???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்! 0 கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் 0 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147 பேர் ராஜினாமா அறிவிப்பு! 0 நடிகர் தனுஷை சொந்தம் கொண்டாடிய மதுரை தம்பதி: வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் 0 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது: டெல்லி உயர்நீதிமன்றம் 0 உலகின் அதிவேக ஏவுகணை: பிரமோஸ் சோதனை வெற்றி! 0 மாநிலங்களவை தேர்தல்: பாஜகவிற்கு வாக்களித்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்கள்! 0 உள்ளாட்சித் தேர்தல் தாமதத்திற்கு திமுக காரணம் என்பது வடிகட்டிய பொய்: ஸ்டாலின் 0 திசை மாறிப்போன குழந்தைகள் மீண்டும் தாய் கட்சிக்கு திரும்புவார்கள்: முதல்வர் நம்பிக்கை 0 பேஸ்புக் தகவல் திருட்டு: விஷயம் இதோடு முடிந்துபோய் விடவில்லை! 0 காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுகிறது: கமல் குற்றச்சாட்டு! 0 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தொடங்கியது! 0 தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா - சென்னையில் இன்று நடக்கிறது! 0 இன்று பகத்சிங்கின் 87வது நினைவு தினம்! 0 குரங்கணி காட்டுத்தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நான் யார் தெரியுமா? - º¡.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   28 , 2006  21:13:48 IST

நான் யார் தெரியுமா?

நான் யாரென்று காட்டட்டுமா?

கோபம் வருகிறபோது மனிதன் கேட்கிற கேள்வி. அதுவும் தனக்குக் கீழே இருக்கிறவர்களிடம்- குறிப்பாக மனைவி, மக்கள், ஊழியர்களிடம் கேட்டது. எங்கு அதிகாரம் செல்லுமோ அங்கு தன் அதிகாரத்தை நிலைநாட்ட முடியும் என்பதை நிலைநாட்டுவது. மனிதன் எப்பொழுதும் முகமூடி போட்டுக் கொண்டு இருக்கிறான்.

அதாவது நல்லவன், நேர்மையானவன், உத்தமன்-இப்படியாக அதற்குப் பங்கம் வருகிறது என்று நினைக்கிற போது சுயரூபத்தைக் காட்ட ஆசைப்படுகிறான். சுயரூபம் என்பது கோரமான முகம். பார்க்கவே சகிக்காது. அது ஆணவம், அகம்பாவத்தின் அடையாளம்.

மனிதன் என்பவன் ஒரு மனிதன் இல்லை. நல்லவன், கெட்டவன் என்று மனிதனைத் தீர்மானிக்க முடியாது. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொருவிதமாக இருக்கக் கூடியவன். எது தனக்குத் தேவையோ அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ளக் கூடியவன். தன் ஆசை, விருப்பம் என்பதை அடைய பாயவும் பதுங்கவும் கூடியவன். குறிப்பாக தனக்கு மேல் பலம் கொண்டவர்கள், அதிகாரம் படைத்தவர்களிடம் பணிவாகவும் அடக்கமாகவும் நடந்து கொள்ளக் கூடியவன். எது தன் எஜமானர்க்கு விருப்பமோ அதைச் செய்யக் கூடியவன். அதில் கூச்சம் நாணமெல்லாம் கொள்ளக் கூடியவன் இல்லை. அதில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் இலை. எல்லோரும் ஒன்றுதான்.

அதுபோலவே தனக்குக் கீழ்ப்பட்டவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதில் எல்லையற்ற ஆர்வங்கொண்டவன். அதிகாரம் செலுத்துவதில் உள்ள அதிகாரமே அவனை ஜீவிக்க வைக்கிறது. மனிதன் என்பவன் அறிய முடியாதவன். அவர் ஓர் புதிர் என்பதெல்லாம் மனிதனின் கர்வம், ஆணவம், அகம்பாவம் என்பதை எல்லாம் மறைத்து வைப்பதுதான்.

மனிதன் அறிவு ஆற்றல் பகுத்தறியும் திறமை என்பது ஆணவத்தின் ஆட்சியைத்தான் நிலை நாட்டி உள்ளது. உடல் பலம் கொண்டவன், அறிவு பலம் கொண்டவன், தொழில் பலம் கொண்டவன். அதாவது பலம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டுதான் மனிதன் செயல்படுகிறான் என்பது இல்லை. இயல்பாகவே வருவது. அதை இன்னொருவரிடம் இருந்து கற்பதில்லை. அது மனிதன் அப்படியொன்றும் நாகரிகம், பண்பாடு பெற்றவன் இல்லை என்பதின் சாரந்தான். மனிதனைச் சாந்தப்படுத்துகிற- அவன் அகம்பாவம், தன் நலம், ஆணவம் என்பதை மட்டுப்படுத்த ஒவ்வொரு தலைமுறையிலும் சிலர் தோன்றி நீதிநெறி, பண்பு நலம், சமூக ஒழுக்கம், சமூக நீதி என்றெல்லாம் உபதேசித்து வந்து இருக்கிறார்கள். இப்படி உபதேசிக்க வந்தவர்களில் பலருக்கு சிறையும், தூக்குத் தண்டனையும் கொடுத்து இருக்கிறான்.

வேறு சிலரை நிந்தித்து பைத்தியம் என்று ஒதுக்கி வைத்திருக்கிறான்.

அது, நான் யார் தெரியுமா? என்று கேட்டுக் கொடுத்தது.

நான் யார் தெரியுமா? என்று கேட்காத ஆளில்லை. சிலர் குரல் வெளியில் சப்தமாகவே கேட்கிறது

வேறு சில குரல் வெளியில் கேட்பதில்லை. ஆனால் மனசுக்குள் கேட்டு காரியம் செய்கிறது. அந்த காரியம் உடனே பலன் அளிக்காவிட்டாலும் கொஞ்ச நாள் போய் பலனளிக்கிறது. அப்போது நான் யார் தெரியுமா? என்று கொக்கரிக்கிறான்.

தமிழ் முதல் நாவலாசிரியர்- தன் பிரதாப முதலியார் சரித்திரத்தில் ஒரு காட்சி வருகிறது. தன் சிநேகிதன் பெரிய பணக்காரனாகிவிட்டான் என்பதை கேள்விப்பட்டு அவனைப் பார்க்கச் செல்கிறான். புதிய பணக்காரனுக்கு தன் பழைய நண்பனை- ஏழையைப் பார்க்கப் பிடிக்கவில்லை. நான் யார் தெரியுமா? என்ற படி ஒரு பார்வைப் பார்க்கிறான்.

வந்தவன் நல்லவன். முதலில், பணக்காரனாகிவிட்ட நண்பன் போக்குப் புரியவில்லை. அப்புறம் புரிந்து கொண்டான்.

"நான் யார் தெரியுமா?" என்று கேட்கிறவர்கள் பதிலை எதிர்பார்ப்பதில்லை. தங்களின் அதிகாரம், ஆணவம் ஆகியவற்றையே தெரிவிக்க விரும்புகிறார்கள்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி சென்னை வசந்தவிகார் என்னும் மரங்கள் அடர்ந்த தோட்டத்தில் காக்கைகள் கரைய டிசம்பர் மாதத்தில் உரை நிகழ்த்துவார். தலைவர், முன்னுரை, அறிமுகம், நன்றியுரை எதுவும் கிடையாது. சரியாக ஐந்து மணிக்கு வந்து அமர்வார். ஒரு மணிநேரம் பேசிவிட்டு எழுந்து போய் விடுவார். இருநூறு பேர்கள் கூட்டுகிற கூட்டம் அது.

சில நாட்கள் காலைப் பொழுதில் உலாவிக் கொண்ட அவர் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்வார். சில கேள்விகள் சரியாக அவர் காதில் விழாவிட்டால், "Sir,I beg your pardon" என்பார் பள்ளிக்கூட சிறுவன் மாதிரி. அது போலி இல்லை என்பது பார்த்தவர்களுக்குத் தெரியும். எந்தக் கேள்வி கேட்டாலும் சரி அவர் பதில் சொல்லுவார். எந்த பதிலிலும் நான் யார் தெரியுமா? என்பதில் சாயல் இருக்காது.

உண்மையான பெரிய மனிதர்கள் சவால் போடுவதில்லை. அன்பர்கள், புது பணக்காரர்கள், அதிகார வெறி படித்தவர்கள் சவால் இருக்கிறவர்கள். அதாவது தான் யாரென்றே தெரியாமல் இருக்கிறவர்கள், 'நான் யார் தெரியுமா?' என்று கேட்கிறார்கள்.

அது ஒரு சரித்திரமாக இருந்து வருகிறது.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11 ,Article 12


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...