அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நாட்குறிப்புகளின் காலம் - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : புதன்கிழமை,   மார்ச்   01 , 2006  08:40:56 IST

டையரி

தினப்படி சேதி குறிப்பு

ஜனவரி மாதம் டையரி-நாட்குறிப்புகளின் காலம்.

பெரிய பெரிய நிறுவனங்கள் அழகிய முறையில் நேர்த்தியான கட்டமைப்பில் நாட்குறிப்புக்களை தயாரித்து வெளியிடுகின்றன. மனங்கவரும் முறையில் உள்ள டையரிகளை வாங்கி அரசின் உயர் அதிகாரிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பது காண்டிராக்டர்கள், மற்றும் வியாபார சம்பந்தம் வைத்துக் கொள்கிறவர்கள் வழக்கம். டையரி ஜனவரி அன்பளிப்பு.

அதிகாரிகள் சொந்த டையரி எழுதுவதில்லை. கணக்குகளை நாட்குறிப்பில் பதிவதில்லை. ஏனெனில் நாட்குறிப்பு என்பது உண்மையான குறிப்பு. நிஜத்தை நிஜமாகவே பதித்து வைப்பது. அதில் ஒளிவு மறைவிற்கு இடமில்லை. எனவே அதிகாரிகள் தங்களுக்கு அன்பளிப்பாக வரும் அழகிய- விலையுயர்ந்த நாட் குறிப்பு நோட்டுக்களை, நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். அதுவும், எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக. ஏனெனில் அது தொந்தரவு கொடுக்கக் கூடியது.

முதல் தரமான காகிதத்தில் சிறப்பான தொழில்நுட்பத்தில் உருவான நாட்குறிப்பு நோட்டைப் பெற்ற நண்பர்கள் உறவினர்கள் நான்கைந்து நாட்களுக்கு உப்புச் சப்பில்லாமல் எழுதுகிறார்கள். நடந்ததை நடந்த மாதிரி எழுதுவதில் உள்ள சிரமம் தெரிகிறது. அதோடு சோம்பலும் சேர்ந்து கொண்டு வருகிறது.

எனவே நாட்குறிப்பு எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள்.

நாட்குறிப்பு-டையரி எழுத நல்ல காகிதம்-நேர்த்தியான பைண்ட் நோட்டு தேவையில்லை. நல்ல இதயமும்-நடந்ததை நடந்த மாதிரி எழுத மனோ நிலையுந்தான் வேண்டும். அப்புறம் துணிவு. ஏனெனில் உண்மையை எழுத வேண்டும். உண்மை எல்லோருக்கும் உவப்பாக இருப்பதில்லை. எழுதுகிறவருக்கு உட்பட. அதனால் ஒரு மாதம் தொடர்ந்து டையரி எழுதியவர்கள் வெகு சொற்பம். ஓராண்டு எழுதியவர்கள் அபூர்வம். பத்தாண்டு, பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து டையரி எழுதியவர்கள் பாக்கியசாலிகள். ஏனெனில் அவர்களின் ஆர்வமும்-எழுத எழுத அதில் சுவை கண்டவர்கள்.

டையரி எழுதி கைவிட்டவர்கள்- எழுத ஒன்றுமே இல்லை என்பதாலேயும்- எழுதாமல் இருந்து விடுகின்றனர்.

தன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எழுத விஷயம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டதாலும் தொடர்ந்து எழுதுகிறார்கள்.

தமிழ் மொழியில் இருபத்தி நான்காண்டு காலம் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதி சாதனை புரிந்தவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் புதுச்சேரி ஆனந்தரங்கம்பிள்ளை. தன் இருபத்தேழாவது வயதில் அதாவது 1736ஆம் ஆண்டில் நாடி குறிப்பை எழுத ஆரம்பித்த அவர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் எழுதினார். அவர் பிரஞ்சு கவர்னர் டூப்ளேவின் துபாஷி. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான தரகர். எனவே பிரஞ்சு அரசாங்கத்தின் அரசியல், வணிக நடவடிக்கைகள் அவருக்கு நன்கு தெரிந்து இருந்தது.

ஆனந்தரங்கப்பிள்ளை சென்னை பெரம்பூரில் 1709ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் தந்தையார், தன் உறவினர் தரகு வேலை செய்து வந்த புதுச்சேரி முன்னேற்றத்திற்கு வசதியாக இருக்குமென இடம்பெயர்ந்தார். எனவே ஆனந்தரங்கம்பிள்ளையின் வாழ்க்கை புதுச்சேரி வாழ்க்கையானது. அவர் தமிழ், பிரஞ்சு, தெலுங்கு மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றார். உருது புரிந்து கொள்ளும் அளவிற்குக் கற்றார். பின்னர் தரகுத் தொழிலில் ஈடுபட்டார். துப்ளே அவரை கை தூக்கிவிட்டார். வெகு விரைவில் அவர் மேலே வந்துவிட்டார்.

தரகு தொழில் புரிந்து கொண்டிருந்த அவருக்கு இருபத்தேழாவது வயதில் டையரி எழுத வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அது ஏன் வந்தது என்பதற்கான காரணம் ஒன்றும் தெரியவில்லை. அவரும் சொல்லவில்லை. ஆனால் 1736ஆம் ஆண்டில் டையரி எழுத ஆரம்பித்த அவர் 1760 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எழுதிக் கொண்டே வந்தார். ஜனவரி 1761ஆம் ஆண்டில் மரணமுற்றார். மரணம் வரையில் அவர் தொடர்ந்து எழுதிவந்தார் என்பதுதான் முக்கியம்.

தினப்படி சேதி குறிப்பு-என்ற அவர் டையரி முக்கியமான ஆவணம். பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழக நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முக்கிய ஆவணமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து கப்பல் வந்தது. கடற்கொள்ளை, ஆங்கிலேய-பிரெஞ்சுக்காரர்கள் வாணிகப் போட்டி, யுத்தம், நவாப்புகள் அட்டகாசம், தரகர்களின் சூழ்ச்சி, பொறாமை, நிலையான ஆட்சி இல்லாமல் பொதுமக்கள் பட்ட சிரமம், தீவட்டிக் கொள்ளைக்காரர்கள், புயல், மழை, வெள்ளம், அப்புறம் பஞ்சம், லஞ்சம், ஊழல்- என்று ஒவ்வொரு நாளும் கண்டவற்றை பற்றி அவர் எழுதி இருக்கிறார்.

அவர் காலத்தில் புதுச்சேரியில் நடந்த எந்த ஒன்றும் அவர் பார்வையில் இருந்து தப்பவில்லை. எல்லா நாட்களும் ஒரு நாள் போல இல்லை. எனவே அவர் நாட்குறிப்பிலும் அது தெரிகிறது.

சில நாட்கள் நிறைய பக்கங்கள் எழுதி உள்ளார். சில நாட்கள் நான்கைந்து வரிகள் மட்டும் எழுதி உள்ளார். அவர் டையரியை நடந்த சம்பவங்கள்தான் எழுதக் காரணமாக இருந்து இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

அவர் நாட்குறிப்பின் முக்கியமான அம்சம் அதன் மொழி. அவர் சாதாரணமான பேச்சுத் தமிழில் எழுதி இருக்கிறார். எனவே நிறைய புலவர்கள் குறை சொல்ல இடம் இருக்கிறது. தன்னால் எழுத நாட்களில் ஆள் வைத்து எழுதி இருக்கிறார். அதுவும் அவர் எழுதியது போலவே பிழைகளோடு இருக்கின்றன. ஆனந்தரங்கப் பிள்ளையின் தினப்படி சேதி குறிப்பு- என்பதின் சிறப்பே அதுதான். அதாவது பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் எப்படி பேசப்பட்டது என்பதற்கு ஒரே ஆவணமாக வெளியே உள்ளது.

ஆனந்தரங்கப்பிள்லையின் தினப்படி சேதிக் குறிப்பு 1904ஆம் ஆண்டில் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. சில பகுதிகள் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

புதுச்சேரியில் இருந்த வ.வே.சு. ஐயர். ஆனந்தரங்கப்பிள்ளையின் தினப்படி சேதிக் குறிப்பைப் பார்த்துவிட்டு 1924ஆம் ஆண்டில் பாலபாரதியில் அந்த நூல் மிகவும் அபூர்வமான நூலாகும் என்று எழுதினார். அதன் பின்னரே ஆனந்தரங்கம் பிள்ளையின் தமிழ் நாட்குறிப்பு இருப்பது தெரியவந்தது.

1948ஆம் ஆண்டில் அது புத்தகமாக வெளிவந்தது. ஏனெனில் புதிதாக சிறுகதைகள், நாவல்கள் எழுத அது ஒரு மொழி நடையைக் கொடுத்தது. தமிழில் பேச்சுத் தமிழில் எழுதப்படும் படைப்புகளுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பது ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்புதான்.

ஒரு கவிமனம் அவருக்கு இருந்தது டையரியைப் படிக்கையில் தெரிகிறது. அதனால் அவர் தமிழ் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.

1746ஆம் ஆண்டு தமிழ் அஷய ஆண்டு சித்திரை மாதம் 13ஆம் தேதி அவர் எழுதி இருப்பது.

"இந்த நாள் வெள்ளிக்கிழமை பட்டணத்திலே நடந்த அதிசயம் என்னவென்றால் முசே கொக்கத் என்கிறவர் சுமார்ஷம் நொத்தேராயிருக்கிறவன் நேüறைய தினம் சாயங்காலமான ஏழு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு மீராப் பள்ளியிலேயிருக்கிற மூசே பாஸ்க்கு (M.Basque) தோட்டத்திற்குப் போய் சாராயம் குடித்து அவ்விடத்திலேயிருந்து மறுபடி வீட்டுக்குப் போகிறவன் அந்தத் தெருவிலே ஒரு வீட்டிகுள்ளே புகுந்து பெண்டுகளிருக்கிறார்களே என்று பார்க்கிறபோது இருட்டாயிருந்தபடியினாலே அடுப்படியிலேயிருந்¾ கொள்ளியை எடுத்துக்கொண்டு விசுறும்போது வீட்டுக்குள்ளேயிருந்த ஒரு பெண்மணி வெளியே புறப்பட்டு ஓடுகையில், இவன் இருப்பதை உருவினÅ¡க்கே ஒÎகையில், அவள் ஓடிப்போய் அவ்விடயத்திலிருந்த அசல் வீட்டில் புகுந்து வெகுவாய்க் கூப்பிட்டு அழுதாள். அப்போது அவ்விடத்திலிருந்த தமிழரும் பிýனையும் சிறிது வழிநடப்புக்காரரும் கூடி சொல்லாது வந்து புகுந்தா¦Éன்று பார்க்கும்போது இவன் இவ்விடத்திலிருந்து புதுசாய்க் கட்டின கூரைவீடு கதவில்லாபடியினாலே அந்த வீட்டில் புகுந்து ஒளிந்துகொண்டான். அப்போது தமிழர் பயந்து வீட்டைச் சுற்றியிருந்தார்கள். அவன் அந்த வீட்டிலே சற்று நேரமிருந்து புறப்பட்டு மண்ணாங்கட்டிகளை எடுத்து ¦¸¡ñÎ போட்டான். அப்போது அந்தத் தெருவிலே கூட்டமாய்ப் பதுங்கியிருந்தவர்கள் பிறகே நாலு பேர் போய் பிடித்து எல்லாருங்கூடி அடித்து அவனுடைய பொன் பொத்தான் முதலாகிய வஸ்துவெல்லாம் கிழிந்து போகத்தக்கதாக அடித்து கத்தியையும், பிரம்பையும் பிடுங்கிக் கொண்டு சின்னதுரை வீட்டில் கொண்டு போய் ஒப்பித்தார்கள்.

அடித்த அடியானால் தலை பிளந்து போய் இனிமேல் பிழைக்கமாட்டாý என்று சொல்கிறார்கள். அவனுடைய ஆயிசு எப்படியிருக்கிறதோ, அது இனிமேல் அறிய வேணும். இந்தச் சேதி துரையவர்கள் கேட்டு தமிழன் வீட்டுக்குள்ளே வெள்ளைக்காரன் புகுந்துகொண்டு பெண்டு பிடிக்கப் போனால் அவர்கள் சும்மாயிருப்பார்களா...நல்ல வேலை செய்தார்கள் என்று சொன்னார். அடித்தவர்களின்னார் என்று தெரியாதபடியினால் விசாரிக்கிறார்கள். இன்னமும் அடித்தவன் அகப்படவில்லை.".

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12 ,Article 13


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...