அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கட்டா குஸ்தி: திரைவிமர்சனம்! 0 இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி அமல்படுத்துவதை நான் எதிர்க்கிறேன்: கிரண் ரிஜிஜு 0 தமிழகத்தில் அனைத்து கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை! 0 தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழையே பெய்யும்! 0 அறப்போர் இயக்கத்துக்கு எதிராக நீதிமன்ற படியேறிய எடப்பாடி பழனிசாமி 0 பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம் 0 வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்: தமிழக அரசு 0 மும்பையில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை! 0 குஜராத் முதற்கட்ட தேர்தலில் 60.20% வாக்குப்பதிவு! 0 ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 21 மசோதாக்கள்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு 0 கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை டிபியாக வைத்து 40 லட்சம் ஏமாற்றிய பெண்! 0 பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து! ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து உலகசாதனை! 0 தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை! 0 'கடைமையை செய்யாமல் தேவையில்லாதவற்றை ஆளுநர் பேசுகிறார்' – கி.வீரமணி 0 ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்: கவர்னருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆர்.கே.நாராயணன் என்னும் படிப்பாளி- சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : புதன்கிழமை,   மார்ச்   01 , 2006  03:35:54 IST

1983-ஆம் ஆண்டில், மே மாதம் மைசூரில் உள்ள தொன்யா யோகாவில் இருந்தேன். அது மைசூர் பல்கலைக்கழகத்தையொட்டி இருப்பது. தொன்யாயோகாவில் இருந்து பார்த்தால் தொலைவில் சாமூண்டீஸ்வரி கோவில் தெரியும். நான் தொன்யாயோகாவின் விருந்தாளி. எழுதுவது என் வேலை. சூரிய வம்சம் நாவலை எழுதிக்கொண்டு இருந்தேன், என் கூட பிரபல ஆங்கில கவி பேராசிரியர் இஸ்ஸீம் நசிக்தில் இருந்தார். இந்தியாவில் மிக குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் äத சமயத்தை
சேர்ந்தவர். பம்பாய் பல்கலைக் கழகத்தில் ஆங்கில பேராசிரியர். ஆனால் தன்னை கவி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை பட்டுக்கொண்டார்.

தொன்யாயோகாவில் நான் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் நாடகஆசிரியர்கள் மொழிப்பெயர்ப்பாளர்கள் என்று பலரையும் சந்தித்தேன். அதில் முக்கியமானவர் ஆர்.கே.நாராயணன் அவரை வெள்ளைச்சட்டை, வேட்டி, எவர் சில்வர் வெற்றிலைப்பாக்கு பெட்டியோடு முதல் முதலாகச் சந்தித்தேன். ஆர்.கே.ராமானுஜன் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் லேசில் யாரிடமும் சிக்கிக் கொள்ளாதவராக இருந்தார். கற்றறிந்தவர்கள் கூட்டத்தில் அவர் தனித்து இருந்தார் - என்பது மாதிரியே சேர்ந்து இருந்தார். அவர் பெரும்பாலும் பேசவில்லை, ஆனாலும் பேசாமல் இருந்தார் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவர் பேசவேண்டிய இடத்தில் பேசினார்.

1983-ஆம் ஆண்டில் ஆர்.கே.நாராயணனோடு ஏற்பட்ட பழக்கம் அவர் காலமாகும்வரையில் (2001-ஆம் ஆண்டுவரை) தொடர்ந்தது. மைசூரில் அவர் வீட்டிற்க்கு எதிரே மாபெரும் ஓட்டல் கட்டினார்கள் பெரிய கட்டிடத்தைக் கண்டு அவர் மிரண்டு போய்விட்டார். இளம் வயதிலேயே மனைவியை இழந்துவிட்டார். எழுத்துதான் அவருக்குப் பிரதானமாக இருந்தது. ஜெமினி மிஸ் மாலினி அவருக்காகத்தான் தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பற்றி அவர் ஆங்கில மொழியில் எழுதினார். ஆவரின் கற்பனை ஊர் மால்குடி. மால்குடியில் நடப்பதாகத்தான் தன் கதைகளை எழுதினார். அவர் கதைஎன்னவோ நிஜம்,ஊÕம் நிஜம் ஆனால் அதற்கு கற்பனையான பெயர் ஒன்றை வைத்து இருந்தார்.

ஆர்.கே. நாராயணனுக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் இருந்தார்கள். கிரகாம் கீ என்ற ஆங்கில ஆசிரியர் நாராயணணின் எழுத்துக்களை படித்துவிட்டு அதை ஆங்¸¢லத்தில் வெளியிட ஏற்பாடு செய்தார். ஆர்.கே. நாராயணன் முழுபெயர் ராசிபுரம் கிரு‰ணசாமி ஐயர். நாராயணசாமி சென்னை புரசைவாக்கத்தில் தான் பிÈந்தார். அவர் தந்தை மைனர் பள்ளிக்கூடத்தில் அங்கிலம் கற்பிக்கச் சென்ற போது- மைசூர் புலம் பெயர்ந்தார். எனவே மைசூர் வாசியாகிவிட்டார். ஆர்.கே.நாராயணன் வாசகர்களில் முக்கியமானவர் இந்திராகாந்தி அவர் நாராயணனனை கௌரவிக்கும் விதமாக ராˆய சபா உறுப்பினராக்கினார்.

அரசாங்கத்தால் நியமிக்கப்படும் பிரமுகர்கள் தன் பதவிகாலம் முழுவதும் வாயை மூடி இருந்துவிட்டு விடுவார்கள் நாராயணன் பாராளுமன்றத்தில் பேசினார். அதுவும் பள்ளிக்கூட குழந்தைகள் -முதுகில் Òத்தகங்கள் மூட்டையாகத் தூக்கிக்கொண்டு போவது பற்றி பேசினார். அவர் குழந்தைள் கல்வி,சுற்றுப்புறசூழல்-என பலவற்றின்மீதும் ஆர்வங்கொண்டு இருந்தார்.

நாராயணன் தன் புத்தகங்களை இந்தியாவில் வெளியிட யார்க்கும் உரிமை கொடுக்கவில்லை. ¦º¡ந்தமாக ஒரு பதிப்பகம் நடத்தினா÷. அதன் ãலமாக அவரது நூல்கள் வெளிவந்தன.அவர் தமிழில் நாவல், சிறுகதை எல்லாம் படித்து வநதார்.

நான் அவரை ஒருமுறை மைசூரில் சந்தித்தபோது "என்ன படித்து வருகிÈ£கள்?" என்று கேட்டேன்.

"கம்பராமாயணம் படிக்கிறேன் நான் படிக்காமலே இருப்பதே இல்லை. தினம் ஒரு படலமாவது படித்துவிடுவேன் என்றார்.

எழுத்தாளர் என்று அறியப்படுகிறவர்களில் பலர் படிப்பாளிகளாகவே இருந்து வருகிறார்கள். அதில் ஒருவராக ஆர்.கே.நாராயணன் இருந்தார்.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13 , Article 14 ,Article 15 ,Article 16 ,Article 17,Article 18,Article 19 ,Article 20 ,Article 21 ,Article 22 ,Article 23 ,Article 24 ,Article 25,Article 26


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...