அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எதற்கு? - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : புதன்கிழமை,   மார்ச்   01 , 2006  08:27:40 IST

கல்¡ணம் எதற்கு? என்று பெரியார் கேள்வி கேட்டு , கலவி செய்வதற்கு என்று தானே பதிலும் சொன்னார். கல்யாணம் கலவி செய்வதற்கு மட்டுமல்ல. அது குடும்பம் - குழந்தைகள், சமூகம் என்பதை நிலைநாட்டுவதற்கு. குடும்பம் ஓர் அமைப்பு. நிறுவனம்.குடும்பம் சீர்குலைகிறபோது சமூகம் பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அதில் முதல் பிரச்சினை கணவன் - மனைவி பிரிவு.தனித்தனியாக இருந்தவர்கள் ஒன்று கூடி நிர்மானித்த குடுõபத்தில் இருந்து மறுபடியும் தனித்தனியாக போகிறார்கள்.அப்படிப் போனவர்கள் மறுபடியும் தங்கள் ஆசை, தேவை , விருப்பத்தின் அடிப்படையில் இன்னொரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளலாம்.இல்லாவிடில் தனித்தும் வாழலாம். அது அவர்கள் விருப்பம்.

குடும்பம் சிதைகிற போது பாதிக்கப்படுகிறவர்கள் குழந்தைகள்.அவர்கள் போக்கிடம், படிப்பு.

படிப்பு எதற்கு?

வேலைக்குப் போக . பணம் சம்பாதிக்க என்றாகிவிட்டது.ஆனால் படிப்பின் நோக்கம், வேலையும், பணம் சம்பாதிப்பதும் மட்டுமல்ல.அதன் முதல் நோக்கம் நல்ல குடிமகனாக - எதையும் திறமையுடன் செய்யக் கூடியவனாக ஆக்குவதுதான். அதில் இருந்து வேலையும், வேலையில் இருந்து பணமும், பணத்திலிருந்து கௌரவமும், பதவியும் கொண்ட வள்ளல் என்ற பட்டமும் வருகின்றன.

பணம் தான் வாழ்க்கையின் ஓரே லட்சியமாகிவிட்டது. அதுவே அடையக் கூடிய இலக்கு. பணம் முதல் தரக் கல்வியைக் கொடுக்கிறது.அழகிய பெண்ணை வாங்கக் கூடியதாக்குகிறது.அப்புறம் நேர்த்தியான குடியிருப்பு,சொகுசான கார், இதர வசதிகளைக் கொண்டுவந்து கொடுக்கிறது. எனவே பனம் சம்பாதிப்பது வாழ்க்கையின் முதலும் முடிவுமான வேலையாகிவிட்டது.அதற்கு படிப்பு வேண்டும்.

படி! படி! என்பது பெற்றோர்களின் தாரக மந்திரமாகிவிட்டது. நாட்டின் பலபகுதிகளிலும் படிப்பு தொழிற்சாலைகள் ஏற்பட்டுள்ளன.

அவற்றில் வசதி படைத்தவர்கள் அதாவது பணம் படைத்தவ÷கள் - தங்களின் மகனும்,மகளும் தங்களைவிட அதிகமான பணத்தை சின்ன வயதிலேயே சுருட்ட வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள் - கொண்டு போய் சேர்த்து விடுகிறார்கள்.

படிப்பு என்பது மதிப்பெñ என்றாகிவிட்டது. புரிந்து கொள்ளும் திறனோ சுய சிந்தனையோ வேண்டாம். பாடப்புத்தகத்தைப் படித்து மதிப்பெñ வாங்கும் சுருக்கு வழிக்கு பள்ளிக்கூடங்கள் பயிற்சி தருகின்றன.எங்கு பயிற்சி சிறப்பாக உள்ளதோ- அதுவே சிறந்த பள்ளிகூடம் என்றாகிவிட்டது.

இம்மாதிரியான பள்ளிக்கூடங்களில் தங்களின் மகன் மகள்களைச் சேர்க்க துடிப்போடும், ஆர்வத்தோடும் பெற்றோர்கள் வந்து நிற்கிறார்கள். ஆனால் சிறுவர், சிறுமிகளிடம் அந்த ஆர்வமும் துடிப்பும் இல்லை. புதிய இடத்தில் தாய், தந்தை, சகோதர சகோதரிகளை, நñபர்களை பிரிந்து வந்திருப்பதின் ஏக்கம் தெரிகிறது. ஆனால் பெற்றோர்களுக்கு அவர்களின் பேராசையே முன்நிற்கிறது. நூறு பேரில் தன் மகன் முதல்வனாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்.அவன் விருப்பம், ஏடுபாடு என்பதற்கு இடமேயில்லை.

படிப்பு என்பது வாழ்க்கைìகு உதவக்கூடியது.வழிகாட்டக் கூடியது.ஆனால் படிப்பு என்பதிலேயே வாழ்க்கை முடிந்து விடுவதில்லை.வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ள வழிகாட்டுவதுதான் படிப்பு.

படிப்பு மொழி சார்ந்ததும் இல்லை. அதாவது எந்த மொழியிலும் அறிவு இல்லை.அÈ¢வை அடைய மொழி ஒரு காரணமாக உள்ளது. ஏனெனில் மொழிக்கு முன்னால் அÈ¢வு உண்டானது.மொழி இல்லாமல் தான் மனிதன் சிந்திக்கிறான். தனது சிந்தனையை , கருத்தை, மொழியில் பின்னால் மாற்றிச் சொல்கிறான். எந்த மொழியில் சரளமாகச் சொல்ல பயிற்சி பெற்றிருக்கிறானோ அதில் சரியாகச் சொல்கிறான். இருந்தாலும் மொழியின் மூலமாக மனித சிந்தனை வளம் முழுவதும் இன்னும் சொல்லப்படவில்லை. ஏனெனில் மொழி மனிதனின் கண்டுபிடிப்பு.

கண்டுபிடிப்புக்கு ஓர் எல்லை உண்டு. எல்லைக்கு மேல் கண்டுபிடிப்பால் போக முடியாது. ஆனால் மனிதனிý ஆற்றல்- அறிவு என்பது எல்லை இல்லாதது. மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருப்பது. படிப்பின் நோக்கம் அதுதான்.அதன் காரணமாகவே படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேறுதுறைக்குப் போவதும் - படித்து முடித்த பின் துறை மாறுவதும் மனிதர்களுக்கு சாத்தியமாகிÈது.

மனிதன் படிப்பு மூலம் அறிந்து கொண்டு இருப்பது தன்னையே இன்னும்
அÈ¢ந்து கொள்ள வேண்டியது இருக்கிÈது என்பதுதான். அதுதான் படிப்பின் வசீகரம், கவர்ச்சி, படிப்பு என்பது படிப்பையே துறக்க வைக்கிÈது என்பதுதான் அதன் தனித்தன்மை.

தொடர்ந்து நிகழ்ந்து வருவது. அதுவே சமூகத்தை ஜீவனுள்ளதாக வைத்துள்ளது.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13 , Article 14 ,Article 15 ,Article 16 ,Article 17


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...