அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழக அரசின் மாத வருமானம் ரூ.85,685 கோடி ,அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.25,751 கோடி

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   15 , 2011  21:11:44 IST

தமிழக அரசின் மாத வருமானம் ரூ.85,685 கோடி ,தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக மாதந்தோறும் ரூ.25,751 கோடியும், ஓய்வூதியதாரர்களுக்காக மாதம் ரூ.12,304 கோடியும் செலவிடப்படுவதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நேற்று(14.09.2011) நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசுகையில்,'தமிழக அரசுக்கு விற்பனை வரிகள் மூலம் ரூ.37,191 கோடியும், ஆயத் தீர்வைகள் மூலம் ரூ.10,191 கோடியும், முத்திரைத்தாள் மற்றும் பதிவுத்துறை மூலம் ரூ.6,492 கோடியும், வாகனங்கள் பதிவு வரிகள் மூலம் ரூ.3,235 கோடியும் வருவாய் கிடைக்கிறது. மத்திய அரசு அளிக்கும் வரி வருவாய் உள்ளிட்ட பிற வகையான வருவாய் மூலம் ரூ.85,685 கோடி நிதி திரட்டப்படுகிறது.

இதில், அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் மாதச் சம்பளத்துக்கென ரூ.25,751 கோடியும், ஓய்வூதியதாரர்களுக்காக ரூ.12,304 கோடியும், நிர்வாகச் செலவுகளுக்காக ரூ.13,015 கோடியும், வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.15,877 கோடியும் என மொத்தம் ரூ.1,01,388 கோடி செலவாகிறது.

சென்னையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு ரூ.500 கோடியும், சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.750 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த ஆண்டு ரூ.14,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.13,052 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகம். இந்த நிதியாண்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.4,761 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...