அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் புதிதாக 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 0 தமிழன் இந்துவே இல்லை - சீமான் 0 தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள் - ராகுல் காந்தி எம்பி! 0 ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி! 0 சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! 0 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே! 0 உடன்பிறப்பே- திரை விமர்சனம் 0 பட்டாசு விற்பனைக்கு தடை: 4 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 மசின குடியில் டி 23 புலி பிடிபட்டது! 0 வீதிகளில் வீசப்படும் ஏர் இந்தியா ஊழியர்கள்: சு.வெங்கடேசன் கண்டனம் 0 எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்ற இறுமாப்பு ஒருபோதும் இல்லை: மு.க.ஸ்டாலின் 0 கருக்கலைப்புக்கான காலஅவகாசம் 24 வாரங்களாக நீட்டிப்பு! 0 தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி! 0 அதிமுக தலைமை அலுவலகம் பெயர் மாற்றம்! 0 இந்திய நடுத்தர வர்க்கத்தினரிடம் பணம் இருக்கிறது: நிர்மலா சீதாராமன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மாமழை போற்றுதும் - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : புதன்கிழமை,   மார்ச்   01 , 2006  08:25:28 IST

மழை வான் அமிர்தம்: மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பாடியுள்ளார். மழை தான் நீரைக் கொடுக்கிறது. நீரின்றி அமையாது உலகம்.

தண்ணீர் எளியது. தானாகக் கிடைப்பது. தாகம் தணிப்பது. வீட்டிற்கு விருந்தினர் வந்தால் முதலில் கொடுப்பது தண்ணீர். அது ஒரு மரபு பழக்கம். ஆனால் தண்ணீர் காசுக்கு வாங்கும் பொருளாகிவிட்டது. பாலை விட தண்ணீர் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது. காசுக்குத் தண்ணீர் வாங்கிக் குடிப்பது உடல்நலம் பேணும் கலாச்சாரமாகிவிட்டது. வீட்டிற்கு அரிசி, உப்பு வாங்குவது மாதிரி தண்ணீர் வாங்கப்படுகிறது.

தண்ணீர் குடிப்பது மட்டுமல்ல. அதன் தேவை மனிதர்களுக்கு பலவிதமாக இருக்கிறது. எனவேதான் தண்ணீர் அத்தியாவசமானதாகிறது. தண்ணீரைத் தேடி மக்கள் அலைகிறார்கள்.

இந்திய பெருநகரங்களிளேயே குறைவாக தண்ணீர் பயன்படுத்துவது சென்னைதான். சிக்கனம் காரணமில்லை. தேவைக்கான தண்ணீர் இல்லை. அதாவது நகராட்சி குறைவான தண்ணீர் கொடுக்கிறது.

சென்னை மக்கள் தண்ணீர்க்காக மாநகராட்சியை சார்ந்து இருந்த காலம் போய்விட்டது. தங்கள் தேவைக்கான தண்ணீரை தேடி அலைகிறார்கள். தண்ணீர் என்பது இயற்கையானது. அது விஞ்ஞான முறையில் உற்பத்தி செய்யக்கூடியது இல்லை. எனவே தண்ணீரை தேடி அடைகிறார்கள். தண்ணீர் எங்கே இருக்கிறது? கடலில் இருக்கிறது. அது கண்களுக்குத் தெரிகிறது. ஆனால் கடல் தண்ணீர் உப்பு. குடிக்க முடியாது. குளிக்க முடியாது. அதை தனிப்பட்ட ஆளால் நல்ல நீராக மாற்ற முடியாது. அதாவது மாற்ற பணம் செலவு செய்ய முடியாது. அôபுறம்; தண்ணீர் எங்கே உள்ளது? âÁ¢யின் அடியில் ஆழ்துளை பம்பு போட்டு தண்ணீரை எடுக்கிறார்கள்.

எடுக்க எடுக்க குறைகிறது? விஞ்ஞானிகள், சுற்றுப்புறச்சூழல் வாதிகள் மக்களை எச்சரிக்கிறார்கள். ஆழ்துளை பம்பு போடுவது சுரண்டல். அடுத்தத்தலைமுறையைப் பாதிக்கக் கூடியது. எனவே கவனமாக இருங்கள் என்கிறார்கள். அதாவது மழை பொழியும் போது âமியில் நீரைத் தேக்குங்கள் ஏரி, குளம் போன்றவற்றை பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள். ஆற்றை அதன் போக்கிலேயே விடுங்கள் அது வளமாக வைத்து இருக்கும் என்கிறார்கள். வளர்ச்சியும், மேம்பாடும் சுற்றுப்புறச் சூழல் என்பதை கவனத்தில் கொள்வது இல்லை. இரண்டும் ஒன்றுக்கொன்று ஒன்று எதிர்.

சென்னை கூவம் நதியில் பச்சையப்பா முதலியார் தினமும் குளித்துவிட்டு கந்தகோட்டம் என்கிற கந்தசாமி கோவிலுக்குச் சென்றார் என்பது சரித்திரம். அது இனி சாத்தியம் இல்லை. ஆனால் மழை பொழியும் போது கூவத்தில் தண்ணீரை ஓட விடுவது கடமை. முக்கியம் தேவை. ஆற்றை அடைத்து கட்டிடம் யாருக்கும் உரிமை இல்லை.

இரண்டு மாதமாக சென்னையில் மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு நல்ல மழையை மாநகரம் காண்கிறது. ஆனால் சென்னை மிதந்தது. அது யாரின் பிழை? மழையின் பிழையன்று. மனிதர்களின் பிழை. மக்களின் பிழை. அரசு இயந்திரத்தின் பிழை. மொத்தத்தில் மெத்தனமும், முன்நோக்கிய பார்வையும் இல்லாத சமூகத்தின் பிழை.

நதியின் கால்வாயில் கட்டப்பட்ட கட்டிடங்கள், வீடுகள், ஓட்டல்கள் என்று தேடி இடிக்கப்போகிறார்கள். நவீன சாதனங்கள் கட்டிடங்களை இடிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக ஏன் தினம் தினமும் எழுந்த கட்டிடங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை? மழையே வராது என்று நினைத்துக்கொண்டோமா? உயிர்பலி, சேதம், இழப்பு எல்Ä¡ம் மழையால் வந்தது இல்லை. மழையை நாம் எதிர் பார்க்கவில்லை. மழை என்பதே இல்லாமல் வாழ்கிறோம் என்ற நினைப்பில் இருந்தோம். மாமழை வந்தது. கடுமையாக பொழிந்தது. நம்முடைய மூடத்தனம், பேராசை, அகம்பாவம் ஆகியவற்றின் மீது பொழிந்து இருக்கிறது. மூடி இருந்த கண்கள் திறக்கிறது.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.


சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13 , Article 14 ,Article 15 ,Article 16 ,Article 17,Article 18


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...