???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது 0 நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஏழாம் அறிவு – தமிழர்களின் உரிமையை தக்க வைத்து கொள்ள வழி

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   15 , 2011  22:05:54 IST

முருகதாஸின் பலம் சுவாரசியமாக கதை சொல்வது. இந்தப் படத்திலும் அதே போல நம்முடைய கவனத்தை கடைசி வரை தக்க வைத்து கொள்கிறார்.
படத்தைப் பற்றிய சில விமர்சனங்கள் சரியல்ல. ஸ்ருதி நன்றாகவே நடித்து உள்ளார். அந்த வர்ம நோக்கும் அதை எடுத்த விதமும் நம்புகிற மாதிரி தான் உள்ளது. முருகதாஸ் சினிமாவின் make believe அம்சத்தை அழகாக பயன்படுத்தி உள்ளார். மேலை நாட்டு சில உதாரணங்கள்: E.T, Avatar. எப்படி இந்த படங்களை நாம் நம்பும்படி எடுத்தார்களோ அந்த விதத்தில் முருகதாஸுக்கும் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். முருகதாஸின் மற்றுமோர் பலம் moderation. இந்த மிகையில்லாத அணுகுமுறை தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சோர்ந்து போன கருத்துகளையும், காட்சிகளையும் ஓரளவு தவிர்த்து விடுகிறது. இதற்கு விதிவிலக்கு பாடல்கள்: ஆனால் பாடல் இல்லாத படம் தமிழில் வருமா?
இதெல்லாம் சரி. ஆனால் திரைக்கதைக்கு ஒத்து வர வேண்டுமென்று தற்கால வரலாற்றையோ அல்லது பரவலான இன்றைய அரசியல் எண்ணபோக்கையோ மாற்றக் கூடாது.
இந்த கதை எப்படி உருவக்கபட்டிருக்கும் என்று சற்று கற்பனை செய்து பார்ப்போம்.
1. போதிதர்மர் சீனா செல்கிறார். தமிழ்நாட்டு கலையை சீனாவுக்கு கற்று தருகிறார். அங்கேயே இறக்கிறார்.
2. இன்று சீனாவின் பயோ-வார் உத்தியில் இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் அதற்கு ஸ்ருதியின் ஆராய்ச்சி தடையாக இருக்கும். ஆகவே அவரையும் தடுக்க வேண்டும். ( இந்தியாவிற்கு என்பதை கொட்டை எழுத்தில் நான் எழுதியிருப்பதை கவனிக்கவும்).
இப்போது இயக்குனர் சொல்கிறார். ஆனால் படம் தமிழ் ஆடியன்ஸுக்கு எடுக்கிறோம் இல்லையா? கதையை கொஞ்சம் மாற்றுவோம். போதிதர்மர் தமிழர். அதனால் இந்திய அரசு இதில் அக்கறை காட்டாதது போல எடுக்க வேண்டும். அப்போது தான் தமிழர், மத்திய ஆட்சியின் உதவி இல்லாமல், தமிழ் நாட்டை காப்பாற்றி, இந்தியாவை காப்பாற்றி, உலகத்தை காப்பாற்றினார் என்று முடிக்க முடியும். (ஆச்சர்யமாக தமிழ் நாட்டு போலீஸ் உதவியும் மறுக்கப்படவேண்டும். ஏனென்றால் இது சூர்யாவின் கதை).
இந்த சிந்தனை ஓட்டத்தின் அடிநாதம் வணிக நிர்பந்தமா? அல்லது தமிழன் புறக்கணிக்க பட்டதாக எண்ணும் எண்ணத்தின் உள்ளார்ந்த வெளிப்பாடா என்றுப் பார்ப்போம். இதற்கு காரணம் வணிக நிர்பந்தம் என்பதற்கான வாதங்கள் இதோ:
1. சீனாவின் எதிரி இந்தியாவே தவிர தமிழ் நாடு அல்ல.
2. ஸ்ருதியின் ஆராய்ச்சியை எதிர்ப்பது வேற்று மாநிலத்தவர்கள் இல்லை. தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். அந்த மூத்த சயின்டிஸ்ட், எட்டப்பன் தமிழன் தான். அவன் தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்யவில்லை நம் இந்தியாவுக்கு செய்து கொண்டிருக்கிறான். இந்த பாதகத்தை செய்த நம் தமிழனை தான் சாட வேண்டும். ஆனால் வேற்று மாநிலத்தவர்கள் சாடப்படுகிறர்கள். அந்த ஆராய்ச்சி விவாதத்தில் தமிழர்களே இருக்கிறார்கள். வட இந்தியர்களை காணோம்.
3. இவர்கள் போதிதர்மனை உருவாக்கும் ஐ.ஐ.டி மத்திய அரசால் நிறுவப்பட்டது. அது நேருவின் முயற்சி.
4. போதிதர்மன் குறுகிய மனப்பான்மை இல்லாதவர் போல தோன்றுகிறது. இல்லாவிட்டால் ஏன் சீனா செல்ல வேண்டும்? நம் நாட்டு கலையை அவர்களுக்கு கற்று தர வேண்டும். ஆனால் தற்கால சூர்யாவோ ஏனோ தமிழரைப் பற்றியே பேசுகிறார்.
இப்படி ஆதார விஷயங்கள் மேற்சொன்னபடி ஒரு தேசிய அல்லது உலகளாவிய, விரிவான தளத்தில் இருக்க, ( அந்த எட்டப்பனை தவிர்த்து ) திரைக்கதையோ வணிக நிர்பந்தங்களினால் தமிழர் புறக்கணிப்பு மற்றும் பெருமை பற்றி மாறி செல்கிறது.
இதற்கு மாறாக ஒரு தமிழன் தேசிய உணர்வுடன் இந்திய நாட்டை காத்தான் என்று சொன்னால் திரைக்கதையும் வசனமும் வீரியத்துடன் இருக்காதா?
இந்த வேற்று மாநிலத்தவர் மற்றும் தமிழர் உத்தியை திரைக்கதையில் நுழைத்த பின்னர் தமிழ் ஈழ பிரச்சினையையும் இழுத்தே ஆக வேண்டும். எந்த ஒன்பது நாடுகள் சேர்ந்து தமிழனை கொன்றது? எந்த தகவல் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தோம்? இவையெல்லாம் திரைக்கதையின் வணிக நிர்பந்ததிற்காக சேர்க்கப்பட்டது போல உள்ளது.
இந்த தமிழனின் அடையாள குழப்பங்கள் தமிழனுக்கு மட்டுமே உள்ள குழப்பங்கள் அல்ல.இது எல்லா மாநிலத்தவர்க்கும் ஏற்படும் குழப்பங்களே. ஒரு பீகார்காரரும் இதே குழப்பங்களுடன் தான் உள்ளார். ஒரு தேசிய அடையாளத்தின் உள்ளே வரும் போது ஏற்படும் இந்த பிரச்சினைகளை பற்றியும், பிராந்திய அடையாளங்களின் முக்கியத்துவத்தை பற்றியும் யாராவது உண்மையுடன் படம் எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த குழப்பங்கள் எதிர்வினையாக நாம் ராமர் பிள்ளையை கொண்டாடிய சூழ்நிலையை உண்டாக்கி விடும் அல்லது அமெரிக்காவிற்கோ, தில்லிக்கோ சென்று நமது அடையாளத்தை தொலைத்து விட ஏதுவாகி விடும். இந்த இரண்டுமே மிகை தான்.
இந்த படம் ரெட்ஜெயன்ட் தயாரித்தது. முருகதாஸ் தற்போது வடநாட்டிலும் கால் பதித்து சொந்த கம்பெனி ஆரம்பித்துள்ளார் என்பதையும் நினைவு கொள்ள வேண்டும். இந்த படம் சொல்லும் செய்தியும், அதன் வெளியே உள்ள அரசியலையும் நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். முருகதாஸிற்கும் அந்த அரசியல் தெரியும். ஆனால் அதை சொல்ல மாட்டார்.
எனக்கு எப்போதும் ஒவ்வாத விஷயம் வன்முறையை தமிழ் சினிமாவில் காட்டும் விதம். அதுவும் அந்த தோழி சாகும் காட்சி அதிர்ச்சியை கொடுக்கிறது. முருகதாஸ் வன்முறையை காட்டும் விதத்தை கண்டித்தே ஆக வேண்டும். இப்படித்தான் கஜினியில் அசினை கொல்லும் காட்சியும் இருந்தது. அவருடைய வன்முறை கலைக்கு சென்சார் (தேசிய வாரியம்!!!) தான் முடிவு கட்ட வேண்டும். கூடவே கௌதம் மேனன், அமீர், பாலா ஆகியவர்களையும் இந்த வன்முறை சித்தரிப்பில் இருந்து நெறி படுத்த வேண்டுமோ?
மேலும் இந்த மாதிரி மரபணு சார்ந்த படங்களை சற்று சந்தேகத்துடன் தான் அணுக வேண்டும். கொஞ்சம் நீட்ஷேயின் சூப்பர் மேன் தாக்கங்கள் இதில் எப்போதும் இருக்கும். இதையே கொஞ்சம் விரிவாக்கினால் meritocracy, anti-reservation, apartheid என்ற தளங்களுக்கு இவை பரவும். நம் நாட்டிற்கு அமர்த்ய சென்னின் கருத்துகள் தான் தேவை, அயன் ராண்டின் கருத்துக்கள் அல்ல. மேலும் அமர்த்ய சென்னின் உலகளாவிய நீதியும், உரிமைகளும் பற்றிய கருத்துகளும் அதை எடுத்து செல்ல வேண்டிய வழிமுறைகளும் தமிழர்களின் உரிமையை எந்த நாட்டிலிருந்தாலும் தக்க வைத்து கொள்ள வழி செய்யும்.
ஆகவே இந்த மாதிரி படங்களின் மறைமுக அர்த்தங்களையும் நாம் மனதில் கொள்வது நல்லது.

- ஜி.நடராசன்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...