???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி 0 மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 0 ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி 0 காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 0 இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு! 0 பொன்னமராவதி வாட்ஸ் அப் விவகாரம்: ஒருவர் கைது 0 வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்: தேர்தல் ஆணையம் 0 பொன்பரப்பி வன்முறை: திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 விங் கமாண்டர் அபிநந்தன் காஷ்மீரிலிருந்து இடமாற்றம்! 0 4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனுதாக்கல் இன்று தொடக்கம்! 0 இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமமுக 0 திருச்சி துறையூர் கோயில் திருவிழாவில் சிக்கி 7 பேர் பலி! 0 காயமடைந்தவர்களின் உயிரிழப்பால் பலி எண்ணிக்கை உயர்வு 0 இலங்கை குண்டுவெடிப்பு: தமிழக தலைவர்கள் கண்டனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புள்ளியில்லாத எழுத்து - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   21 , 2006  13:42:46 IST

எல்லாம் மாறக்கூடியது. எதுவும் நிலைத்து இருப்பது இல்லை. ஆனால் இல்லாமல் போவதில்லை. ஒன்று போனால் இன்னொன்று வந்துவிடும். அதுதான் மாறாத விதி. ஏன் அது? புத்தகங்கள் இனி கிடையாது: காகிதம் இல்லாத ஒரு காலத்திற்கும் போகிறோம். இனிவருங்காலம் என்பது காகிதம் இல்லாத காலம். புத்தகங்கள் இருக்கும், ஆனால் கையால் காகிதத்தில் எழுதவேண்டியது இல்லை. கம்ôயூட்டரில் அடித்து, இன்டர்நெட்டில் போட்டால் போதும். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் பார்க்கலாம், படிக்கலாம்.

புது புத்தகம் என்றுதான் இல்லை, பழைய புத்தகங்களை கõôயூட்டரில் ஏற்றிவிட்டார். இன்டர்நெட்டில் பார்த்துப் படிக்கலாம், பிரதியெடுக்கலாம். «நேகமாக வெளிநாடுகளில் படிக்கக் கூடியவர்கள், கம்ôயூட்டரில் படிக்கிறார்கள்.

«து வளர்ச்சி, தடுக்கவே முடியாத வளர்ச்சி. தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் -நூற்றாண்டுகள் பனைவோலையில் எழுதிவந்தார்கள். பனைவோலையை பாதுகாப்பதே சிரமம். பூச்சி அâத்துவிடும். மஞ்சள் பூசி, மருந்து தூவி பாதுகாத்தார்கள். பனைவோலையில் எழுதுவதற்கென்றே சில குடும்பங்கள் இருந்தன. அவர்கள் வேலை ஏடு கொடுத்தால் எழுதி கொடுப்பார்கள். கிட்டத்தட்ட புத்தகம் அச்சிட்டுக்கொடுப்பது மாதிரி. இப்படித்தான் ஏடுகள் பெருகின.

வாஸ்கோடா காமா, 1497 ஆம் ஆண்டில் போர்ச்சுகல் நாட்டில் இருந்து புதிய நாடுகளைத் தேடி கடல் வழியாகப் புறப்பட்டார். ஆப்பிரிக்காவில் உள்ள நன்நம்பிக்கை முனையைத் தொட்டுக் கொண்டு தென்இந்தியாவில் உள்ள மலபார்க்கு ஒராண்டு கழித்து அதாவது 1498 ஆம் ஆண்டில் வந்து சேர்ந்தார்.

மலபார்க்கு வாஸ்கோடா காமா வந்தது ஒரு சரித்திர நிகழ்ச்சி என்றால் திரும்பச் சென்றது மகத்தான நிகழ்ச்சி. வெடிமருந்து ராணுவ வீரர்களோடு கடற்கொள்ளையும் அடித்துக்கொண்டு வந்த வாஸ்கோடா காமா பலநாடுகளில் திரட்டிக்கொண்டு போனது பெரிய பொக்கி„ம், போர்ச்சுக்கல் மன்னர் பயணத்திற்கு செலவு செய்த தொகையை விட அறுபது மடங்கு மதிப்பு உள்ள பொருள்களை கொண்டுபோய் கொடுத்தார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு எல்லாம் செல்வம் மிகுந்த நாடுகள் - தென்கிழக்காசியாவில் இருக்கின்றன என்ற விவரம் தெரிந்தது. மிளகு, அரிசி, ²லக்காய் - போன்ற வாº¨É திரவியங்களும் அவர்களைக் கவர்ந்தன. ஊடமையாக ஈஸ்டு இஞ்சின் கம்பெனி அமைத்துக்கொண்டு அரசின் உதவியோடும், பாதுகாப்போடும் வணிகத்தில் ஈடுபட்டார்கள். அதில் முதலில் இருந்தது, வாஸ்கோடா காமா நாடான போர்ச்சுகல்.

போர்ச்சுகல் ¾£ரமான கத்தோலிக்க கிறிஸ்துவ நாடு. வியாபாரிகள் பணம் சம்பாதிக்கப் புறப்பட்டது மாதிரி - மதபிரசாரம் செய்யவும் - மதமாற்றம் செய்யவும் பல பாதிரிமார்கள் புறப்பட்டார்கள்.

கோவா - வாஸ்கோடா காமா கடற்பயணம் முடித்த நூறு ஆண்டுகளில், போர்ச்சுகல் நாட்டின் ஆளுகைக்குப் போய்விட்டது. அது வணிகம், சமயப் பிரச்சாரத்திற்கு வசதியாகி விட்டது. தென்னிந்தியா முழுவதும் போர்த்துக்கீசியர்கள் பரவிட்டார்கள். வி¡பாரத்தின் பொருட்டு பலர் போ÷த்துக்கீசிய மொழியை கற்றுக் கொண்டு மொழி பெயர்ôபாள÷களாகிவிட்டார்கள். தென்னிந்திய கடற்கரைப் பகுதிகளில் போர்த்துக்கீசிய மொழி தெரிந்தவர்கள் இருந்தார்கள்.

எதற்கு மதிப்பு இருக்கிறதோ - எது பணம் கொடுக்கிறதோ அதை செய்ய எப்போதும் ஆள்கள் முன்னே இருப்பார்கள் என்பது மனித சரித்திரத்தின் முக்கியமான பகுதியாக உள்ளது.

ஐரோப்பாவில் இருந்து சமயப்பிரச்சாரத்திற்காக வந்த பாதிரிமார்கள் - போர்த்துக்கீசிய மொழி மூலமாகவே தமிழ்மொழிக் கற்றுக் கொண்டார்கள். பாதிரி என்பதே போர்த்துக்கீசிய சொல்தான்.

ஐரோப்பாவில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டது, ஹென்றிக்கோ ஹென்றீஸ் (1520-1598) போர்த்துக்கல் நாட்டு யுதர். தன் சொத்தை எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்துவிட்டு, கிறிஸ்துவ சமயத்தைப் பரப்ப இந்தியாவிற்கு செயிýட்
சேÅ¢யருடன் வந்தார். கோவா வழியாக தமிழ் நாட்டிற்கு வந்து சேர்ந்தார். கொச்சியில் சில ஆண்டுகள் சமயப் பிரச்சாரõ செய்தார். பின்னர் தூத்துக்குடிக்கு வந்தார்.

செயிண்ட் சேவியர் (1506-1552) அறிவுறுத்தலின் பேரில் தமிழ் கற்றுக் கொண்டார். எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டார். ஹென்றிர்கோ ஹென்றீஸ் தான் தமிழ் கற்றுக் கொண்ட முதல் ஐரோப்பியர். தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் அச்சுப் புத்தகமான தம்பிரான் வணக்கத்தை கொண்டுவந்தார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ். 1578 ஆம் ஆண்டில் கோவாவிலும், கொச்சியிலும் செதுக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டு தம்பிரான் வணக்கம் அச்சிடப்பட்டது. சீனாவில் இருந்து கொண்டுவரப் பட்ட காகிதத்தில், சிவப்பு மை கொண்டு வெளியிடப்பட்டது.

தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீஸிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ பிரச்சாரபுத்தகம் கலன் போர்த்துக்கீஸிய பெயர், DCCTRINA CHRISTAM ON LinguaMalavar Tamul தம்பிரான் வணக்கம் என்பது தம்பிராண வணக்கம் - என்று உள்ளது. ஏனெனில் மெய் எழுத்துக்களின் மேல் புள்ளி கிடையாது. தம்பிரான் என்பது சுய தமிழ்ச்சொல். ஆத்மாவிற்கு இனியவன் என்பதுபொருள். இன்னொரு பொருள் தலைவன், தம்பிராட்டி தலைவதி.

தமிழ் எழுத்¾¡Çர்களின் உச்சமென கொண்டாடப்படுகிற தஞ்சை பெரிய கோவில் ராஜராஜனின் கல்வெட்டுக்களிலும் மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளி கிடையாது.

அச்சோடு எழுத்து முறையிலும் மாறுதல் வந்தது. எழுத்துகள் சீர்திருத்தம் பெற்றன. எழுத்து என்பது குறியீடுதான். அதில் மாறுதல் வருவது தவிர்க்கவே முடியாது. ஆனால் எப்போது சிலர் மாறுதல் என்பதை எதிர்த்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் காலம் அவர்களை உதாசினப் படுத்திவிடும்.

மாறுதல் என்பது மாறாத ஒரு விதி அது எல்லாமே மாறி வந்து கொண்டே இருக்கிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கிறது.


சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...


சா.கந்தசாமியின் இணையதளம் - Sakandasamy

Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13 , Article 14 ,Article 15 ,Article 16 ,Article 17,Article 18,Article 19 ,Article 20 ,Article 21 ,Article 22 ,Article 23 ,Article 24 ,Article 25,Article 26 ,Article 27,Article 28 ,Article 29,...


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...