அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வாகை சூட வா Vs மங்காத்தா

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   04 , 2011  09:50:32 IST

எதிர்பார்க்காமல் வியப்பூட்டிய படம் வாகை சூட வா. எதிர்பார்த்தது போலவே அமைந்த படம் மங்காத்தா.

இன்றைய உலகில் உத்தியோக மீட்டிங்கில் மில்லிமீட்டர் புன்னகையுடன், உயர்ந்த புருவத்துடன், உண்மையை மறைத்தும், பொய்யை உரைத்தும் பேசி, பழக கற்று கொண்டாகி விட்டது இப்படிப்பட்ட உலகத்தில் சட்டென்று சில குழந்தைகள் நுழைந்து குறும்புகள் செய்கின்றன. நாம் நம்மை மறந்து வியப்பும், மகிழ்ச்சியும் அடைகிறோம். அதே உணர்வு இந்த படம் பார்க்கும் போது ஏற்படுகிறது.வெகு சிலரே தமிழ் சினிமாவில் இந்த உணர்ச்சியை கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போதைக்கு அழகி , பசங்க, வெயில் மட்டுமே நினைவுக்கு வருகின்றன.இதில் வரும் சிறுவர்கள் இயல்பான , நடைமுறையில் நாம் பார்க்கும் குறும்புடன் திரிகிறார்கள்.

ஆடு முட்ட, விளாங்கு மீன் துடிக்க பயப்படுவதும், விளாங்காயை கடித்து வியர்ப்பதும் என்னையும் என் சிறுவர் காலத்துக்கு அனுப்பி விட்டது. ஏனோ எனக்கு தோப்பில் இருந்த வளைந்த கொய்யா மரத்தின் கிளைகளில் ஆடியது நினைவுக்கு வந்தது. எல்லா ஊரிலும் அப்படி ஒரு தோப்பில், அப்படி ஒரு கிளை, குழந்தைகள் கண்களுக்கு மட்டுமே தெரிகிறது.

இந்த படம் இன்னும் அந்த கிராமத்தின் சாதிய வேறுபாடுகளையும் கருத்தில் கொண்டிருக்கலாமோ என்று தோணலாம். ஆனால் அதையெல்லாம் பேச தமிழ்நாட்டில் அதற்கேற்ற சுழல் இல்லை (ஆனால் அதற்கு தேவையில்லை என்பதல்ல). அதனால் அதை யோசித்து இந்த படத்தை கொண்டாட தயங்க தேவையில்லை. நுட்பமான மன உணர்வுகளை நினைவூட்டும் நமது instinct உடன் எதோ ஒரு தளத்தில் உரையாடும் இப்படம் ஒரு முக்கியமான படம்.

இதற்கு எதிர்மறை மங்காத்தா. வாகை சூடவா போல சென்னை -28 கொடுத்த பிரபு தற்போது தமிழ் சினிமா சுழலில் சிக்கி விட்டார். யாராவது எதாவது கேட்டால் என் படத்தை ஏன் சீரியஸ் ஆக எடுத்துக்கிறிங்க என்று சொல்லுவார் என்று நினைக்கிறேன்.

இப்படியே நமது நேரத்தையும் காசையும் பல காலமாக விரயமாக்கி விட்டார்கள். தமிழில் இப்படி A, B, C என்றுப் பிரித்து நம் அறிவை பிற்காலத்திற்கு தள்ளிவிடுவது தொடர்கிறது.இப்போது நல்ல படங்களை saturation strategy மூலம் வெளியேற்றி விடுகிறார்கள். நம்முடைய யோசனை வணிக படத்திற்கு நம்பகத்தன்மை தேவையில்லை என்று யார் சொன்னது என்பதில் போய் விடுகிறது. என்டேர்டைன்மென்ட் படத்திற்கு சீரியஸ்னஸ் தேவையில்லை. ஆனால் ரியலிசம் கூடவா தேவையில்லை?
எப்படி வாகை சூடவாவிற்கு நுட்பமான நினைவூட்டல்கள் முக்கியமோ அதே போல மங்காத்தாவிற்கு நம்பகத்தன்மை முக்கியம். ஏனென்றால் இந்தப் படம் organized crime வகை. கூட்டாளிகளோடு கொள்ளை என்பதால் கேம் தியரி போல strategize வேறு செய்ய வேண்டும். அதனால் இந்த படத்தை instinctive ஆக அணுகுவது கடினம். ( ஆனால் அதற்கே வணிக நிர்பந்தம்).

Raymond Chandler, அமெரிக்க க்ரைம் எழுத்தாளர், க்ரைம் மற்றும் புலனாய்வு கதைகளில் பிளாட் நம்பக்கூடியதாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார். பெரும்பாலான கதைகள் கடவுள் எதோ தம் மடியில் அமர்ந்திருப்பது போல எல்லா நிகழ்ச்சிகளும் divine providenceயை நம்பி எழுதப்படுகின்றன என்பார். மங்காத்தாவில் பண கன்டனரை கிரேன் மூலம் மாற்றும் காட்சி இதற்கு ஒரு உதாரணம். மேலும் பல உதாரணங்கள் படத்தில் உள்ளன. Peer pressure, நேரமின்மை, அரசியல், வணிகம் என இதற்குப் பல சாக்குகள் பல வருடங்களாக பத்திரிகைகள் வாயிலாக கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

நம்முடைய கவலையெல்லாம் சற்குணம் இன்னும் எத்தனை படத்திற்கு வெங்கட் பிரபு போல ஆகாமல் தவிர்ப்பார் என்பதே.

- நடராஜன்


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...