின் ரூபமே வாடத வாழ்வை வரமாய்த் தா! ஈர இதழ்கள் உறிஞ்சிய சூரியன் சிவந்த ரோஜா. ******************************* அரூபங்களின் தரிசனம் இயலாதென்னால் அரூபமாய் உணர்வதை படைப்பாக்கும் உயர்கலை உன்னிலிருந்து எழும் தீயில் ஓவியம் தீட்ட கிடைக்குமோ தூரிகை மூச்சுக்காற்றின் ஆரோகண அவரோகணங்களை கொஞ்சல் சிணுங்கல்களை கொலுசொலியின் லயங்களை இசைக்கோர்வை அமைக்க இல்லையடியெனக்கு இசைஞானம் விரல்கோத கலைந்தாடும் கூந்தலிழை நடனத்துக்கு படிமங்கள் தேடுகிறேன் முத்தம் பதித்த இதழ்களின் ஈரவடிவம் எதன் குறியீடென்று ஆராய்கிறேன் தனிமைகளில் மடிசாய்ந்து கிறங்கிய விழிகளைப் படம்பிடிக்க ஒளிக்கருவி உருவாகவேண்டுமினித்தான் இதழ் கவ்வும் தருணங்களில் கசியும் கேவல் விம்மல்களுக்கு இசையாகும் வாய்ப்புமுண்டு சாத்தியம்தான் இவையனைத்துங்கூட விடைபெறும்போது வெளியிடும் ஆழ்ந்த பெருமூச்சு சுமந்த கனத்த மவுனத்தை மொழிபெயர்க்க திரிந்தலைகிறேன் உலக மொழிகளின் காடுகளில் - அன்பாதவன் வேலையின் நிமித்தம் மும்பையில் குடியிருக்கும் அன்பாதவனின் சொந்த ஊர் விழுப்புரம். கவிதை, சிறுகதை ,கட்டுரை என்று பரந்துபட்டு இயங்கும் அன்பாதவனின் எழுத்Ðìகளை சிறுபத்திரிக்கைகளில் அடிக்கடி பார்க்க முடிகிறது. தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன. கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும். பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க... கவிஞர் சுகுமாரன் கீதாஞ்சலி பிரியதர்ஷனி தேன்மொழி.எஸ் தேவதேவன் ம.திலகபாமா கோ.வசந்தகுமாரன் மதியழகன் சுப்பையா முத்துமகரந்தன் ரவிசுப்ரமணியன் அழகுநிலா அரிக்கண்ணன் அய்யப்ப மாதவன் ஜே.கே.73
|
|