அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

படப்பெட்டி - சிற்றிதழ் அறிமுகம் 25

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   24 , 2006  01:03:05 IST

நவீன சினிமாவிற்கான காலாண்டிதழ் 'படப்பெட்டி', மாற்று சினிமா முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் சில அமைப்புகள் சென்னையில் செயல்பட்டு வருகின்றன. அதில் மக்கள் திரைப்பட இயக்கமும் ஒன்று. நவீன சினிமாவிற்காக நிழல், செவ்வகம் போன்ற ஒரு சில இதழ்களே வெளிவருகின்றன. இவ்வரிசையில் மக்கள் திரைப்பட இயக்கத்தின் சார்பில் 'படப்பெட்டி' இதழ் வந்து கொண்டிருக்கிறது.

"திரைப்பட அரசியலை 'படப்பெட்டி' பேசும். திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள், இவைகளைப் பற்றிய ஆழமான கட்டுரைகள், அறிமுகம், §¿ர்காணல் ஆகியவை ஒவ்வொரு இதழிலும் இடம் பெறும். நாடகம், ஓவியம், இசை, நாட்டுப்புறக் கலைகள் ஏதாவதொன்றைப் பற்றிய கட்டுரையும் இடம் பெறும்," என்கிற பிரகடனத்துடன் 'படப்பெட்டி' முதல் இதழ் ஜீன் 2005ல் வெளிவந்தது. கே.பி.பாலசந்தர், சிவசெந்தில்நாதன், அ.சதீ‰, ஜெ.முனுசாமி, விஜய் ஆனந்த் ஆகியோரடங்கிய ஆசிரியர் குழு உழைப்பில் வெளிவருகிறது.

காத்திரமான ஐந்து கட்டுரைகள் முதல் இதழில் இடம் பெற்றுள்ளன. கோத்ரா சம்பவத்திற்கு பிறகு ஏற்பட்ட குஜராத் கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட "ஃபைனல் சொல்யூ„ன்" ஆவணப்படம் பற்றியும் அதன் இயக்குநர் ராஜே‰ சர்மாவின் நேர்காணலும் வந்துள்ளது. 'சினிமா இன் இண்டியா' (ஜீலை - செப்'04) ஆங்கில இதழிலிருந்து இரா. குமரகுருபரனால் இது மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. குஜராத் கலவரத்தின் பின்னணியிலிருக்கும் 'திட்டமிட்ட சதி அரசியல்' பற்றியும் ராஜே‰ சர்மா எதிர்ப்புகளைப் பற்றியும் பேசுகிறÐ இக்கட்டுரை.

'தமிழ்ச்சுழலில் குறும்படங்கள்' என்னும் செழியனின் கட்டுரை, குறும்பட முயற்சிகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஆராய்கிறது. அ.மங்கையின் 'விரியும் அரங்கவெளி' கட்டுரை, பெண் அரங்கம், பெண்ணிய அரங்கம் குறித்து இந்திய அளவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை தமிழ்ச் சுழலுடன் தொடர்புறுத்தி விரிவாகப் பேசுகிறது.

"வாழ்வின் ஆழ்ந்த உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கான தீராத வேட்கையிலிருந்Ðதான் அவரது படைப்பு மனம் முகிழ்ந்தெழுகிறது" என்கிறது மலையாள இயக்குநர் ஜி.அரவிந்தன் பற்றிய 'காலமற்ற நதியில் நெடும் பயணம்' எனும் மு.இசக்கியப்பனின் கட்டுரை. அரÅ¢ந்தனைப் பற்றியும் அவரது திரைப்படங்களைப்பற்றியும் கவித்துவமான மொழி நடையில் கூறிச் செல்கிறது இக்கட்டுரை. இதழின் கடைசிக் கட்டுரை நந்திதாதாஸ் நடித்த 'பவாந்தர்' எனும் இந்திப் படம் பற்றியது. 120 நிமிடம் ஒடக்கூடிய இப்படம் உயர்சாதியை சேர்ந்தவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பன்வாரி தேவியின் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அனைத்து அதிகார மட்டத்திற்கும் ஊடுறுவியிருக்கும் சாதி ஆதிக்கத்தைப் பற்றி இக்கட்டுரை பேசுகிறது.

இப்படி முதல் இதழே மாற்றுக் கலைகள் குறித்த கனமான பதிவாக வெளிவந்திருப்பது குறிப்படத்தக்கது.

இரண்டாவது இதழில் ஸ்டிபன்பி„யூஸின் 'பால்கே சகாப்தத்துக்கு முந்தைய தென்னிந்தியா' எனும் மொழி பெயர்ப்புக் கட்டுரையும், உலகத் திரைப்படம் அறிமுகம் பகுதியில் 'மோட்டார்சைக்கிள் நாட்குறிப்புகள்' படம் பற்றிய
Å¢ஸ்வாமித்திரன் கட்டுரையும் 'மாறிவரும் திரைப்படங்களின் முகம்' எனும் மா.பாலசுப்ரமணியம் மொழி பெயர்ப்பு கட்டுரையும் கே.பி.பாலசந்திரன் காலத்தை வென்று நிலைத்து நிற்கும் பதேர் பாஞ்சாலி கட்டுரையும் 'விடுத்' ஆவணப்படம் குறித்த ஜெ.முனுசாமியின் விமர்சனக் கட்டுரையும் கூத்துக்கனல் கோ.பழனி எழுதிய 'பñபாட்டு அடையாளத்தின் வன்முறை' எனும் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

மூன்றாவது இதழில் அரவாணிகள் குறித்த 'உறையாத நினைவுகள்' நாடகம் மற்றும் சந்தோ‰ சிவனின் 'நவராயா' சினிமா குறித்தும் வி.அரசுவின் கட்டுரையும், அனிமே„ன் குறித்த ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கட்டுரையும் 'திரைப்பட அருஞ்சொற்கள் குறித்து செழியனின் விளக்கங்களும் 'தவமாய் தவமிருந்து' திரைப்படம் குறித்து விமர்சÉமும் 1953ல் வெளிவந்த 'காந்தியைப் பற்றி ஆவணப்படம்' குறித்த கே.பி.பாலச்சந்தர் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

மக்கள் திரைப்பட இயக்கம் ஒவ்வொரு மாதமும் சென்னையில் உலகின் மிக முக்கிய திரைப்படங்களை இலவசமாக திரையிட்டுக் கொண்டிருக்கிறது. 2005இல் வெளிவந்த தமிழ்òதிரைப்படங்களின் போக்கைக் குறித்து கருத்தரங்கை ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கிறது.

கருப்பு வெûளையில் 24 பக்கங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது என்றாலும் கனமான பதிவுகளாக இருக்கின்றன.

படப்பெட்டி நவீன சினிமாவின் அரசியலைப் பேசுவதற்கான களமாக அமைந்துள்ளது எனலாம்.


சந்தாவிவரம் :

தனி இதழ் - ரூ.10
ஆண்டு சந்தா - ரூ.40


தொடர்பு முகவரி :

சிவ. செந்தில்நாதன்
இந்தியன் வங்கி காலனி
வள்ளலார் தெரு, பத்மநாபா நகர்,
சூளைமேடு, சென்னை - 94.

- மு. யாழினிவசந்தி

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.

கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி
புதிய பார்வை
தீராநதி
காலச்சுவடு


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...