அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தாய்மண் - சிற்றிதழ் அறிமுகம் 16

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   03 , 2006  22:23:55 IST

'சாகும் போதும் தமிழ் பாடிச்சாக வேண்டும்
என் சந்ததியும் அவ்வாறே சாகவேண்டும்"

- எனத் தமிழ் பற்றுடன் வெளிவந்து கொண்டிருக்கும் 'தாய்மண்' மாத இதழ். ஆசிரியர். கவிப்பேரரசு அருமையார். 1981 ஆம் வருடம் இவருடைய பிறந்த நாளான நவ.7 அன்று தாய்மண் மாத இதழும் தாய்மண் இலக்கிய கழகமும் தொடங்கப்பட்டன. தொடர்ச்சியாக 25 ஆண்டுகளாக வெளிவந்து கொன்டிருக்கும் இவ்விதழில் மரபுக் கவிதை, இலக்கியக் கட்டுரைகள், கலை தொடர்பான கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

துருவன் , பா, எழிழரசு, பாவேகோ உட்பட பலர் எழுதிவருகின்றனர்.சãகப் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதப்படும் படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட்டு வருகிறது..சங்க இலக்கியம், திருக்குறள் போன்ற பழந்தமிழ் இலக்கியம் குறித்த கட்டுரைகளும் வெளிவருகிறன. அந்தந்த மாதத்தின் முக்கிய செய்திகளை மையமிட்டு எழுதப்படும் 'கவிப்பேரரசு கடிதம்' பகுதி தொடர்ந்து வெளியாகிவருகிறது.

தாய்மண் இதழைக் காட்டிலும் தாய்மண் இலக்கியக் கழகல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதன் கிளைகள் தமிழகத்தின் பலபகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.மாதந்தோறும் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் என இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இதுவரை 1116 கூட்டங்கள் நடந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார் அருமையார்.மக்களால் போற்றப்படும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள்,கவிஞர், அரசியல் தலைவர் போன்றோருக்கு விழா எடுத்தல் குறிப்பாக, பாரதி, பாரதிதாசன்,இளங்கோ, தந்தை பெரியார்,டாக்டர் அம்பேத்கார்,பேரறிஞர் அண்ணா,காந்தியடிகள், வ.வு.சி. போன்றோருக்கு விழா எடுத்து சிறப்பித்து வருகிறது தாய்மண் இலக்கியக் கழகம். அத்துடன் மாணவமாணவிகளுக்கும் ,இலக்கிய ஆர்வமுள்ளவர்களுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி நடத்தி பரிசுகள் அளித்து வருகிறது.தாய்மண் இலக்கியக் கழகம் ஒரு குடும்ப அமைப்பாக செயல் பட்டு வருகிறது.புகை பிடிக்காத , மது அருந்தாத, பிற எந்த தீய பழக்கங்களுமில்லாதவர்களே உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.குறிப்பாக வேலைக்குச் செல்லாதவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்வதில்லை. சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி தமிழ் மீதும் தமிழ் இனத்தின் மீதும் பற்றுள்ளவர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

சமீபத்தில் முத்தமிழ் இலக்கிய 4 வது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தியது தாய்மண் இலக்கியக் கழகம். இதில் நீதியரசர் பெ. வேணுகோபால் உட்பட பலர் விருந்தளித்து சிறப்பிக்கப்பட்டனர்.இதுபோல், பாரதியார், பாவேந்தர், கண்ணதாசன், சிவாஜி, மா,பொ.சி, டி.கே.சி ஓளவை பெயர்களிø இதுவ¨Ã 2500க்கும் மேற்பட்ட விருதுகள் கொடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.இவ்வாண்டு (2005) அருமையார் பெயரிலும், நீதியரசர் பெ.வேணுகோபால் பெயரிலும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் பற்றி:

79 வயதாகும் கவிப்பேரரசு அருமையார் இப்போதும் எழுத்து, பத்திரிகை, மாநாடு என்று சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் பேசின்பாலம் மின்வாரியத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.1953 - 54ல் திருத்தணி மீட்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்றவர்.டி.கே.எஸ் நாடகக் குழுவிலும் நடித்திருக்கிறார். தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர்.கவிதை, பயண நூல், சிறுகதை, இலக்கிய ஆராய்ச்சி அரசியல் தலைவர்கள் பற்றிய கட்டுரைகள் என 17 நூல்கள் எழுதியுள்ளார்.

தி.க.சி., வல்லிக்கண்ணனைப் போல கடிதம் எழுதுவதில் சளைக்காதவர் இவர்.இதுவரை நñபர்களுக்கும் , இலக்கிய ஆர்வலர்களுக்கும் 2,19,843 கடிதங்கள் எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இலக்கிய சொற்பொழிவுகள் ஆற்றி அந்நாட்டு இலக்கிய அமைப்பு¸ளின் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
'கவிப்பேரரசு', 'இனமானக் கவிஞர்' உள்ளிட்ட மொத்தம் 60 விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

" தமிழ்மொழி ஆட்சிமொழி, பயிற்று மொழியாகவும்,எங்கும் எதிலும் தமிழாகவே இருக்கவும், தமிழ் படித்தவர்கள் அரசுப் பணிகÇ¢லும் , தனியார் பணிகளிலும் வேலைபெறவும் பாடுபடுவது தாய்மண்ணின் தாய்மண்ணின் இலக்கியக் கழகத்தின் குறிக்கோளாகும்" என்கிறார் அருமையார்.

சிற்றிதழ் சந்தா விபரம்:

தனி இதழ் - ரூ 5/-
ஆண்டு சந்தா- ரூ 60/-

முகவரி:

தாய்மண்
32,சோமசுந்தர விநாயகர் கோயில்
2 வது தெரு,
பெரம்பூர்
சென்னை - 11

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.

கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...