???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை 0 அரசியலில் சிறந்த வாய்ப்பினை பா.ஜ.க. எனக்கு ஏற்படுத்தி கொடுத்தது: தமிழிசை 0 மாணவி ஃபாத்திமா மரண வழக்கு: கேரளத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை 0 திருமாவளவனை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது: பா.ரஞ்சித் 0 மாவட்ட ஆட்சியரை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு! 0 காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திப்பு 0 நித்தியானந்தா மீது கடத்தல், மிரட்டல் பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு! 0 காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கம்! 0 மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதுகைத் தென்றல் - சிற்றிதழ் அறிமுகம் 17

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   03 , 2006  10:55:23 IST

" எங்கிருந்தோ ஒரு சூரியகாந்தி விதையை
அவன் கொண்டு வந்தான்
உங்களிடம் உள்ளங்கை அளவு
நிலமில்லை அதை ஊன்றுவதற்கு.
- கல்யாñƒ¢
( புதுகைத் தென்றல்'05)

' புதுகைத் தென்றல் எனும் தமிழ் மாத இதழ் சமூக, இலக்கிய, பண்பாட்டுத் திங்கள் இதழாக மலர்கிறது.

இது வேறு எந்த இதழுக்கும் போட்டியானது அல்ல.அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்ற ஆராவார ஆர்பரிப்பு எதுவுமின்றி வெளியிடப்படும் இவ்விதழ் தரமான இதழ் ஒன்றை வெளியிடவேண்டும் என்ற தணியாத வேட்கையின் வெளிப்பாடாகும்.ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் கூச்சமின்றி படிக்கவும், சமூகத்தில் உள்ள பல்துறையினருக்கும் பயனுள்ள வகையில் இதழைக் கோண்டுவருவதே எங்கள் நோக்கம் என்கிறார் ஆசிரியர் தருமராசன்.

இதுவரை 27 இதழ்கள் வெளிவந்துள்ளன. கவிதை, சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, புத்தக மதிப்புரை என வெளிவந்து கொண்டிருக்கிறது.

சிட்டி, வல்லிக்கண்ணன், க. வேழவேந்தன், ஏர்வாடி .எஸ். ரா¾¡கிருஷ்ணன், த.ராமலிங்கம், கே.ஜி. ராஜேந்திரபாப், க.த. திருநாவுக்கரசு, விஜயகிருஷ்ணன் போன்றோரின் படைப்புகள் இவ்விதழில் வெளியாகிவருகின்றன. வரலாற்று ஆவணங்கள் தொடர்À¡ன கட்டுரைகள் இவ்விதழின் சிÈப்பு எனலாம். 15 ஆம் நூற்றாண்டிலேயே மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தும் புதுக்கோட்டை கல்வெட்டு, 2300 ஆñடுகளுக்கு முற்பட்ட தமிழ் கல்வெட்டு, கடற்கோளும் மாமல்லபுரமும் போன்ற பலமுக்கியமான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

"விழிப்புணர்வில் சற்று சுணக்கம் ஏற்படும் போது சீடனை அடிக்க குருவுக்Ì எவ்வளவு உரிமை உண்டோ அதே உரிமை சீடனுக்கும் உண்டு என்பது ஜென்னின் சிறப்புகளில் ஒன்று. எதையும் கற்றுத்தராத குருவுக்கு ஒரு ஜென் மாணவனால் தான் நன்றி கூறமுடியும் ஏனென்றால் சுயமான வளர்ச்சிக்கு அவர் வழிகாட்டினார்" என ஜென் பௌத்தத்தை விளக்கும் ஜென் பௌத்தம் ஓர் அறிமுகம் என்ற தொடரை ஞானாலயா .கிருஷ்ணமூர்த்தி எழுதி வருகிறார்.

"முதலில் மேல்மாவை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மைதாவில் சிறிது உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி..." என சிற்றிதழ்களுக்கு சற்றும் பொருந்தாத ' படிக்க, சமைக்க, சுவைக்க' என்ற சமையல் தொடரையும், 'வளம் தரும் வாஸ்து' அழகுக் குறிப்புகள் போன்ற தொடர்களையும் வெளியிட்டு சிற்றிதழ்களில் ஒரு வெகுசன இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது 'புதுகைத் தென்றல்'.

ஆசிரியரைப் பற்றி:

அறுபது வயதைத் தாண்டிவிட்ட புதுகைத் தருமராசன் பாரத ஸ்டேட் வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.படைப்புடனும், இதழுடனும் தொடர்புடைய இவர், மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், தொÆ¢ற்சங்க வாதியாகவும் பணிபுரிந்தவர்., 'சிந்தனைக்Ì சில கட்டுரைகள்', 'முயற்சிகளே முன்னேற்றம்'
என்ற நூல்கள் உட்பட பலநூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

சந்தா விபரம்:

தனி இதழ் : ரூ. 10/-
ஆண்டு சந்தா: ரூ.120/-
ஆயூள் சந்தா: ரூ.1000/-

முகவரி:
ஆசிரியர்,
புதுகைத் தென்றல்,
13-ஏ, ( புதிய எண்: 24)
திருனகர் முதன்மைச் சாலை
வடபழனி,
சென்னை - 26

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.


கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...