அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது 0 2020-ல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது, கொரோனா 2-ம் அலையால் இன்னும் மோசமாகும்: ஆய்வில் தகவல் 0 நாட்டு மக்களுக்கோ பேரழிவு, மோடியின் நண்பர்களுக்கோ கொண்டாட்டம்: ராகுல் காந்தி 0 புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு 0 ஆடம்பர காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை: நெகிழ வைக்கும் ‘ஆக்ஸிஜன் மனிதன்’! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆதாரம் இல்லை: ரஜினிகாந்த் 0 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பழுதான சிசிடிவி கேமரா! 0 தடுப்பூசி விற்பனையில் தனித்தனியாக விலை நிர்ணயம் செய்கிறதா சீரம் நிறுவனம்? 0 இந்தியாவில் புதிய உச்சம்: 3 லட்சத்தை கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 மக்கள் உயிரிழக்கும்போது ஆக்சிஜன், தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குற்றச்செயல் - ராகுல்காந்தி விமர்சனம் 0 கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்கள் அறிவிப்பு 0 மேற்குவங்கத்தில் இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு 0 ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்! 0 சீன கப்பலை வெளியேற்றிய இலங்கை! 0 சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புத்தகங்களும் முன்னுரைகளும் - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : புதன்கிழமை,   மார்ச்   01 , 2006  03:56:07 IST

புத்தககத்திற்கு ஆசிரியர் எழுதுவது முன்னுரை. சிலநேரங்களில் முன்னுரையை புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், விமர்சகர்கள் எழுதுவது உண்டு.அதில் புத்தகம் எழுதும் ஆசிரியரின் விருôபம் அதிகமாக இருக்கும். அதாவது இவர் எழுதினால் புத்தகம் மதிப்பு பெறும் என்று ஆசிரியர் நினைப்பாக இருப்பதுண்டு.பெரும்பாலும் முன்னுரை ஆசிரியரையும் - புத்தகத்தையும் புகழ்ந்து மேம்படுத்துவதற்காக அமைந்து விடுகிறது.அதுதான் ஆசிரியர் எதிர்பார்ப்பது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத முன்னுரையை ஆசிரியர் புத்தகத்தில் சேர்ப்பது இல்லை.

சிலர் முன்னுரையே கொடுப்பது இல்லை. படிக்க நேரமில்லை என்றும் -வேறு வேலை இருக்கிÈது என்றும் கூறி தள்ளி விட்டு விடுவார்கள்.ஆனால் ஆசிரியர்கள் தான் நினைக்கும் மதிப்பு மிக்கவர் முன்னுரை அவசியம் என்று நினைத்து நீங்கள் தான் எழுதித் தர வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறவர்கள் உண்டு.

ஒரு புத்தகத்திற்கு முன்னுரை அவசியமா?

முதல் கட்சி- அவசியம் இல்லை, அது இடைஞ்சல் புத்தகம் பற்றி முன்கூட்டியே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தி விடுகிறது. இருநூறு பக்க புத்தகத்தில் சொல்லியிருப்பதைத்தான் சுருக்கி முன்னுரையில் சொல்லியிருப்பார்கள்.எனவே அது அவசியம் இல்லை. இது நியாயமான கட்சி.புத்தகத்தின் மீது நம்பிக்கை வைக்கும் கட்சி.வாசகனுக்கும், புத்தகத்துக்கும் நேரடியாக தொடர்பு கொள்ள வைக்கும் கட்சி.

இரண்டாவது கட்சி ஒரு புத்தகத்திற்கு முன்னுரை அவசியம் என்று நம்புகிற கட்சி.

அதுவும் பிரபலத்தின் முன்னுரை.ஏற்கனவே சமூக அந்தஸ்தினைப் பெற்ற மனிதரின் நல்வார்த்தைகள் நான்கினைப் பெற்று போட்டுக் கொள்கிற கட்சி. அந்த முன்னுரைக்கும் நூலுக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனாலும் இவரின் முன்னுரை கொண்டது என்று அறிமுகமே ஆடம்பரமாக இருக்கும்.முன்னுரை எழுதுகிறவரோ தன்னுடைய பட்டம் மற்றும் முன்னாள்- இந்நாள் பதவிகளை முதலில் எழுதிவிட்டுத்தான் முன்னுரை எழுதி இருப்பார்.

ஆசிரியரே எழுதும் முன்னுரையில் தன் கொள்கை , கோட்பாடு, முக்கியமாக இருக்கும். மேலும் யாரையெல்லாம் அவருக்கு பிடிக்கவில்லையோ, யாரையெல்லாம் திட்டி தீர்க்கவேண்டும் என்று இருந்தாரோ அவர்களை எல்லாம் முன்னுரையில் ஒரு பிடி பிடித்து விடுவார்.

இன்னும் சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களிடம் வரும் இளம் ஆசிரியர்களை பிடித்துக் கொண்டு விடுவார்கள் உங்கள் புத்தகம் வரும் போது நான் தான் முன்னுரை எழுதுவேன் என்று அச்சாரம் போடுவார்கள்.

இளம் எழுத்தாளர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

முன்னுரை என்பது இன்னொருவர் அங்¸£காரம் இல்லை. வெகுமதி இல்லை. படைப்பு இலக்கியத்தில் பூடகமாக ஆசிரியர் சொல்லியிருப்பதை இன்னொருவர் தான் புரிந்து கொண்ட விதத்தில் சொல்வது. அது சரியாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை.

உ. வே.சாமிநாதையர், கோபால கிருஷ்ண பாரதியார் சரித்திரத்தில் பாயிரம் பற்றி சொல்லியிருக்கிறார். பா¢ரம் என்பது முன்னுரை மாதிரிதான்.

கோபால கிருஷ்ண பாரதியாருக்கு , தன் நந்தன் சரித்திரத்திற்கு மாகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாயிரம் கேட்டுப்பெற்று புத்தகம் போட வேண்டுமென்று ஆசை. ஆனால் மாகாவித்வானுக்கு பாரதியார் தமிழ் மீது நம்பிக்கை கிடையாது. இலக்கணப் பிழை உண்டு என்று நம்பியவர்.எனவே பாயிரம் கொடுக்க விரும்பவில்லை. ஆனாலும் அதை நேரில் சொல்லாமல் இழுத்தடித்துக் ¦¸¡ண்டேயிருந்தார். இப்படி நாட்கள் சென்று கொண்டிருந்தன.

ஒருநாள் பகல் பொழுது.மகாவித்வான் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பாரதியார் தன் நந்தன் சரித்திரத்தைப் பாட ஆரம்பித்தார்.
நேரம் ஆக ஆக அவர்க்கே உற்சாகம் வந்துவிட்டது. பாடிக்கொண்டேயிருந்தார். வீட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ம¸¡வித்வான் சப்தம் கேட்டு விழித்தார்.அப்புறம் பாட்டை செவி மடுத்தார்.அது அவர் மனசுக்குள்ளே புகுந்தது.சொற்குற்றம், பொருள்குற்றம்,இலக்கணக் குற்றம் நிரம்பிய நந்தன் சரித்திர கீர்த்தனைகளுக்கு மாகவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாயிரம் எழுதிக் கொடுத்தார்.

தமிழ் மொழியில் மற்றவர்களுக்கு முன்னுரை எழுதிக் கொடுப்பதில் முதலில் இருப்பவர் அசோகமித்திரன். அநேகமாக எல்லா சீரியஸ் எழுத்தாளர்களின் முதல் தொகுதிக்கும் முன்னுரை எழுதியிருக்கிறார்.

தற்போது அவர் முன்னுரை எழுதியிருப்பது 94 வயதான பூரணியின் சுயசரிதத்திற்கு.அசோகமித்திரன் முன்னுரைகளைத் தொகுத்தால் அது ஒரு புத்தகமாகிவிடும். அதில் பிறரைக் கவரும் அõசம் எதுவென்றும் தெரிந்துவிடும்.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13 , Article 14 ,Article 15 ,Article 16 ,Article 17,Article 18,Article 19 ,Article 20 ,Article 21 ,Article 22


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...