???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுபடுத்ததவறிய தமிழக அரசு - ராமதாஸ்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   09 , 2012  11:56:30 IST

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் " தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அரிசி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண வகை அரிசியின் விலை கிலோ ரூ.5ம், சன்னரக அரிசி விலை கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையும் உயர்ந்துள்ளது. காய்கறிகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகளும் ஏற்கனவே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இந்த நிலையில் அரிசி விலையும் பெருமளவு உயர்ந்திருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது.

அதிக லாபம் ஈட்டும் நோக்குடன் அரிசி ஆலை அதிபர்களும், வணிகர்களும் அரிசியைப் பதுக்கி வைத்திருப்பது தான் விலை உயர்வுக்குக் காரணமாகும். கடந்த ஆண்டில் சாதனை அளவாக 105லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதாக நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்திருந்தது. தேவைக்கும் அதிகமாக நெல் உற்பத்தி செய்யப்பட்ட பிறகும், அரிசி விலை உயர்ந்திருப்பது அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கடமையில் இருந்து தமிழக அரசு தவறி விட்டது என்பதையே காட்டுகிறது.

எனவே, பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசியை வெளிக்கொண்டு வந்து வெளிச்சந்தையில் அரிசி விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசியை வரவழைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...