அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் 0 டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு; பிரபல தாதா உள்பட 4 பேர் உயிரிழப்பு! 0 கண்ணகி- முருகேசன் வழக்கு: பெண்ணின் அண்ணணுக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள்! 0 நன்றி தலைவா!- அமெரிக்க பங்கு சந்தையில் ரஜினி ரசிகர்! 0 அரசை தேடி மக்கள் வந்த காலம் போய் தற்போது மக்களை தேடி அரசு வருகிறது: மு.க.ஸ்டாலின் 0 கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: 13 பேர் குற்றவாளிகள்! 0 தமிழகம் முழுவதும் 450 ரவுடிகள் கைது! 0 ஆணைப்புளி பெருக்க மரம் குறித்த கல்வெட்டு திறப்பு! 0 ஜிஎஸ்டி கூட்டத்தில் பி.டிஆர் பங்கேற்றிருக்க வேண்டும்: திமுக எம்.பி. கருத்து 0 நடிகர் அஜித்தின் வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 0 பெகாசஸ் உளவு விவகாரம்: விசாரணைக் குழுவை அமைக்கிறது உச்ச நீதிமன்றம் 0 அடுத்தடுத்த ஆள்மாறாட்ட புகார்; மோசடிகளின் கூடாரமான நீட்: ராமதாஸ் 0 சசிகலாவின் நிலத்தை கையகப்படுத்தும் உத்தரவு ரத்து! 0 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளி திறப்பு இல்லை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி 0 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: லாலு பிரசாத் யாதவ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சுஜாதாவின் பத்து புத்தகங்கள்

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   09 , 2006  22:22:53 IST

சுஜாதா எழுதிய பத்து புத்தகங்கள் சென்னையில் இன்று வெளியிடப்பட்டன. பத்தில் ஆறு புத்தகங்கள் புதியவை.

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை அரங்கில் கவிஞர் வைரமுத்து தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பத்து புத்தகங்களையும் அவரே வெளியிட்டார். சுஜாதாவின் நாடகங்கள் என்ற புத்தகத்தை பூரணம் விஸ்வநாதனும் , சுஜா¾¡வின் மர்மக்கதைகளை ரா.கி. ரங்கராஜனும் ,புதிய நீதிக்கதைகளை திலகவதியும் ,வண்ணத்துப்பூச்சி வேட்டையை வாஸந்தியும் , வஸந்த்! வஸந்த்! புத்தகத்தை சுதாங்கனும் ,திரைக்கதை பயிற்சி புத்தகத்தை இயக்குனர் ஷங்கரும் ,திருக்குறள் புதிய உரையை பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் , º¢லப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் புத்தகத்தை சுஜாதாவின் நண்பர் தேசிகனும் பெற்றுக்கொண்டனர்.

சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகத்தை பெற்றுக்கொள்வ¾¡க இருந்த கார்டூனிஸ்ட் மதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சமநிலை சமுதாயம் பத்திரிக்கை ஆசிரியர் ஜாபதீன் பெற்றுக்கொண்டார் . அதேபோல ரத்தம் ஒரே நிறம் புத்தகத்தை பெறுவதாக இருந்¾ ஜெயமோகனும் உடல்நலக்குறைவால் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக கூத்துபட்டறை முத்துசாமி அதை பெற்றுக்கொண்டார்.

புத்தகங்களை பெற்றுக்கொண்டவர்கள் அந்தந்த புத்தகங்களை பற்றி ஒரு சிறிய கருத்துரையை வழங்கினார்கள். வைரமுத்துமட்டும் இதில் விதிவிலக்கு .

புதிய நீதிக்கதைகள் பற்றி பேசிய திலகவதி," சிலர் திரும்ப திரும்ப ஒரே மாதிரியான சொல்லாடல்களை ,வார்த்தைகளை,சொல்கட்டுமானத்தை பயன்படுத்துவார்கள் அது அவர்களுக்கு ஒரு அடையாளமாகிவிடும் . சுஜாதா அப்படியல்லாமல் ,ஒருபக்கம் சிப்பில் எழுதிக்கொண்டே இன்னொரு பக்கம் குலசேகர ஆழ்வார் பற்றியும் எழுதுகிறார் பழைய கதைகளை தற்காலத்துக்கு ஏற்ப, எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான மானுட உள்ளீடுகளைக்கொண்ட புதிய பாணியில் சொல்லவேண்டியிருக்கிறது. கவிஞர் அறிவுமதியின் காக்கை இந்த பாணிதான் .ஞானசூரியபகவான் என்பவரும் இது போல எழுதியுள்ளார். புதிய நீதிகளை சொல்வதற்கு தைரியம் வேண்டும்.சமகால விஷயங்களை சூடான விஷயங்களைப்பற்றியும் சுஜாதா தொட்டிருக்கிறார். கூட்டணி என்பது சுயநலம் தான் என்று ஒரு கதையில் ஒரு நீதியை சொல்வார் சுஜாதா அது எவ்வளவு பெரிய மகாவாக்கியம் அதன்பின் எவ்வளவு ஆழம் இருக்கிறது என்பதை பாருங்கள்" என்று கூறினார்.

சுஜாதாவின் மர்மக்கதைகள் குறித்து பேசிய ரா.கி.ரங்கராஜன் குமுதத்தில் தான் ஆசிரியர் குழுவில் இருந்த போது சுஜாதாவின் கதைகளை பதிப்பித்த அனுபவத்தை விவரித்தார்,"அப்போது குமுத்ததுக்கு வரும் சுஜாதாவின் எந்த கதையையும் இரண்டு வரி படிôபேன் அதற்கு மேல் தாங்காது கடைசி பத்திக்கு போய் அதை படிப்பேன். ஆசிரியர் எஸ்ஏபி கதையை தொடக்கத்திலிருந்து முறையாக படிக்காமல் கடைசி பத்திக்கு தாவி அதை படிக்கிறீர்கள் என்பார்". என்று ரா.கி.ரங்கராஜன் கூறினார். மேலும் ," பங்காளி காய்ச்சல் போல எழுத்தாளர் காய்ச்சல் என்று ஒன்று உண்டு. இவன் நன்னாயிருக்கானே அவன் நன்னாயிருக்கானே இவன் நன்னாவேயிருக்கானே என்று சொல்வார்கள் பாரதியைப்போல் கம்பனைப் போல் சுஜாதாவையும் அப்படி யாரும் சொல்லமாட்டார்கள்" என்றார் ரங்கராஜன்.

வண்ணத்துபூச்சி வேட்டை நாவலை பற்றி பேசிய வாஸந்தி ,"சுஜாதாவின் பாத்திரங்களில் முக்கியமானது பெரும்பாலும் ஆண்கதாபாத்திரம் தான் .தமிழ் சினிமாவைப்போலவே பெண் பாத்திரங்கள் சுஜாதாவின் எழுத்துகளிலும் இருக்கும். ஆணின் பார்வையிலேயே எழுதும் சுஜாதா இதில் பெண் உணர்ந்து எழுதியது போல் இருக்கிறது.சென்ற நூற்றாண்டின் முடிவில் தன் கணவனுக்கு கீழேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் போதும் என்று ஒரு பெண் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது "என்று குறிப்பிட்டார்.

சுதாங்கன் பேசும்போது "வஸந்த் கணேஷ் பாத்திரங்களுக்கிடையிலான உரையாடலையே தனி புத்தகமாக போடலாம் .சுஜாதாவுக்குள் ஒரு கவிஞரும் இருக்கிறார்.சர்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி அவர் எழுதிய கவிதை பரவலாக கவனிக்கப்பட்டது" என்று கூறினார்.

பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசும்போதே தொடர்ந்த நகைச்சுவை துணுக்குகளுக்கு இடையே சொல்ல வந்த விஷயங்களை தூவிவிட்டார் .சுஜாதாவின் திருக்குறள் உரைபற்றி மிகவும் சிலாகித்து அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் கடைசி நேரத்தில் திரைக்கதை பயிற்சி புத்தகம் வெளியிடப்பட்டது .அதை பெற்றுக்கொண்ட இயக்குனர் ஷங்கர் ,நேரப்பற்றாக்குறையால் புத்தகத்தை சரிவர படிக்கமுடியவில்லை என்றார் மேலும் அவர் ,"திரைக்கதை எழுதுவது எப்படி என்பதை பற்றி எனக்கு சொல்லத்தெரியாது அதற்காக நான் சினிமாவிற்குள் வரவில்லை வேறு ஒரு துறையிø சேருவதற்காத்தான் வந்§¾ன் என்னை பொருத்தவ¨Ã எது நல்ல தி¨Ãக்கதை என்றால் பக்கத்துவீட்டுக்காரர் ,நண்பர்களிடம் சுவாரஸ்யமாக கதை சொல்லி அவர்களை சந்தோஷப்படுத்தும் கதைதான் "என்றார்.

சிலப்பதிகாரம் ஒரு எளிய அறிமுகம் பற்றி கவிஞர் வைரமுத்து பேசினார். வாழ்வு ,மொழி ,இனம் குறித்து சுஜாதாவின் கருத்தியலை தள்ளிவிட்டு பார்த்தால் அவரை நாம் விட்டுவிட முடியாது. பழைய வேர்களும் புதிய பூக்களும் சேர்ந்த கலவை சுஜாதா.தொழில்நுட்பக்கல்வி வளர்கிற நாட்டில் மொழி பின்னுக்கு தள்ளப்படுகிறது. மொழி என்பது வயிற்றுக்கு தானா ? டாலர்களுக்குத்தானா? அது இனத்தின் ,வரலாற்றின் அடையாளம் அது. நூறாண்டுகளுக்கு ஒரு முறை மொழியிலிருந்து பத்து விழுக்காடு சொற்கள் திரிந்து வருகின்றன.காலத்தின் தூசி படிந்து திரிந்து விடுகின்றன. படைப்புகளின் மூல ஆசிரியர் உணர்ந்து எழுதுகிறா÷ உரையாசிரிய÷ அறிவால் எழுதுகிறா÷ பலர் உரை எழுதும்போது அனுமாÉத்தில் எழுதுகின்றனர்" என்றார்

இப்படி சுஜாதாவின் மாலைப் பொழுதாக மலர்ந்த அந்¾ விழாவில் மனதை நெருடும் ஒரு விஷயமும் நடந்தது. சுஜாதாவின் நாடகங்களை பற்றி பேசிய பூரணம் விசுவநாதன் ,"திருவல்லிக்கேணியில் நாங்கள் ஒரு நாடகம் நடத்திக்கொண்டிருந்தோம் அப்போது சுஜாதா வந்திருப்பதாக சொன்னார்கள் எனக்கு சந்தோஷமும் திகைப்பும் ஏற்பட்டது.நாடகம் முடிந்து ஒப்பனை கலைக்கும் நேரத்தில் உயரமான சுஜாதா வந்து ,என்னிடம் சிறு சிறு நாடகங்கள் இருக்கின்றன அதை பயன்படுத்திக் கொள்ளமுடியுமா என்று கேட்டார். உடனே ஒப்புக்கொண்டோம்..."என்று பேசினார். உடனே ஏ§¾¡ மறந்தது போல மீண்டும் பேச்சைத் தொடர்ந்த விஸ்வநாதன்,"என்னுடைய சிறு பிராயத்தில் நாடகத்துக்கு எப்படி ஈர்க்கப்பட்டேன் என்று தொடங்கி அவரது நாடக வளர்ச்சி பற்றி பேசினார். அப்படி தொடர்ந்து மீண்டும் மீண்டும் பேசியதையே திரும்ப பேசினார். அவருக்கு வயது 85 என்கிற நிலையில் என்ன பேசினோமென்பது தெரியாமலும் நிகழ்ச்சிக்கு நெருக்கத் தொடர்பில்லாமலும் அவரது பேச்சு இருந்தது. மேடையிலிருந்தவர்கள் அதை சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. கடைசியில் ஒருவாறாக அவர் பேசி முடித்தார் மூத்த நாடகக்கலைஞரான அவர் தனது பேச்சில் இடறியபோது பார்வையாளர் மாடத்திலிருந்து விரும்பத்தகா¾ கைதட்டல்களும் சிரிப்பொலிகளும் எழுந்தன. அந்¾ மாலைப்பொழுதில் நடந்¾ நிகழ்ச்சியில் அந்த சத்தம் மனதை விட்டகலாத உறுத்தலாக அமைந்துவிட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...