???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஈமூ கோழி பண்ணைகளின் சொத்துக்கள் முடக்கம் - முதல்வர் அறிவிப்பு

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   18 , 2012  11:31:40 IST

தமிழ்நாட்டில் ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக ஈமு கோழிப் பண்ணைகளில் முதலீடு செய்தால் அதிக அளவு லாபம் ஈட்டலாம் என்று கூறி 36,000-க்கும் மேற்பட்ட பொது மக்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை வைப்பு நிதியாக சில ஈமு கோழிப் பண்ணை நிறுவனங்கள் திரட்டின.பொதுமக்கள் முதலீடு செய்த தொகைக்கு ஈடாக அவர்களுக்கு ஈமு கோழிக் குஞ்சுகள் கொடுக்கப்பட்டு அதை முதலீட்டாளர்கள் அவர்களது பண்ணையிலேயே வைத்து வளர்க்க வேண்டும். இதற்காக மாதம் குறிப்பிட்ட ஒரு தொகை வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். இதன்படி, மாதா மாதம் வழங்கப்பட வேண்டிய தொகையை முதலீடு செய்தவர்களுக்கு, ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்த நிறுவனங்கள் வழங்கவில்லை.

இதையடுத்து, இது தொடர்பாக சில ஈமு பண்ணை நிறுவனங்கள் மீது 16 புகார்கள் காவல் துறையினரால் பெறப்பட்டுள்ளன. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 33 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை பணம் வழங்காததற்காக 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தலைமறைவானவர்களை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், வைப்பீட்டாளர்களுக்கு பணம் வழங்காத ஈமு பண்ணை நிறுவனங்களின் சொத்துக்களை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் பறிமுதல் செய்யவும், வைப்புதாரர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கவும் நான் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இதேபோல் இந்த ஈமு பண்ணை நிறுவனதாரர்கள் தலைமறைவாகிவிட்ட காரணத்தாலும், பண்ணையில் பணிபுரிபவர்கள் அங்கிருந்து சென்றுவிட்ட காரணத்தாலும், ஈமு பண்ணைகளில் உள்ள ஈமு கோழிகளை பேணிப் பாதுகாப்பதில் தொய்வு ஏற்பட்டு இதன் காரணமாக ஈமுக் கோழிகள் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் தீவனம் அளித்து அந்தக் கோழிகளை பேணிப் பாதுகாக்க நான் உத்தரவிட்டுள்ளதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோழிக் குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைந்தவுடன் அவற்றை விற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதன் மூலம் பெறப்படும் தொகை கோழித் தீவனச் செலவிற்கு ஈடு செய்யப்பட்டு, மீதத் தொகை வைப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...