அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உலோகம் – ஜெயமோகன் – தமிழ் த்ரில்லர்

Posted : புதன்கிழமை,   நவம்பர்   23 , 2011  11:17:21 IST

உலோகம் ஜெயமோகனின் த்ரில்லர் முயற்சி. சாகச எழுத்து என்ற வகையில் எழுதப்பட்டது என்கிறார். ஆங்கிலத்தில் தமிழில் த்ரில்லர் என்ற சொல்லுக்கு சரியான தமிழ் சொல் இருக்கிறதா? பரபரப்பு என்று சொல்லலாமா?

ஒரு தமிழ் இலக்கிய எழுத்தாளர் இந்த சாகச வகையில் எழுதியிருப்பதற்கு பாராட்டு. கதைக் களன் தமிழுக்கு புதியது என்று நினைக்கிறேன்.
ஈழத்தில் இருந்து இயக்கத்தை சேர்ந்த சார்லஸ் என்கிற சாந்தன் இந்தியாவில் உள்ள பொன்னம்பலத்தாரை (இவரின் பாத்திர படைப்பு வரதராஜ பெருமாளின் சாயல்) கொல்ல வேண்டும். அதை எப்படி செய்து முடிக்கிறார் என்பதே கதை.

நான் இப்போது தமிழில் எழுதும் க்ரைம், த்ரில்லர் கதைகளை படித்ததில்லை. படித்ததெல்லாம் சுஜாதா, பட்டுகோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார். இந்திரா சௌந்தரராஜன் சமீபத்தில் மர்மக் கதைகள் எழுதினார்.

ஆங்கிலத்தில் நிறைய பேர் இந்த வகையில் பிரபலம். அதில் முக்கியமானவர்களை இப்போது பட்டியலிடுகிறேன்.
தொழில் சார்ந்த பரபரப்பு கதை – Scot Turrow (Presumed Innocent), John Grisham ( The Firm ), Michael Connelly ( Lincoln Lawyer), Dan Brown (Da vinci Code)
போலீஸ் பரபரப்பு கதை – Ed Mcbain (87th Precinct series), James Ellroy ( L.A. Confidential),
அமைப்பு சார்ந்த நிழல் உலக கதை – Mario Puzo (God Father)
ஒற்றன் பரபரப்பு கதை – John Le Carre (The Spy who came in from the cold), Robert Ludlum ( Bourne Identity)
சைக்கோ பரபரப்பு கதை – Thomas Harris (Red Dragon, Silence of the Lambs)
கொலையாளி சாகச கதை – Fredrick Forsyth (Day of the Jackal)
துப்பறியும் கதை - Agatha Christie (Hercule Poirot) Raymond Chandler ( Philip Marlowe) ஷெர்லாக் ஹோல்ம்ஸ் இதன் பிதாமகன்.
எல்லாவற்றிற்கும் பொது கொலை, மிரட்டல், வன்முறை. உள்நோக்கம் பணம், செக்ஸ், பலம் என்று ஆரம்பித்து பின் எந்த உள்நோக்கமும் இல்லாமல் கொலை செய்வது போன்ற கதைகளும் வந்துள்ளன. சமீபத்தில் கவனத்திற்கு வந்த ரஷ்யாவின் Chessboard killerன் நோக்கம் . செஸ் போர்டின் 64 சதுரத்தின் எண்ணிற்கு கொலை செய்வதா, அல்லது அவனுக்கு முன்னால் 53 கொலை செய்த இன்னொருவனின் சாதனையை முறியடிப்பதா? தெரியவில்லை. மொத்தம் 61 கொலைகள் செய்ததாக சொல்கிறான். ஆனால் போலீஸ் இதுவரை கண்டுபிடித்தது 51 கொலைகள் தான்.

சாகசக் கதைக்கு வருவோம்.ஆச்சர்யம் 100 Best Crime Novels பட்டியலில் Crime and Punishment, The Name of the Rose இலக்கிய நாவல்கள் இருப்பது. த்ரில்லர் என்று தனி பட்டியலை பார்த்ததில்லை.
செப்டம்பர் பதினோன்றுக்கு பிறகு தீவிரவாதம் சார்ந்த கதைகள், படங்கள் வந்துள்ளன. பெரும்பாலும் intelligence agency தொடர்பான கதைகள்.
ஜெயமோகனின் நாவல் கொலையாளி சார்ந்த கதை. Day of the Jackal போல... அந்த நாவலின் பலம் விவரங்கள்.பணத்திற்காக கொலையாளி பிரெஞ்சு ஜனாதிபதி Charles De Gaulleயை கொலை செய்ய முயற்சிக்கிறான். கொலையாளியை பிடிப்பதற்கு ஒரு போலீஸ் அதிகாரி எப்படி அணுஅணுவாக நகர்கிறார் என்பதையும் அதற்காக அவர் படும் பாட்டையும் படித்தால் யாரும் போலீஸ் வேலைக்கு போக மாட்டர்கள். கொலையாளியின் திட்டமிடுதலையும், போலீசின் வேலையையும் அவர்கள் தொழிலின் சின்ன சின்ன விவரங்களை நுணுக்கமாக விவரிப்பதும் கதையின் பலம்.

உலோகம் நாவலின் பின்புலம் தற்கால தீவிரவாதம். காட்டி கொடுப்பது, அதை தொடர்ந்து வரும் சந்தேகம் தான் சுவாரசியத்தை கொடுக்கிறது. ஆனால் ஆங்கில த்ரில்லர்கள் படிக்க இவ்வளவு பூடகமாக இருப்பதில்லை. கடைசி அத்தியாயத்திலாவது எல்லாவற்றையும் சொல்லி விடுவார்கள். இதில் திரும்ப படித்து அந்த காட்டி கொடுத்த சங்கதிகளை புரிந்து கொள்ள வேண்டிருக்கிறது. சுவாரசியத்திற்கு இது தடை தான்.

ராவின் ஆட்கள் கொலையாளியை சித்திரவதைக்கு பின் விடாமல் இருந்திருந்தால் கொலை நடந்திருக்காது. அதுவும் கொலையாளி தன்னை இயக்கத்தின் ஆள், போன்னம்பலத்தாரை கொல்ல தான் வந்திருக்கிறேன் என்று ஒத்து கொண்ட பிறகும் ரா ஏன் அவரை விட வேண்டும்? அன்றே அவன் அவரை வீட்டில் கொல்கிறான். இது ராவின் டபுள் கேம் என்றால் அதை முடிவில் சொல்லவில்லை. ராவின் ஆட்கள் அறையில் சோதனையின் போது செல் போனை எடுக்காமல் வெறும் துப்பாக்கியை மட்டும் எடுப்பதும் நம்புகிற மாதிரி இல்லை. ஒரு உளவாளி அமைப்பு (ரா) ஒரு அறையின் மறைவான இடங்களை தேடாமல் விட்டிருக்குமா? (செல் போனை toiletல் மறைக்கிறான்)

நான் இந்த மாதிரி கதைகளில் எதிர்பார்ப்பது சுவாரசியம் மற்றும் புதிர் (pace and suspense), கூர்மையான வசனங்கள் (நகைச்சுவை இருந்தால் இன்னும் விசேஷம். நகைச்சுவை என்றால் செக்ஸ் ஜோக் அல்ல), நம்பகத்தன்மை மற்றும் கொஞ்சம் நிழலான தார்மீக குழப்பங்கள்.
உலோகத்தில் விவரங்கள் உள்ளது. சுவாரசியம் பரவயில்லை. வசனம் எதிர்பார்த்த அளவில் இல்லை( கொஞ்சம் ஆச்சர்யம் தான். ஏழாம் உலகத்தில் கூட எள்ளல், நகைச்சுவை உள்ளது- பனிவிழும் மலர்வனம் ஞாபகம் இருக்கிறதா?) .நம்பும் படி இருக்கிறது (நான் மேலே சொன்னதை தவிர்த்து) தார்மீக குழப்பங்கள் இருப்பதாக தெரியவில்லை. எந்த வித தார்மீக குழப்பங்கள் இல்லாமல் ஒருவன் ஆயுதமாக இருப்பது தான் கதை என்று முன்னுரையில் தெரிகிறது. த்ரில்லர்க்கு முன்னுரையே கொஞ்சம் ஆச்சர்யம் தான்.

அதற்காக இதை நாம் மற்ற தமிழ் க்ரைம் நாவலோடு ஒப்பிடமுடியாது. நான் படித்த நிறைய கதைகளில் பலர் ஆங்கிலம் பேசுவார்கள், முக்கியமானவர்கள் அழகாக இருப்பார்கள், பொதுவாக திறமைசாலிகள். எல்லாம்-என்னால்-முடியும் என்கிற மனப்போக்கு. அஞ்சு பக்கத்திற்கு ஒரு முறை யாராவது காணாமல் போய் விடுவார்கள், கூடவே மூச்சிரைத்து கொண்டு ஓடி வர வேண்டும், செக்ஸ் ஜோக்கு சொல்ல வேண்டும்.கொஞ்சம் செக்ஸ். அப்புறம் அவ்வப்போது கொலை.

உலோகத்தின் பலம் இதை எல்லாம் தவிர்த்ததே. தமிழில் நல்ல ஒரு சாகச கதை.

வரவேற்று மேலும் எதிர்பார்க்கிறேன்
(பி.கு சாகச கதையாக மட்டும் நாவலை பார்த்ததால் எழுந்த பார்வை இது. ஒரு சராசரி வாசகனின் பார்வையும் கூட)
வெளியிடு: கிழக்குபதிப்பகம்.டிசம்பர், 2010.

- ஜி.நடராசன்


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...