அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

காலம் - சிற்றிதழ் அறிமுகம் 15

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   03 , 2006  22:17:12 IST

" எனது தேசத்து மண்ணில் சாவதே
எனக்குப் போதும்
அதற்குள் புதைக்கப்படுவதும்
எனக்குப் போதும்
உருகி
அந்த மண்ணுடன் கலந்து
மறைந்து போவதும்
எனக்குப் போதும்

எனது தேசத்தின் புனித முற்றத்தில்
ஒரு கைப்பிடியளவு புழுதியாய்
ஒரு புல்லின் இதழாய்
ஒரு போவாய் இருப்பதும் எனக்குப் போதும்"
- பாலஸ்தீனப் பெண் கவிஞர்
Fadwaa tuquan

" வாழ்ந்த இடத்தை பிரிதல், அதுவும் பலவந்தமாகப் பிரிக்கப்படுதல் மிகவும் துயரமானதே.தமது வாழ்வின் மகிழ்ச்º¢ நிறைந்த, சோகம் கவிந்த சுவடுகளை அந்த மண்ணோடு விட்டு விட்டு நினைவுகளை மாத்திரம் துயர் நிறைந்த மனத்தோடு கூடக் கொண்டு செல்வதன் பாதிப்பு அவரவருக்கான தனித்த ஆழங்களைக் கொண்டிருப்பது.மற்றவர்களால் அதன் ஆழங்களை உணர முடியுமென்பது சாத்தியப்படக் கூடிய ஒன்றல்ல.

வாழ்விடம் என்பது வெறும் சடப் பொருள் சார்ந்த ஒன்றல்ல.அது வாழ்வின் ஆத்மார்த்தமான மூச்சு.அந்த வாழ்விடத்திற்காக இழக்கப்படும் உயிர்களும்,
சிந்தப்படும் இரத்தங்களும் மிக மிக அதிகமனவை மாத்திரமல்ல,அது வாழ்விடத்திற்கான உரமாகவும் கொள்ளப்படுகிறது".

- ( 'வாழ்புலம் இழந்த துயர்'
மு.புஷ்பராஜý அக்டோபர்'05
காலம் இதழில்)

புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ் மொழியின் மூலமாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.தங்களின் இருப்பை கலை, இலக்கியத்தின் மூலமாக வெளிப்படுத்திக்கொள்ள சிற்றிதழ்கள் அவர்களுக்குப் பெரும் உதவியாக உள்ளன.அவ்வகையில் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பல சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.அவற்றில் குறிப்பிடத்தக்க இதழ் 'காலம்'.கனடாவிலிருந்து வெளிவருகிÈது. ஆசிரியர், செல்வம் ஆலோசனைக் குழு என்.கே. மகாலிங்கம்செழியன். " சின்னஞ்சிறு குருவி ஒன்று முட்டையிட்டு குஞ்சுகளை வளர்ப்பதற்காக அலைந்து திரிந்து வேண்டிய பொருட்களைச் சேர்த்து கூடொன்று கட்டுவதும் கட்டியபின் அக்கூட்டைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதும் போன்றதே காலம் இதழை நான் வெளிக் கொண்டுவருவதும், அதைப் பார்த்து பின் மகிழ்ச்சி அடைவதும்" என்கிறார் ஆசிரியர் செøவம். 1990ல் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில் 25 இதழ்கள் வெளி வந்துள்ளன.

புலம் பெயர்ந்த மக்கள் வாழ்கின்ற மண்ணிலிருந்து மிக நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கிற சிற்றிதழ் என்ற வகையில் ' காலம்' மிக முக்கியமானது. நேர்காணல், சிறுகதை, கட்டுரை, கவிதை என வெளியிட்டு வருகிறது.அவ்வப்போது சிறப்பிதழ்களை வெளியிட்டு வரும் 'காலம்'ன் 25 ஆம் இதழ் அறிவியல் சிறப்பிதழ்.

சுந்தர ராமசாமி, வெங்கட் சுவாமிநாதன், ஜெயமோகன், யுவன் சந்திர சேகர், எஸ். ராமகிருஷ்ணன், செழியன், மு. புஷ்பராஜன், தேவகாந்தன், மாலதி மைத்ரி போன்றோரின் படைப்புகள் வெளியாகி வருகின்றன.

"உணவு,உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவைகளுக்காக நாயோட்டம் ஓடிக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த இக்குளிர்ச் சூழலில் கவிதை, நாடகம், இலக்கியம், நூல் வெளியீடு, நூல்கண்காட்சி, என்று ஓய்வு நேர கலாசார விஷயங்களில் ஈடுபடுவதும், " பைத்தியக்காரத்தனம்' வாழத்தெரியாதவர்களின் கூட்டம்' என்று வாழத் தெரிந்தவர்கள் இகழும் சூழலில் 15 ஆண்டுகள் கால ஒழுங்கில்லாமலாவது கொண்டுவந்து நாÛம் ஒரு சிறு துரும்பையாவது எடுத்து ஒரு ஓரÁ¡க ¨Åக்கிறேன் என்பது ஒரு பெரிய விஷயமாகத்தான் எனக்குப்படுகிறது"எனத் தனது இலக்கிய செயல்பாடுகளை ஆதங்கமும் மகிழ்ச்சியும் ஒருசேரக் குறிப்பிடுகிறார் ஆசிரியர் செல்வம்.

இவர் நடத்தும் ' காலம் இலக்கிய மாலை' எனும் இலக்கிய நிகழ்ச்சியில் இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களும், விமர்சகர்களும் கூட கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

" காலம் இதழ் மனித மேம்பாட்டுக்குரிய இலக்கிய, சமூக, பண்பாட்டு அசைவுகளுக்குரிய தளம்.குறுகிய எல்லைகளைக் கற்பனையில் கோடிட்டுக் காட்டுவதால் பரந்த விசாலமான விடுதலையை நோக்கிச் செல்ல முடியாமல் மனங்கள் குறுகிவிடும்.

எந்த ' இயங்களும், புலங்களும் கால வரையறைகளுக்கு உடன்பட்டவை. அதன் எல்லைகளூம், கற்களும் காலத்துக்கு காலம் நகர்த்தப்பட வேண்டியவை. மனித சுபீட்சத்திற்கும், விடுதலைக்கும் அவை பாறங்கற்களாகக் கழுத்தை நெரிப்பவையாகவும் மாறிவிடக் கூடியவை. ஆகவே அவற்றை சுமக்காமலே அதன் உயிரை நெரிக்காமலே சகல விடுதலையையும் நோக்கி நகர்வதே " காலத்தின் குறிக்கோள்" எனத் தமது இதழின் நோக்கத்தை கூறுகிறார் ஆசிரியர்.

தமிழக இலக்கியச் சூழலுக்கும் , புலம் பெயர்ந்த இலக்கியச் சூழலுக்கும் இலக்கியப் பாலமாக காலம் திகழ்ந்தாலும் தÁ¢ழகப் படைப்பாளிகளின் படைப்புகள் அதிகம் இடம்பெறும் வகையில் , தமிழ்நாட்டிலிருந்து வரும் மற்றொரு சிற்றிதழாகத் தோற்றம் தருகிÈது. இதைத் தவிர்த்து புலம் பெயர்ந்தோர் படைப்புகளையும் , ஈழத்துப் படைப்புகளையும் தாங்கி வருவதே ' காலத்திற்கும், தமிழிலக்கியத்திற்கும் நல்லதெனப்படுகிறது.

தனி இதழ்: ரூ 30/-
பக்கம்:92

முகவரி:
Kalam
16, Hampstead court,
Markam, ontL 3 R 337
Canada
E.mail: kalam@tamilbook.com

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.

கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...