![]() |
தை , மண்மொழி - சிற்றிதழ்கள் அறிமுகம் 31Posted : புதன்கிழமை, ஏப்ரல் 05 , 2006 02:02:56 IST
இரண்டு புதிய இதழ்கள்:
தை : "தமிழ் எங்கள் இளமைக்குப் பால் என்றான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். அந்தத் தமிழ்ப் பால் பொங்கத் தொடங்குகிறது தை.... எல்லா ஒடுக்கு முறைகளையும் மூடுதிரைகளையும் கடந்து ஒடுக்கப்பட்ட சாதியின் குரலும் ஒடுக்கப்பட்ட பெண்ணியக் குரலும் இன்றைய கவிதையின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது. மார்க்சியம், பெரியாரியம், தலித்தினம், பெண்ணியம், சூழலியம், தமிழ்த் தேசியம் சார்ந்து எழும் இன்றைய காலத்தின் குரலைப் பதிவு செய்வதற்காகவே வருகிறது தை. தமிழில் தனித்த அடையாளங்களோடு எழுத வருகிற கவிஞர்களை உலகத் தமிழர்களுக்கெல்லாம் தை அறிமுகப்படுத்தும். மறைக்கப்படும் இலக்கிய வரலாற்றை நேர்ப்படுத்தும் இலக்கிய நேர்மையோடு ஒரு முழுமையான கவிதை இதழாகத் தொடரும்... புதிதாக எழுத வருகிறவர்களுக்கும் புரிதலோடு எழுதுகிறவர்களுக்கும் இடையில் ஒரு தமிழ்ப்பாலமாய் தை இருக்கும். வாருங்கள் கை கோர்த்து நடப்போம்". என்கிற அறைகூவலுடன் ஜனவரி 2006இல் வெளிவந்திருக்கிறது 'தை' - கவிதைக் காலாண்டிதழ். இதன் ஆசிரியர், கவிஞர் அறிவுமதி. இளம் கவிஞர்கள், மூத்த கவிஞர்கள், திரைப்பட கவிஞர்கள், வெளிநாட்டு கவிஞர்கள் என அனைத்து தரப்பினரின் கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. கபிலன், கோசின்ரா, இந்திரன், அறிவுமதி, அழகியபெரியவன், மீனாட்சி, அழகுநிலா, மு.மேத்தா, அப்துல் ரகுமான், சிற்பி, பச்சியப்பன், தமிழச்சி, இளம்பிறை, இன்குலாப், வே.ராமசாமி, பாரிகபிலன் உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கவிஞர்கள் பலரது கவிதைகளும் வெளிநாட்டுத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளும் நாடு வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. மலேசியக் கவிஞர்கள் பா.இராமு, அருண், பூங்குழலி வீரன், சிங்கப்பூர் கவிஞர்கள் பிச்சினிக்காடு இளங்கோ க.து.மு.இக்பால், இளங்கோவன், கடைக்கவிஞர்கள் ஜி.பி.இராசரத்தினம், ஜம்பண்ணா, அமரச்சிந்தா, ஈழத்துக் கவிஞர்கள் சித்தாந்தன், சு.வில்வரத்தினம், நளாயினி தாம¨Ãச்செல்வன், கருணாகரன், செல்வம், துபாய் கவிஞர்கள் கவிமதி, இசாக் என உலகத் தமிழ்க கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கி தை வெளிவந்திருக்கிறது. ஒரு சில மொழிபெயர்ப்புக் கவிதைகளும் வெளிவந்துள்ளன. வழ வழ தாளில் அழகிய கருப்பு வெள்ளை படங்களுடன் கவிஞர்களின் புகைப்படத்துடனும் குறிப்புகளுடனும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது 'தை'யின் சிறப்பம்சமாகும் எனலாம். நன்கொடை - ரூ.20.00. முகவரி : அறிவுமதி, 189 அபிபுல்லா சாலை, தியாகராய நகர், சென்னை - 17. போன் - 9444280864 மண் மொழி : தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியில் உட்கட்சி சனநாயகம், கருத்துச் சுதந்திரம் இல்லை, மாற்றுக்¸ருத்துக்கள் ஒடுக்கப்படுகிýறன என்று சொல்லி அக்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் இராஜேந்திரசோழனை அமைப்பாளராகக் கொண்டு 'தமிழ்த்தேச மார்க்சியக் கட்சி' என்கிற புதிய அமைப்பைத் தோற்றுவித்துள்ளனர். மார்க்சிய வழியில் தமிழ்த்தேச தன்னுரிமைக்குப் போராடுவதையே நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பு 'மண், மொழி' என்கிற மாத இதழைத் தொடங்கியிருக்கிறது. முதல் இதழ் ஜனவரி - பிப் 06இல் வெளிவந்துள்ளது. ஆசிரியர், இராஜேந்திர சோழன். ஆசிரியர் குழு : காஞ்சி அமுதன், சக்தி சுப்பு, பொன் மாயவன் ஆகியோர். "இன்று தமிழ், தமிழக நலன் சார்ந்து குரல் கொடுக்க º¢ற்சில அமைப்புகள், கட்சிகள் இருக்கின்றன. இக்குரல்கள் அவ்வப்போது நிலவும் சூழலுக் கேற்ப எழுந்தும் தணிந்தும், வீறுபெற்றும், நீர்த்தும் ஏற்ற இரக்கங்களோடே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வமைப்புகள் அனைத்திலும் உள்ள உணர்வாளர்களை ஒன்றிணைக்கவும் உடனடியாக வென்றெடுக்கும் சாத்தியமுள்ள கோரிக்கைகளை முன்வைத்து விடாப்பிடியாகவும் தொடர்சியாகவும் அதற்காக - போராடவுமான நிலைத்த ஒர் இயக்கத்தை உருவாக்க முடியாதா என்னும் அவாவில் அதற்கான ஒரு ஒருங்கிணைப்பாளனாகச் செயல்படமுடியாதா எனும் முயற்சியில் தோற்றம் பெறுவதே இந்த இதழ்" என இதழ் தோற்றத்துக்கான காரணத்தை விளக்குகிறது முதல் இதழ் தலையங்கம். இதில் காத்திரமான கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றன. இராசேந்திர சோழனின், 'மண் உரிமைகாக்க மலைவாழ் பழங்குடி மக்கள் போர்', கணியனின், 'கட்சத்தீவு பிரச்சினை கோர வேண்டியது குத்தகையல்ல, பெற வேண்டியது மொத்தத் தீவையும்', சாங்கியனின், 'பீகார் : மாறும் அதிகாரம் மாறாத வன்முறை', பரிமுதல்வனின், 'தனியார் கல்வி நிறுவன இட ஒதுக்கீடு திருத்தச் சட்டம்', காஞ்சி அமுதனின், 'பாலாற்றைப் பாதுகாப்போம்' போன்ற முக்கியமான கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. "இன்று தமிழகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளாக மண் பிரச்சனை, ஆற்று நீர் பிரச்சினை, இயற்கைக்கனி வளங்கள் பற்றிய பிரச்சனை, மொழிப்பிரச்சனை, கலை, பண்பாட்டுப் பிரச்சனை என எவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்காக பல்வேறு சக்திகள் குரல் கொடுத்தும் வருகின்றன. இச்சக்திகளை அடையாளம் காண்பதும் இவற்றை ஒன்றுக் கொன்று தொடர்பு படுத்துவதும் முடிந்த அளவில் இவற்றிற்கிடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதும் இவற்றை ஒர் அணியில் திரட்ட முயல்வதுமே இதழின் நோக்கம்" என்கிறார், ஆசிரியர் முதல் இதழ் தலையங்கத்தில். சந்தா : ஆண்டுக்கட்டணம் - ரூ.70.00 தனி இதழ் - ரூ. 5.00 மூன்றாண்டுக்கட்டணம் - ரூ.200.00 வாழ்நாள் கட்டணம் - ரூ. 1000.00 முகவரி : மண் மொழி (மாத இதழ்), காந்தி நகர், மயிலம் - 604 304, திண்டிவன வட்டம், Å¢ழுப்புரம் மாவட்டம். தொலைபேசி : 04147 - 241256 செல் : 9443212761 - மு. யாழினிவசந்தி வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது. கல்வெட்டு பேசுகிறது நவீன விருட்சம் நிழல் முகம் உயிர்மை புதுவிசை கவிதாசரண் கூட்டாஞ்சோறு பன்முகம் நடவு உன்னதம் உங்கள் நூலகம் புதிய புத்தகம் பேசுது கலை காலம் தாய்மண் புதுகைத் தென்றல் சமரசம் நம் உரத்த சிந்தனை திரை கதை சொல்லி புதிய பார்வை தீராநதி காலச்சுவடு படப்பெட்டி ஆயுத எழுத்து விழிப்புணர்வு வடக்கு வாசல் இனிய ஹைக்கூ உழைப்பவர் ஆயுதம்
|
|