???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண ராஜபக்சேவிடம் பேசினேன் - பிரதமர் கடிதம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   06 , 2012  17:13:48 IST

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண அதிபர் ராஜபக்சவிடம் தான் பேசியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க “ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவம் போதும் என்று நினைக்கிறேன். நூறு முள்ளிவாய்க்கால் சம்பவம் நடத்தும் அளவுக்கு எங்களை யாரும் தூண்டக் கூடாது’ என்று கூறியிருந்தார்.

அவரது பேச்சுக்கு இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 20-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் ஜூன் 25-ம் தேதி கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பேச்சு தொடர்பாக தாங்கள் ஜூன் 20-ம் தேதி எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற கூட்டத்தின் இடையே இந்தப் பிரச்சினை தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் பேசினேன். இலங்கைத் தமிழர்களுக்குப் புனர்வாழ்வு ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அவரிடம் அழுத்தமாக வலியுறுத்தினேன். இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு தகுந்த அரசியல் தீர்வு காண வேண்டும் என்று கூறியதுடன், தமிழர்கள் கண்ணியமான முறையில் வாழ வழிவகை செய்வதுடன், தாயகத்தில் வாழும் உணர்வை தமிழர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளதாக கடிதத்தில் பிரதமர் கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...