![]() |
ஜென்ம ஜென்மத்துக்கும் உங்கள் அன்பை மறக்க மாட்டேன் - ரஜினிகாந்த்Posted : திங்கட்கிழமை, ஜுன் 20 , 2011 08:51:46 IST
'நான் இப்போது குணம் அடைந்து கொண்டு இருக்கிறேன். அதற்கு முழுமுதல் காரணம் நீங்கள் என் மீது வைத்திருக்கின்ற அன்புதான். அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, பிள்ளையாக என்னை நீங்கள் நினைப்பதுதான் காரணம்.
ஜென்ம ஜென்மத்துக்கும் உங்கள் அன்பை மறக்க மாட்டேன். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை' என்று தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சிங்கப்பூரில் ஒய்வெடுத்து வரும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ரஜினிகாந்த் வெளியிட்ட அந்த கடிதத்தில்,'மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் பேனா மற்றும் பேப்பர் எடுத்து ரசிகர்களுக்கு எழுதும் போது வார்த்தைகள் வரவில்லை. எந்த உதவியையும் செய்ய உறுதி மொழி அளித்த தமிழக முதல்வருடனும், அருமை நண்பர் கருணாநிதியுடனும் பேசிய பிறகு உங்களுடன் பேசுகிறேன். முதலில் உங்களிடம் பேசாமல் இருந்ததற்கு மன்னிக்கவும். இந்த விஞ்ஞான உலகத்தில் கூட, எந்த விளையாட்டை விளையாடினாலும் காசை மேலே தூக்கிப் போட்டு, ஆட்டத்தை யார் முதலில் விளையாடுவது என்று முடிவு செய்கிறார்கள். காசை மேலே தூக்கி போடுவதுதான் மனிதனின் வேலை. பூவா அல்லது தலையா என்பதை தீர்மானிப்பது ஆண்டவனுடைய செயல். என்னுடைய இந்த விளையாட்டில், ஒரு பக்கம் பணம், விஞ்ஞானம், மருத்துவம், தலைசிறந்த மருத்துவர்கள் இருக்க, இன்னொரு பக்கம் ரசிகர்களின் பூஜைகள், வேண்டுதல்கள்தான் இருந்தன. அதுதான் என்னை காப்பாற்றி இருக்கிறது. ரஜினிக்கு எவ்வளவு மக்கள் அன்பு இருக்கிறது என்று உலகத்துக்கு காட்டி விட்டீர்கள். நான் இப்போது குணம் அடைந்து கொண்டு இருக்கிறேன். அதற்கு முழுமுதல் காரணம் நீங்கள் என் மீது வைத்திருக்கின்ற அன்புதான். அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, பிள்ளையாக என்னை நீங்கள் நினைப்பதுதான் காரணம். ஜென்ம ஜென்மத்துக்கும் உங்கள் அன்பை மறக்க மாட்டேன். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இனி, உங்களை மகிழ்விப்பதுதான் என்னுடைய லட்சியம். கூடிய விரைவில் "ராணா' படத்தில் தோன்றி உங்களை மகிழ்விப்பேன். நான், உங்களுடைய எல்லா நன்மைகளுக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்' என்று எழுதியுள்ளார்.
|
|