அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை அதிமுகவின் மாநில செயற்குழு கூட்டம்! 0 கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு! 0 இந்த ஆண்டு மட்டும் 151 விசாரணைக் கைதிகள் மரணம்! 0 “சகதியை சந்திக்காத காலில்லை என்னுடையது” - தொல்.திருமாவளவன் விளக்கம்! 0 மோகன் லால் நடிப்பில் உருவான ‘மரைக்காயர்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு! 0 மக்களின் பிரச்சனைகளை எழுப்பியதற்கு மன்னிப்பா? முடியவே முடியாது - ராகுல் காந்தி 0 ஒரு நத்தை ஒரு ரூபாய்: கேரளத்தில் வினோதம்! 0 கமல்ஹாசன் உடல் நிலைக் குறித்த வதந்தி: மக்கள் நீதி மய்யம் விளக்கம்! 0 மாவீரர்கள் நாள்: நினைவுச் சின்னங்கள் உடைப்பு; பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்! 0 உ.பிக்கு சுற்றுலா வந்த 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி 0 தமிழக மழை வெள்ள பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ் 0 செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு 0 12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 0 வெள்ளநீரில் கால் நனையாமல் காருக்கு சென்ற திருமாவளவன்; சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனம் 0 ‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குநருக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் கூட்டறிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆயுத எழுத்து - சிற்றிதழ் அறிமுகம் 26

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   03 , 2006  01:19:19 IST

"தமிழர்களின் லட்சியம் திரைப்பட நடிகர்களை முதல்வராக்குவது. மொத்தத்தில் தமிழனென்றால் சொரணையற்றவன் என திட்டமிட்டு பத்திரிகைகள் மாற்றிவரும் இச்சூழலில் அதிலிருந்து தமிழர்களையும் தமிழர்களின் வாழ்வையும் தழைக்கச் செய்யும் சிறு முயற்சியாகவே உங்கள் கைகளில் ஆயுதஎழுத்து தவழ்கிறது" என்கிற அறிமுகத்துடன் 'ஆயுதஎழுத்து' நவம்பர் 2005 முதல் இருமாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுவரை ஜன (06) மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆசிரியர் பா.ஜோதிநரசிம்மன் இணை ஆசிரியர் கோ.பாபு, பொறுப்பாசிரியர் குமார் எடைக்கல், ஆசிரியர் குழு, எழில், இÇங்கோ, இரா.கருணாநிதி, சாத்தனூர் அ.ராசன், கோ.கணேசன்.

சிறுகதை, கவிதை, நூல் அறிமுகம், கட்டுரை, படித்ததில் பிடித்தது, சர்ச்சை, விழுப்புரம் மாவட்ட தொன்னைச் சிறப்புகள் போன்ற பகுதிகள் வெளியாகி வருகின்றன. படைப்பிலக்கியத்துடன் அரசியல் கட்டுரைகளும் வெளியாகி வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல் இதழின் மையச்சரடாக இருக்கிறது. தமிழ் மொழக்கும் தமிழ் இனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது. சிறந்த கவிதைகளும் கட்டுரைகளும் புத்தகங்களிலிருந்து மறுபிரசுரம் செய்யப்படுகின்றன. த.பழமலய், பா.ஜோதிநரசிம்மன், இளையநந்தன், ஜெயபாஸ்கரன், சீ.விக்கரமன், கோ.கிரு‰ணமூர்த்தி, தடா.நல்லரசன், எ.மு.இராதா, குமார் எடைக்கல், அசாருதீன், செஞ்சி தமிழினியன், பனிமலர், எழில் இளங்கோ, ச.பொன்னியின் செல்வன், பொன்.குமார், தங்க ரமே‰, லலித்குமார், க.பனசை சுரங்கன் போன்றோÃது ஆக்கங்கள் இடம் பெற்று வருகின்றன.
தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து குஷ்பு தெரிவித்த கருத்தும் அதற்கு ஆதரவாக எழுந்த குரல்களுக்கு மறுப்பாகவும் 'கற்பு கருத்துரிமை பெண்ணுரிமை' குறித்த விவாதங்களடங்கிய சிறப்பிதழ் ஒன்றையும் ஆயுதஎழுத்து வெளியிட்டுள்ளது. இரா.முருகப்பன், அ.ராசன், சுபா போன்றோரது கட்டுரைகள் இச்சிறப்பிதழில் இடம் பெற்றுள்ளன. மூன்றாவது இதழ் (ஜன-06) பொங்கல் சிறப்பிதழாக வெளிவந்தது.

'தமிழர்கள் யாரும் இந்துக்கள் அல்ல', 'தமிழ்த் தேசியப் போரில் ஆதித்தனார்' போன்ற கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. பெரியாரின் பட்த்தையும் 'கொலை வாளினை எடடா மிகக் கொடியோர் செயல் அறவே' எனும் பாரதிதாசனின் வரியையும் ஆயுதஎழுத்து அட்டைப்பட முகப்பில் தாங்கி வருகிறது.

"இளம் கவிஞர்களை ஊக்கப் படுத்துவதற்காகவும், தமிழ்த் தேசிய அரசியலைப் பரவலாக்குவதற்காகவும் இவ்விதழைத் தொடங்கினோம்" என்கிறார், ஆசிரியர் பா.ஜோதிநரசிம்மன். இவர் பழநெடுமாறனின் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட துணைத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். சிறுகதைகளையும் எழுதி வருகிறார். இவருடன் சேர்ந்து இவ்விதழை நடத்திவரும் நண்பர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களனைவரும் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடும் நம்பிக்கையும் உடையவர்கள். இவ்விதழும் அதை நோக்கிய பயணப்பட்டு வருகிறது.

தொடர்பு முகவரி :

பா. ஜோதிநரசிம்மன்
92, டாக்டர் இராதாகிரு‰ணன் வீதி,
வி.ஜி.பி. நகர் கிழக்கு,
சாலாமேடு, விழுப்புரம் - 605 401.
பேச : 9894561154

- மு. யாழினிவசந்தி

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.

கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு
படப்பெட்டி


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...