அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழ் செம்மொழி யாரால்? எதிர்குரல் - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : புதன்கிழமை,   மார்ச்   01 , 2006  08:39:11 IST

1879 ஆம் ஆண்டில் சாமிவேல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழ் மொழியில் முதன் முதலாக நாவல் எழுதி வெளியிட்டார். அதன் பெயர் பிரதாப முதலியார் சரித்திரம்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை திருச்சியில் பிறந்தவர். முன்சீப்பாக மாயூரத்தில் வேலை பார்த்தவர். எனவே அவர் ¦ÀÂ÷ மாயூரம் வேதநாயகம் பிள்ளையாகிவிட்டது. அவர் திருவாவடுதுறை ஆதீனத்தோடும்-மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையோடும் நெருங்கி பழகியவர்.

சமரச சன்மார்க்க கீர்த்தனைகள் பலவற்றைத் தமிழில் பாடியுள்ளார். அவர் காலத்திலேயே சமரச சன்மார்க்கக் கீர்த்தனைகள் பிரபலமாக இருந்தன.

உ.வே. சாமிநாதையர் தான் எழுதிய மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரத்திலும், நந்தன் சரித்திரம் இயற்றிய கோபாலகிருஷ்ண பாரதியார் சரித்திரத்திலும் வேதநாயகம் பிள்ளை கீர்த்தனைகள் பற்றி எழுதி உள்ளார். மேலும் தாது வருட பஞ்ச காலத்தில் முன்சீப் என்ற முறையிலும், தனிப்பட்ட மனிதாபிமான வகையிலும் மக்களுக்கு அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளைப் பார்த்Ð நெஞ்சுருகிய கோபாலகிருஷ்ண பாரதியார், 'நீயே புருஷமேரு'-என்று பாடியுள்ளதை உ.வே.சாமிநாதையர் எழுதி உள்ளார்.

மேலும் நீயே புருஷ மேரு என்பதுதான் பாரதியார் நாளைப் பற்றி பாடி உள்ள ஜமா பாடல் என்றும் அதன் முதல் வரி தவிர மற்ற வரிகள் நினைவில் இல்லையென்றும் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நாவல்கள் பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது.

ஏனெனில் பத்தொன்பதாவது நூற்றாண்டில் தமிழ் நாட்டில் நாவல் படிப்பதும் எழுதுவதும் கெளரவமான செயலாக இல்லை. இலக்கியம் என்பது கவிதையாக செய்யுளாக இருந்தது. புலவர்கள் இதர புலவர்களோடு எழுதக் கூடியது. பொதுமக்கள் கூத்து பார்த்¾¡ர்கள். கதை கேட்டார்கள்.

ஆங்கிலேயர்களின் ஆட்சி ஏற்பட்ட பிறகு பள்ளிக்கூடங்கள் தோன்றிய பிறகு அச்சில் புத்தகங்கள் அச்சிடப்பட்ட பின்னர் ஊர் திருவிழாக்களில் புத்தகங்கள் விற்பனை பொருளாக இடம் பெற்ற பின்னர்- அரசாங்கமும் புதிய இலக்கிய வகையான நாவல், சிறுகதைகள் எழுத ஊக்குவித்தது. அரசு ஊழியர்கள் நாவல் எழுத வசதியாக விடுமுறை கொடுத்தது.

எழுதப்பட்ட நாவல்களுக்குப் பரிசு கொடுத்தது. மேலும் ஆங்கில மொழியில் நாவல் படித்தவர்கள்- தங்களின் தாய்மொழியில் புதிய இலக்கிய வகையான நாவலைக் கொண்டு வரும் முயற்சியில்- நாவல் எழுதினார்கள்.

இந்திய மொழிகளில் முதன் முதலாக நாவல் எழுதியவர்கள் எல்லாம் ஆங்கிலம் படித்தவர்கள்தான். மேலும் அரசில் கெளரவமான பணியில் இருந்தவர்கள். அவர்கள் காவிய மரபு மீறாமல் நாவல் எழுதினார்கள்.

ஆனால் விரைவிலேயே நாவல் என்பதன் அர்த்தம் மாறிவிட்டது. காவிய போக்கு போய்விட்டது. சாதாரணமான மக்கள் நாவலில் இடம்பெற்றார்கள். அவர்களின் சாதாரணமான வாழ்க்கையும், சாதரணமான மொழியும் இடம்பெற்றன.

எனவே முறையான படிப்பு-முறையான வாழ்க்கை என்பதில் அதிகமான நம்பிக்கைக் கொண்டிருந்த புலவர்கள் மிரண்டு போய்விட்டார்கள். அதன் காரணமாக பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் நவீன படைப்பு இலக்கியம் இடம்பெறாமல் போய்விட்டது.

அதோடு முறையான படிப்புப் படித்தவர்கள் நாவல், சிறுகதை எழுத முன்வராமல் ஒதுங்கிவிட்டனர். இரண்டு தலைமுறையினர் நவீன படைப்பு இலக்கியத்தை கல்லூரிக்கு வெளியில்தான் படித்த¨¾ அனுபவிக்க வேண்டியதாகியது. அது சமூகத்தை முடமாக்கியது. §Áலும் முறையான பÊôÒ படித்தவர்கள் செய்யுள் எழுதக் கூடிய புலவர்கள் ஆனார்கள். பல நாவலாசிரியர்கள் தோன்ற வேண்டிய இடத்தில் டாக்டர் மு. வரதராசனார் மட்டுமே நிலை பெற்று இருந்தார். அவரும் காலவோட்டத்தோடு போய்விட்டார்.

தமிழ் மொழியை செம்மொழி ஆக்கியது யார்? படைப்பு எழுத்தாளர்கள். அ¾¡வது பண்டைய காலத்தில் கவிஞர்கள். அவர்கள் புலவர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்தார்கள்.

சிங்கப்பூரில் ஆங்கிலக் கவிஞர்- பேராசிரியர் எட்வின் தம்புவிடம் பேசிக் கொண்டு இருந்தேன். எட்வின் தம்பு தமிழர். தமிழ் அறியாத கவிஞர். அவர் சொன்னார், தமிழ், சீன, ஜப்பானிய இலக்கிய மரபு என்பது புலவர்கள் மரபு. அதாவது புலவர்கள் கவிஞர்களாகவும் இருந்தார்கள். புலமை கவியாக இருக்க உதவியது. ஆனால் இக்காலத்தில் புலமை, கவிதைக்கு இடையூறாகிவிட்டது-என்று.

தமிழ் செம்மொழியாக யாரால் ஆனது? கவிகளால், படைப்பு எழுத்தாளர்களால்.

தமிழ், செம்மொழி என்ற தகுதியை சங்கப் புலவர்கள்-அவர்களை சங்கக் கவிகள் என்று சாதராணமாக அது பற்றியே சொல்வது இல்லை. அதாவது கபிலர், கணியன் பூங்குன்றனார், கடியலூர் உத்திரங்கண்ணனார், காக்கைப்பாடினார், ஒளவையார், நன்முல்லையார், இளங்கோ அடிகள், தொல்காப்பியர், திருவள்ளுவர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், ஞானசம்பந்தர், கம்பர், நாவுக்கரசர், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், தாயுமானவர், சித்தர்கள், இராமலிங்க சுவாமிகள், பாரதியார், பாரதிதாசன், புதுமைப் பித்தன், மெளனி என்று நீளும் வரிசை. எதற்கும் உரிமை கோருவதில்லை. ஏனெனில் அது எதிர்க்குரல் எழுப்புவது.

மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ என்று கிளம்பி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்று சொல்லி இருப்பதை எடுத்துச் சொல்வது.

தமிழ் மொழி செம்மொழி; ஜீவித்துக் கொண்டு இருக்கும் மொழி. அதன் உயிர்த்துடிப்பு கவிகள், படைப்பு எழுத்தாளர்களிடமே உள்ளது.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13 , Article 14


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...