அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புத்தக எரிப்பு - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : புதன்கிழமை,   மார்ச்   01 , 2006  08:17:04 IST

எழுத்தில் இருந்து புத்தகம் வந்தது. புத்தகத்தில் எழுதியது எல்லாம் ஒரே மாதிரி இல்லை. பழங்காலத்தில் புத்தகம் என்பது களிமண் கட்டி. அதை தட்டையாக்கி - அதாவது தகடு மாதிரி, எழுதினார்கள். வெய்யிலில் காயவைத்து சிலேட்டு மாதிரி ஆக்கி படித்தார்கள்.அதனை பின்னால் புத்தகம் மாதிரி அடுக்கி பாதுகாத்தார்கள். பூமியில் புதைந்து போன களிமண் சிலேட்டுகளை அகழ்ந்து எடுத்து இருக்கிறார்கள்.

பிரமிடுகளில் இருந்Ð சில காகிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அதில் மிகவும் தெளிவாக எழுதப்பட்டு இருப்பதை புத்தகமாகப் போட்டு இருக்கிறார்கள்.அது மனிதன் எந்தக் காலத்திலும் ஒரே மாதிரியான ஆள் தந்தைக்கு மகன் மீது அதிகமான அக்கறை. படிப்பு விசயத்தில் மகன் இந்தக் கால மகனாக இருக்கிறான்.அதாவது நன்றாகப் படிக்காமல் அதிகமான மார்க் வாங்காமல் இருக்கிறான். தந்தை ¦¿¡ந்து போய் மகனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதம் எல்லாக் காலத்திற்குமான கடிதமாக உள்ளது.

ஆறேழு வயது மகனுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் சாரம் இதுதான்.

மகனே நீ வகுப்பில் ஆசிரியர் சொல்வதை கவனித்து எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுக்கொள்.இதுதான் கற்றுக்கொள்ள உரிய வயது.
நீ கவனமாகக் கற்றுக்கொண்டால் பிற்காலத்தில் நல்ல வேலைக்குப் போவாய். நீ இடுகிற வேலையை மற்றவர்கள் செய்வார்கள்.அது உனக்கு பெருமை , கௌரவம் எல்லாம் கொடுக்கும்.உடல் உழைப்பில் இருந்து உன்னை வெளியில் கொண்டுவந்துவிடும்.அதாவது நீ ஓர் அதிகாரியாக இருப்பாய்.இல்லாவிட்டால் நீ வேலைக்காரனாகிவிடுவாய்.அதை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை. ஆகையால் நன்றாகப் படி. படிப்புதான் வாழ்க்கையின் ஆதாரம்.

கற்க , கசடற என்பது திருக்குறள்.உலகத்தில் எல்லாரும் கற்கவே சொல்கிறார்கள்.அதில் அபிப்ராய பேதமில்லை.ஆனால் எதைக் கற்பது. கற்பது என்பது தெரிந்து கொள்வதுதானா?. யார் சொல்லி யார் கற்பது.முன்னோர் எழுதியிருப்பதை எல்லாம் கற்க வேண்டுமா?. பழமைக்கு புது உலகில் என்ன இடம்?

மனிதன் இயற்கையில் அறிவு உள்ளவந்தானே?. அவன் ஏட்டைப் படித்து - புத்தகம் படித்து - இன்டர்நெட்டில் படித்து என்ன தெரிந்து கொள்ளப் போகிறான்?

அரசியல்வாதி அர்த்தசாஸ்திரம் கற்க வேண்டியதில்லை.கலவி புரிய காம சாஸ்திரம் அவசியமில்லை.தத்துவம் பேச உபநிடம், கௌதமபுத்தர் உபதேசம் கற்க வேண்டியதில்லை.அவையெல்லாம் மனிதனின் அறிவிÂல் சிந்தனையில் சுரந்து கொண்டேயிருக்கிÈது. வ½¢கம் புரிய, பொருளீட்ட படிப்பு அவசியமா? அதுகூட தேவையில்லை.ஆனால் படிப்பு என்பது எதன் பொருட்டு?

கசடுகளை களைவதற்கு?

மனதில் அழுக்காறு வந்து சேராமல் இருப்பதற்கு.புத்தகங்கள் அதைத்தான் சொல்கின்றன.

அந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் புத்தகங்கள் நிறைந்த நூலகங்களை நிறுவினார்கள்.எல்லோரும் வந்து படிக்க வசதி பண்ணினார்கள்.ஆனால் சர்வாதிகாரிகள், கொடுங்கோலர்கள் புத்தகம் என்பது என்ன செய்கிÈது என்று தெரிந்து கொண்டார்கள்.அவர்கள் புத்தகங்கள் எழுதிய ஆசிரியரைக் கொன்றார்கள்.சி¨Èயில் போட்டார்கள்.கடைசியாகப் புத்தகங்களை தீயிட்டு கொளுத்தினார்கள்.

உலகத்தையே பதற வைத்து இட்லர் புத்தக் எரிப்பில் முண்ணனியில் இருந்தான்.புத்தகண்கள் நாட்டிற்கு அனாவசியம் என்பது அவý கருத்து என்று சொல்ல முடியாது.அவý ஒருபுத்தகம் எழுதி இருக்கிறான்.மெயின் கம்ப்.ஜெர்மன் பெயருக்கு எனது போராட்டம் என்பது பொருள்.அதே பெயரில் தமிழில் வெளிவந்திருக்கிறது.தனது புத்தகத்தை ஒவ்வொருவரும் படிக்க வேண்டுமென்பது அவன் ஆசை.

அவý சிறையில் இருந்தபோது வாயால் சொன்னதை கூட இருந்தவர்கள் எழுதியது எனது போராட்டம். ஆங்கில அரசாங்கம் அதைத் தடை செய்து வைத்திருந்தது.இட்லர் தன் புத்தகத்தில் என்ன சொல்லி இருக்கிறான். தன் கட்சிக்காரர்களுக்கு அவன் சொன்னது.

" நீங்கள் பெரிய பொய்யைச் சொல்லுங்கள் மக்கள் நம்பிவிடுவார்கள்.ஏனெனில் அவர்கள் தினம் தினம் சின்ன சின்ன பொய்யை பேசிக் கொண்டு ஜீவிக்கிறார்கள்.

கூட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு போகாதீர்கள். மக்களை காக்க வையுங்கள்.உங்களை அவர்கள் ஆவலோடு எதிர்பர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

நன்றாக இருட்டிய பின்னர் கூட்டங்களுக்குச் செல்லுங்கள்.ஆவேசமாகப் பேசுங்கள். உங்கல் பேச்சு மக்கû உணர்ச்சியை கிளர்ந்தெழ வைக்க வேண்டும்."

இந்தப் புத்தகத்தை மக்கள் படிக்க வேண்டுமென்று ஆணையிட்டான்.அதன் பக்கத்தில் மற்ற புத்தகங்கள் இருக்கக்கூடாது என்று தீயிட்டு எரித்தான்.அவன் காலத்தில் ஐரோப்பாவிலேயே படித்தவர்கள் நிறைந்த தேசம் ஜெர்மனி.புத்தகத்தை எரிக்கிறவனுக்கு நல்லது கெட்டது தெரியாது என்பது தான் சரித்திரம்.

இலங்கையில் சிங்கள வெறியர்கள் புகழ்பெற்ற யாழ் நூலகத்தை எரித்தார்கள் . புத்தகத்தை எரிப்பது தொடர்ந்துதான் நிகழ்கிÈது.ஆனால் வெற்றி தீக்கு இல்லை.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13 , Article 14 ,Article 15 ,Article 16 ,Article 17,Article 18,Article 19 ,Article 20


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...