???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிங்கள விமான படையினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் - வைகோ

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   05 , 2012  21:14:07 IST

தாம்பரம் விமானப்படை தளத்தில் இலங்கை விமானப்படை வீரர்கள் 9 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூரியபோது "ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசின் விமானப்படையினருக்கு, இந்திய அரசு ரேடார்களும், ஆயுதங்களும் கொடுத்து பயிற்சியும் அளித்தது. வெந்த புண்ணில் சூட்டுக்கோல் திணிப்பதுபோல், தற்போது சிங்கள விமானப் படையினருக்கு தாய்த் தமிழகத்திலேயே சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பயிற்சி கொடுத்து வருகின்ற கொடுமை நடக்கிறது.

இது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். தாம்பரத்தில் உள்ள சிங்கள விமானப்படையினரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுவதோடு, இந்தியாவில் வேறு எந்த இடத்திலும் பயிற்சியும் அளிக்கக் கூடாது. அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் தாம்பரம் விமானப்படை தளத்திற்கு எதிரே மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறேன் என்றார்,


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...