அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ்த்தாய் வாழ்த்து: கலைஞர் திருத்தியது செல்லும் - நீதிமன்றம்! 0 பஞ்சாப் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! 0 இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு! 0 ஹைதராபாத்: ராமானுஜரின் பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் பிரதமர்! 0 தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு! 0 அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி 0 வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று! 0 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான -2வது ஒருநாள் ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி! 0 வேலையிலிருந்து தப்பிக்க இப்படி எல்லம் செய்ய முடியுமா? 0 டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை - பிரதமர் மோடி 0 சாய்னா நேவால் குறித்து அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் 0 நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று! 0 தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடக்கம்: மு.க.ஸ்டாலின் 0 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு 0 யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

லஞ்சம் வாங்கிய எம்.பி.க்களின் கதை - சா.கந்தசாமி

Posted : புதன்கிழமை,   மார்ச்   01 , 2006  08:21:41 IST

பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கி வீடீயோ படத்தில் சிக்கிக் கொண்டவர்களை லஞ்சம் வாங்கியவர்கள் எனச் சொல்லி பாராளுமன்றம் தகுதி நீக்கம் செய்துவிட்டது. அதாவது எம்.பி. பதவியைப் பறித்துவிட்டது. உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்¨¸யை எடுக்க வேண்டிய அவசியம் பாராளுமன்றத்திற்கு ஏற்பட்டுவிட்டது என்று அமைச்சர் அறிவித்தார். நமது இயல்பு வேகத்திற்கு இணங்கிவராத நடவடிக்கைதான். பெரிய அளவில் சிக்கல் வரும் போது விசாரணைக் கமி„ன் போட்டு பிரச்சினையை கிடப்பில் போடுவதுதான் வழக்கம். சிக்கலில் மாட்டிக்கொண்ட எம்.பி. க்களும் - அரசியல் கட்சிகளும் அதைத்தான் எதிர்பார்த்தன. ஆனால் அரசாங்கம் உறுதியாக செயல்பட்டது. செயல்படுகிற அரசாங்கம் என்று மக்களிடம் பிரகடனப்படுத்திக்கொள்ள தமக்குக் கிடைத்த சந்தர்பத்ததை அது சரியாக பயன்படுத்திக்கொண்டது.

எதிர்கட்சிகள் அதைத் தள்ளிப் போடப்பார்த்தன. ஆனால் முடியாமல் போய்விட்டது. பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் நீதிமன்றம் போகப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். தீர்ப்பு எப்படி §Åண்டுமானாலும் இருக்கலாம்.

பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க சில எம்.பி.க்கள் பணம் வாங்குவது புதிதில்லை. அது பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதுதான். வீடீயோ வந்ததால்தான் மாட்டிக்கொண்டுவிட்டார்கள். அதுவும் பொறி வைத்து புலனாய்வு செய்கிறவர்கள் திட்டமிட்ட செயல் என்கிறார்கள். அது நீதிமன்றத்தில் நிற்குமா என்பது கேள்வி தான்.

மக்கள் பிரதிநிதிகளாக எம்.பி.ìகளில் சிலர் பெரிய வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் அதிகாரâ÷வமற்ற பிரதிநிகளாகவே செயல்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு. பெரிய வர்த்தக நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப அரசின் கொள்கை முடிவுகளை ±டுக்க வைப்பதிலும் - எதிர் நிறுவனத்திற்கு பாதகமான கொள்கை வகுப்பதிலும் சிலர் முக்கியமான பங்காற்றி இருக்கிறார்கள். அதற்காக அவர்களின் தேர்தல் செலவு, இதர தேவைகளையும் நிறுவனங்களே பார்த்துக்கொண்டது.

இந்தியாவின் அரசியல் சூழ்நிலை மாறியதும் மாநில கட்சிகள் வலுபெற்றதும் ஒரு எம்.பி. இரண்டு எம்.பி-க்களை சார்ந்து இருப்பது முடியாமல் போய்விட்டது. அதோடு அவர்களுக்குச் செய்கிற செலவும் கட்டுப்படியாக இல்லை. பெரிய சுமையாகிப் போன எம்.பி. பராமரிப்பு என்பதை தொழில் வர்த்தக நிறுவனங்கள் கைவிட்டன.

தொழில் வேறு, அரசியல் வேறு -- வித்தியாசம் பழைய கொள்கையாகிவிட்டது. இன்னொரு ஆளை சார்ந்து இருப்பதை விட தானே பாராளுமன்றம் சென்றால் தன் கட்சி தேவை ±ýÉ என்பதை தெளிவாக எடுத்துரைக்கலாம் என்று நிறுவனங்கள் நினைக்க ஆரம்பித்தன. அதோடு தொழில் முனைவோர் நன்கு படித்து உலகத்தின் நீக்குப்போக்குகளை அறிந்தவர்களாக முன்Ò ±ôபோதையும்விட அதிகமானவர்கள் தொழிலதிபர்களாக வந்தார்கள். அவர்களுக்கு தாங்களே எம்.பி. ஆனால் ±ýÉ என்று தோன்றியது.

அது செயல் வடிவம் பெறுவதில் சிக்கல் ஏதும் இல்லை. அறிவு, திறமை, பேச்சாற்றல். பணவசதி, எதிர்பார்த்ததை விட சுலபமாக எம்.பி.ஆக்கிவிட்டது. ஒவ்வொரு மாநில கட்சியும், போட்டி போட்டுக் கொண்டு தொழில் அதிபர்களை எம்.பி. ¬க்கியது. அது புதுக்கலாச்சாரம். பாராளுமன்றத்தில் அவர்கள் Å¢Äìகா விட்டாலும் கட்சிகளின் நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபடாவிட்டாலும் கட்சிக்கு பணம் தரும் ஆள்களாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் சுயகாரியத்தை சுலபமாக முடித்துக் கொள்கிறார்கள். எனவே பாராளுமன்றத்தில் பெரிய சிக்கல் வருவதில்லை.

எŠ.கே.பொற்றைக்காடி என்ற மலையாள எழுத்தாளர் இருந்தார். முற்போக்கு எழுத்தாளர். சாகித்ய அகாதமி ஞானபீட விருது பெற்றவர். ஒரு முறை பாராளுமன்றத்திற்கு கம்äனிஸ்டு ஆதரவோடு தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்றவர்.

சென்னையில் அவரை சந்தித்தேன். மலபார் பகுதியைச் சேர்ந்தவர். தன்னை மலையாள எழுத்தாளர் தமிழ் எழுத்தாளர் என்று சொல்வதாகச் சொன்னார். மலபார் பல ஆண்டுகளாக சென்னையில் ஒரு பகுதியாக இருந்தது. பொற்றைக்காடிடம் எம்.பி. அனுபவத்தைப் பற்றி கேட்டேன். இலக்கியத்தைப் பற்றி பேசுவதில் இருந்த ஆர்வம் எம்.பி. அனுபவத்தை பற்றி பேசுவதில் இல்லை.

என்ன எம்.பி. பதவி. தனக்கு பிடிக்காத தொழிற்சாலை பற்றி அடுத்த ஸ்டே„ன் இரயில்வே சாப்பாடு மோசம் என்று கேள்வி வேண்டுமென்று வந்து நிற்பார்கள் என்றார்.

மனிதர்களின் கதை என்றும் முடிவதில்லை. அது வேறு வேறு ரூபத்தில் நடந்து கொண்டே இருக்கிறது. அதைத் தான் கேள்விக்கு லஞ்சம் வாங்கிய எம்.பி. க்களின் கதை சொல்கிறது.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13 , Article 14 ,Article 15 ,Article 16 ,Article 17,Article 18,Article 19


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...