அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தொலைந்து போகும் மொழிகள் - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : புதன்கிழமை,   மார்ச்   01 , 2006  03:59:48 IST

A Comparative grammar of the Dravidian or South Indian Family of Languages- என்பது கார்டுவெல் 1856 ஆம் ஆண்டில் ஆங்கில மொழியில் எழுதி வெளியிட்டது.அது அவரின் டாக்டர் பட்டத்திற்கான ஆராய்ச்சி.ஆíகிலத்தில் அவர் நூல் மிகவும் முக்கியமானது.அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் மாக்ஸ் முல்லர் சமஸ்கிருத மொழியைப் பற்றி எழுதியிருந்தார்.கார்டுவெல் திட்டமிடாத முறையில் தான் தன் நூலை வெளியிட்டார்.அது இந்திய மொழிகள் பற்றிய சரித்திரத்தில் முக்கியமான நூலாகிவிட்டது.

கா÷டுவெல் ஒப்பிலக்கணத்தின் வழியாக ஒன்று தெளிவாகியது. அதாவது இந்திய மொழிகள் அனைத்துõ சமஸ்கிருதத்தை மூலமாகக் கொண்டது இல்லை. தமிழ் உட்பட வேறு சிலமொழிகள் தனி வகையானவை.அவற்றில் சமஸ்கிருதத்தின் பாதிப்பு இருக்கலாம்.ஆனால் சமஸ்கிருதத்தில் தோன்றியதில்லை என்பதுதான் அவர் கண்டுபிடிப்பு.

«வர் திராவிட என்ற சொல்லை மொழிக் குடும்பத்திற்கும் பயன்படுத்தினார். அது - அதாவது திராவிடம், திராவிட என்பது சமஸ்கிருத சொல். தமிழகத்தையும் - தமிழர்களையும் குறித்து சமஸ்கிருதòதில் வழங்கப்பட்டது. அதனைப் பரந்த அளவில் மொழிகளைப் பற்றி சொல்ல எடுத்துக் கொண்டார்.

கார்டுவெல் தன் காலத்தில் திராவிட மொழிகள் என்று பன்னிரெண்டு மொழிகளை அடையாளங்கண்டார்.அவற்றை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார்.முதல் பிரிவு எழுத்தும் இலக்கியமும் கொண்டது.அதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு. அவற்றை திருத்திய மொழிகள் என குறிப்பிட்டார்.

இரண்டாவது பிரிவு திருத்தாத மொழிகள். தோடா, கோடா, கோண்டா, குயி.

ஒரு நூற்றாண்டிற்குள் மொழி ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் திராவிட மொழிகள் 26 ஆகிவிட்டன.

மொழிகள் பற்றிய ஆய்வில் முக்கியமான அம்சம் எந்த மொழியும் எல்லா காலத்திற்கும் நிலைத்து நிற்காது.காலப் போக்கில் பல மொழிகள் தொலைந்து போக, புதிய மொழிகள் வந்து விடும் என்பதுதான்.அது வாழ்க்கை அமைப்பு மாறும் போது - படிப்பு ஏற்படும் போது வேகமாக நிகழ்கிறது.ஏனெனில் வாழ்க்கையோடு சேர்ந்து வராத எதுவும் - மனிதர்களிடம் நிலை கொண்டு ஜீவிப்பதில்லை.அதில் மொழிக்கு முக்கியமான பங்குண்டு. மொழி அடையாளமாக இருக்கும் ஆனால் அதுவே வாழ்க்கையாக இருக்காது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மாநிலங்கû மொழிவாரியாகப் பிரித்தார்கள். இந்தி மொழியை அரசாங்க மொழியாக்கினார்கள். மொழிவளர்ச்சிக்கு மாநில அரசும் மத்திய அரசும் நிறையப் பணம் செலவிடுகிறது.

அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி புதிய மொழிகளுக்கு இடம் கொடுக்கிறார்கள்.சாகித்திய அகா¾மி பரிசு கொடுக்கிறது. ஒவ்வொரு மொழியும் சர்வதேச மொழி மாநாடுகளை நடத்துகிறது.ஆனால் தாய்மொழி படிக்க மாணவர்கள் முன்வருவதில்லை.பெற்றோர்கள் தன் மகனோ - மகளோ தாய்மொழி படிôபதை ஊக்குவிப்பதே இல்லை.தமிழ்நாடு அதற்கு முன் உதாரணம். இரண்டு மொழிக் கொள்கையை அது பின்பற்றுவதால் பள்ளிக்கூடத்தில் தமிழ் காணாமல் போய்விட்டது.

இந்தியாவில் உள்ள மாநிலங்கÇ¢லேயே தமிழ்நாடு தீவிரமாகக் இரண்டு மொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறது.அறிஞர் அண்ணா வழங்கியது அதுவென பிரதானப் படுத்திக் கொள்கிறது.அதில் முதலில் பலி ஆனது தமிழ்.

மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்ந்து தமிழ்மொழியைப் படிக்காமல் ஒரு மாணவன் தன் படிப்பை பூர்த்தி செய்துவிடலாம். பிற மாநிலங்களில் அது இø¨Ä.அதாவது தாய்மொழியைப் படிக்காமல் ஒரு மாணவன் தன் படிப்பை முடிக்க முடியாது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது அங்கில மொழி பள்ளிக்கூடங்களில் போதிக்கப்பட்டதைவிட தீவிரமாக அதிகக் கவனத்துடன் ஆங்கில மொழி போதிக்கப்படுகிÈது.மாணவர்கள் அதனை முன்மொழியாக் எடுத்துக் கொண்டு கற்கிறார்கள்.தற்போது இந்தியாவில் கற்பிக்கôபடும் ஆங்கிலம் ஆங்கிலேயர்களின் ஆங்கிலம் இல்லை.உலகத்தின் கவÉத்தையும் வேலை வாய்ப்பையும் தரும் அமெரிக்காவின் ஆங்கிலம்.இந்த ஆí¸¢லத்தில் அடிமை, சுதந்திரம் என்ற வித்தியாசம் கிடையாது.. அது மொழி வளத்தையும் நல்வாழ்வையும் கொண்டு வருவது.எனவே அதனை ஊக்கமுடன் கற்கிÈ¡ர்கள்.

கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது மொழியறிவு இல்லை.மொழியில் அறிவு என்பது கிடையாது.அறிவை அடைய மொழி ஒரு சாதனம். இக்காலத்தில் ஆங்கிலம் நல்ல சாதனம்,அதை தன்வசப்படுத்த ஒவ்வொருவரும் முயற்சி செய்கிறார்கள்.

கார்டுவெல் திராவிட மொழிகள் பற்றி ஆங்கிலத்தில் தான் எழுதினார்.அவரைத் ¦¾¡டர்ந்து ஆராய்ச்சிகள் நிகழ்ந்து வருகின்றன.ஆனால் அது ஆங்கிலத்தைத்தான் சார்ந்து இருக்கிறது.

தமிழ் மொழியைப் பற்றி தெரிந்து கொள்ள ஆங்கில அறிவு அவசியமாக உள்ளது என்பது நிதர்சனம்.மொழிபெயர்ப்பின் வழியாக இலக்கியத்தை தெரிந்து கொள்ள முடியாது என்று எத்தனை தான் சொன்னாலும் - வாழ்க்கையே இலக்கியத்தில் இல்லை. உலகத்தில் பல கோடி மக்கள் எழுதப்பட்ட இலக்கியம் இல்லாத மொழிகளை பேசியே ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் படிக்க வரும் போது - எது படிப்பு மொழியாகிறது.அது அவர்களின் தாய் மொழி இல்லை.

இது மொழிகள் வேகமாக அழிந்து வரும் காலம். ஆனாலும் பண்டைய மொழிகள் மீது அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து அதன் சிÈப்புகள் பற்றி புதிய மொழியில் எழுதிக் கொண்டே இருப்பார்கள். அது தான் சரித்திரம்.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13 , Article 14 ,Article 15 ,Article 16 ,Article 17,Article 18,Article 19 ,Article 20 ,Article 21


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...