அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து – தமிழக அரசு 0 இளையராஜாவின் முதல் மாணவன் நான் - லிடியன் நாதஸ்வரம் நெகிழ்ச்சி! 0 கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் பாபர் ஆஸம் தேர்வு! 0 ஜெய் பீம்: நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு! 0 இலங்கை அரசின் பிடியிலிருக்கும் 105 படகுகளை மீட்க கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்! 0 மகாராஷ்டிராவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு! 0 தொல்லியல் அறிஞர் நாகசாமி காலமானார்! 0 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு! 0 கொரோனா தொற்று குறைந்தால் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும்: மா.சுப்பிரமணியன் 0 சென்னை குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து! 0 ஐ.ஏ.எஸ். பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடுங்கள்: முதலமைச்சர் வலியுறுத்தல் 0 நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 சென்னையில் கொரோனா தொற்று தற்போது குறையத் தொடங்கியுள்ளது: ராதாகிருஷ்ணன் 0 கர்நாடக அரசின் எதிர்ப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் 0 ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்க தமிழகத்துக்கு சட்டப்படி உரிமை உண்டு: துரைமுருகன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புதிய பார்வை - சிற்றிதழ் அறிமுகம் 22

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   03 , 2006  22:44:09 IST

இன்றைய நவீன இலக்கியச் சூழலில் பலரது கவனத்தைப் பெற்ற முக்கிய இடைநிலை இதழ் புதிய பார்வை.

தரமான விஷயத்தை ஓரளவுக்கு ஜனரஞ்ºகமாகக் கொடுத்து வரும் புதிய பார்வை சாதரண வாசகனை தன் பக்கம் ஈர்த்து இலக்கியம் பக்கம் திருப்புகிறது.கல்லூரி மாணவர் முதல் மூத்த இலக்கியவாதி வரை எல்லோருக்குமான இதழாக இருக்கிறது.

புதிய பார்வைக்கு இரண்டு அத்தியாயங்கள் உண்டு. முதல் அத்தியாயம் 1992 லிருந்து 1999 வரை. இரண்டாம் அத்தியாயம் ஆகஸ்ட் 2004 லிருந்து தொடங்கியிருக்கிறது.

1992 ஏப்ரல் 14 ல் முதல் இதழ் வெளிவந்தது. ஆசிரியர் ம.நடராசன், இணை ஆசிரியர் பாவை சந்திரன் , உதவி ஆசிரியர் கதிர்வேலனும் இருந்தனர்.ஆரம்ப கால புதிய பா÷வை வட இந்தியா அரசியல்வாதிகளின் நேர்காணல்களுடனும், சுஜாதா, தனுஷ்கோடி ராமசாமி, ஸ்டெல்லா புரூஸ் ஆகியோரின் தொடர்கதைகளுடனும் வந்து கொண்டிருந்தது.

மும்பைச் சிறப்பிதழ், கல்கத்தா சிறப்பிதழ், டெல்லி சிறப்பிதழ் என மாநில சிறப்பிதழ்களை வெளியிட்டிருக்கிறது.

சர்வதேச சினிமா சிறப்பிதழும்,சிறுகதைச் சிறப்பிதழும் குறிப்பிடத்தக்கவையாகும்.சுபமங்களாவிற்கு இணையாக பேசப்பட்ட இவ்விதழில் முக்கியமான கட்டுரைகளும், கவிதைகளும், விமர்சனங்களும் வெளிவந்துள்ளன.

ஒரு தரமான இதழாக வெளிவந்து கொண்டிருந்த புதிய பார்வை போதிய அளவு விற்பனை இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் 1999 ல் நின்று போனது.

மீண்டும் புதிய பார்வை ஆகஸ்ட் 2004லிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போதைய இணை ஆசிரியர் மணா.குமுதம் ரிப்போர்ட்டர், குமுதம் தீராநதி ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். உதவி ஆசிரியர். சுந்தரபுத்தன். இவரும் தேர்ந்த பத்திரிகை அனுபவம் உடையவர்.

இப்போதைய புதிய பார்வை கலை இலக்கியம் அல்லாமல் சமூக அரசியலிலும் அதிக அக்கறை காட்டி வருகிறது.ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஒலித்து வருகிÈது. பலதரப்பட்ட எழுத்தாளர்களும் இதில் எழுதி வருகின்றனர். தமிழ்ச் சூழலில் விவாதத்தை ஏற்படுத்தும் கட்டுரைகளும் , நேர்காணல்களும் இதில் இடம் பெற்றுவருகின்றன.

சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நாட்டுப்புற கதைகள், புத்தக விமர்சனங்கள், நிகழ்வுகள் போன்றவையும் வெளியாகிவருகின்றன. புதிய பார்வை புதிய கவிஞர்களை அதிகம் அறிமுகப்படுத்தி வருகிறது.

மணாவின் 'தமிழகத் தடங்கள்', திலகவதியின் 'உலகம் உனக்குள்', பாமரனின் 'பிச்சைப் பாத்திரம்', பரசுராமின் 'சாளரம்',சுந்தரபுத்தனின் நவீன தூரிகை ஆகிய தொடர்கள் முக்கியமானவையாகும். எழுத்தாளர்களின் அனுபவத்தொடரான 'பயணம்' குறிப்பிடத்தக்கது.சினிமா விமர்சனமும் முக்கிய கவனத்தைப் பெற்று வருகிறது.

ஆசிரியர் பற்றி:

ஆசிரியர் ம.நடராசன் எம்.ஏ. மொழியியல் பட்டம் பெற்றவர். 1967 ல் மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்றவர்.
' மகளிர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டிருக்கிறார்.இவர் அரசியல் சார்புடையவராக இருந்தாலும் புதிய பார்வையில் அந்த அரசியலை திணிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இணை ஆசிரியர்:

நடுநிலைமையோடு செய்திகளை தரும் மணா பத்திரிக்கைத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். 'தீராநதி'யின் ஆரம்ப காலங்களில் பெரும் பங்களிப்பு அளித்த மணாவின் புத்தகங்களான 'நதிமூலம்' 'தமிழகத்தடங்கள்' போன்றவை பெரும் வரவேற்பைப் பெற்றன.

சந்தா விபரம்:

ஓராண்டுச் சந்தா - ரூ 240/-
மூன்றாண்டுச் சந்தா - ரூ 720/-

வெளிநாடுகÙக்கு:

ஓராண்டுச் சந்தா - ரூ 50 USD

முகவரி:

புதிய பார்வை
த. பெ. எண் : 1073
189, டி . டி. கே. சாலை,
ஆழ்வார்பேட்டை
சென்னை - 8
தொ¨Ä பேº¢ : 044 - 42077009
தொலை நகல் : +91 - 44 - 24984458
Á¢ýÉïºø :puthiyapaarvai@rediffmail.com

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.

கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்
நம் உரத்த சிந்தனை
திரை
கதை சொல்லி


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...