???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கலாப்ரியாவுக்கு கண்ணதாசன் விருது

Posted : புதன்கிழமை,   ஜுன்   06 , 2012  12:51:55 IST

கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் 2012 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் கலாப்ரியா, திரு. ஆர்.பி.சங்கரன் ஆகியோர் விருதுகள் பெறுகின்றனர்.

ரூ.50,000 ரொக்கப்பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருது கவியரசு கண்ணதாசன் நினைவாக திரு.கிருஷ்ணகுமார் என்பவரால் நிறுவப்பட்டு கோவை கண்ணதாசன் கழகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னால் இந்த விருதுகள், எழுத்தாளர்கள் திரு.நாஞ்சில்நாடன், திரு.வண்ணதாசன், திரு.எஸ்.ராமகிருஷ்ணன், இசைக்கலைஞர்கள் திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி, திரு.சீர்காழிசிவசிதம்பரம், கவியரசு கண்ணதாசனின் உதவியாளர் திரு.இராம்.முத்தையா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

விருது வழங்கும் விழா கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளாகிய 24.06.2012 ஞாயிறு காலை 10.00 மணிக்கு கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் நடைபெறுகிறது.

கண்ணதாசன் விருது பெறும் கலாப்ரியாவுக்கு வாழ்த்துக்கள்!


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...