அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விழிப்புணர்வு - சிற்றிதழ் அறிமுகம் 27

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   09 , 2006  11:40:43 IST

பொதுவாக மாணவ சமுதாயமென்றால் அரட்டை அடிப்பவர்கள் திரையரங்குகளில் நிறைபவர்கள் என்கிற எண்ணம் பொதுபுத்தியில் பதிந்துள்ளது. இவ்வெண்ணத்திற்கு மாறாக மா½வசமுதாயமும் சமூக மாற்றத்துக்கான சிந்தனையில் ஈடுபடுவதும் நிகழத்தான் செய்கிறது. சட்டக்கல்லூரி மாணவர்களிடையே இத்தன்மை கூடுதலாகவே இருக்கும்
என்பதற்குச் சான்று விழிப்புணர்வு இதழ் போன்ற பெரும் பத்திரிகை மோகத்தில் கிடக்கும் மாணவச் சமுதாயத்திடமிருந்து அதற்கு முற்றிலும் மாறான ஒரு தேர்ந்த சãக பத்திரிìகையாக விழிப்புணர்வு எனும் இருமாத இதழ்
வெÇ¢வந்து கொண்டிருக்கிறது. சென்னை ,மதுரை ,கோவை ,திருச்சி திருநெல்வேலி ஆகிய அரசு சட்டக் கல்லூரி மாணவர்களால் இவ்விதழ் நடத்தப்படுகிறது. இதன் ஆசிரியர்.கு.காமராஜ்.

"இன்றைய 21ம் நூற்றாண்டில் மாறிவரும் நவீன போட்டி நிறைந்த உலகில் சமுதாயத்தை வழி நடத்திச் செல்லும் அரசாங்கத்தின் பணிகளில் இருந்து மருத்துவம் ,சட்டம் , தொலை தொடர்பு , வணிகம் , கல்வி, சுகாதாரம் , விஞ்ஞானம் , உடல்நலம் , அரசியல் கட்சிகள் போன்ற அனைத்துத் துறைகள் பற்றியும் மக்களிடையே அறியாமை நிலவுகிறது.இதற்கு படித்த மற்றும் படிக்காத மக்கள் என யாரும் விதிவிலக்கு அல்ல....இப்படிப்பட்ட சூழ்நிலையில் சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும்
புரையோடியிருக்கும் சீர்கேட்டையும் மிகைப்படுத்துதலையும் வெளிக் கொணர்ந்து மக்களிடையே விழிப்புணர்வினை உண்டாக்கும் முயற்சியே விழிப்புணர்வு இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகளும் செய்திகளும். ஓவ்வொரு துறையைப் பற்றியும் நாம் நன்கு அறிந்து கொள்ள அத்துறையினை நன்கு அறிந்த நிபுணர்கள் எழுதும் கட்டுரைகள் செய்திகள் இதில் வெளிவரும். இது பகிர்ந்து கொள்ளும் முயற்சியே அன்றி அறிவுரை கூறும் செயல் அல்ல" என்கிற அறிவிப்புடன் முதல் இதழ் ஜனவரி 2005 இல் வெளிவந்தது.
இதுவரை (பிப்ரவரி 2006) 7 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு இதழிலும் பல துறை சார்ந்த காத்திரமான கட்டுரைகள் இடம் பெற்று வருகின்றன.

முதல் இதழில் குடியரசு தின சிறப்புக் கட்டுரையாக சுகதேவ் எழுதிய 'இந்திய
ஜனநாயகம் இன்றுவரை' எனும் கட்டுரை வெளியாகியுள்ளது. 'கொள்ளை போகும் குடிநீர்','பெருகிவரும் மினரல் வாட்டர் கலாச்சாரம்' எனும் ராஜசேகரன் கட்டுரை கவர்ஸ்டோரியாக ஹேபடைடிஸ் பி வைரஸ் மரண அழைப்பு கட்டுரை போன்ற முக்கியமான கட்டுரைகள் முதல் இதழில் வெளிவந்துள்ளன. 'நம்பித்தான் ஆக வேண்டும்' என்கிற
தலைப்பில் பல செய்திகள் இவ்விதழில் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக ஒன்று : இந்த இதழை நீங்கள் படித்து முடித்திருக்கும்
இந்நேரத்தில் போபாலில் எட்டு குழந்தைகள் ஏதாவதொரு உடல் ஊனத்துடன்
பிறந்துவிட்டன. வளமையான விளை நிலங்களில் ஏழு ஏக்கர் தரிசாகி விட்டது.சத்தியமங்கலம் காடுகளில் 27டன் மூங்கில்கள் வெட்டப்பட்டு விட்டன. பூச்சிக்கொல்லி மருந்தை முகத்திற்கு பாதுகாப்பு கவசம் இல்லாமல் வயலில் தெளித்ததால் மூன்று விவசாயக் கூலிகள் இறந்து போயிருப்பார்கள்.

சுகதேவ் ,சா.பீட்டர் அல்போன்ஸ் , த.ராமலிங்கம் , நவீனன், கே.ஆர்.சேதுராமன், இரா.தேசிகன், இறையன்பு , தென்கச்சி கோ.சுவாமிநாதன் ,மரியசார்லஸ் , பாமரன் போன்றோரது கட்டுரைகள் இவ்விதழில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. 6வது
இதழிலிருந்து இலக்கியமும் சேர்ந்திருக்கின்றன. நூல்மதிப்புரை பகுதியும்
சிறுகதையும் வெளியாகி வருகிறது. ஆர்.நல்லக்கண்ணு ,பிரபஞ்சன் போன்றோரது பங்களிப்பும் இவ்விதழில் இடம் பெற்று வருகின்றன.

ஆசிரியர் பற்றி :

ஆசிரியர் கு.காமராஜ் மதுரை சட்டக்கல்லுரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.கட்டுரையாளர் , பெரியாரின் கொள்கையில் பிடிப்புள்ளவர். "உலகமயமாக்கலுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இதழ் விழிப்புணர்வு. உலக மயமாக்கலின் எதிர் விளைவுகளை
தொடர்ந்து பேசுவதுடன் இலக்கியத்திற்கும் தற்போது முக்கியத்துவம் கொடுக்கத்
தொடங்கி இருக்கிறோம். விரைவில் மாத இதழாகக் கொண்டு வரவும் உலகளாவிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார் இவர்.

உணவுப் பொருள் ,உயிரைகாக்கும் ,மந்து அரசியல் என அனைத்தும் கலப்படமாகி வரும் இச்சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வந்து கொண்டிருக்கும் இதழ் 'விழிப்புணர்வு'.

சந்தா விவரம் :

இதழ் நன்கொடை - ரூ.10.00
12 இதழ் சந்தா - ரூ. 100.00

சந்தா மற்றும் படைப்புகள்
அனுப்ப வேண்டிய முகவரி :


கு. காமராஜ்
62, மாடக்குளம் முதன்மைச் சாலை,
பழங்காநத்தம்
மதுரை - 625 003.
தொலைபேசி - 9443423638


வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.

கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி
ஆயுத எழுத்து


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...