அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அரசுகள் செய்யவேண்டியதை மருது தனிமனிதராகச் செய்துள்ளார்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   21 , 2011  01:32:18 IST

ஓவியர் டிராட்ஸ்கி மருது வரைந்த தமிழ் மன்னர்கள் ஓவியத் தொகுப்பு வாளோர் ஆடிய அமலை என்கிற பெயரில் நூலாக கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அமலை என்றால் பழங்காலத்தில் போர் வெற்றிக்குப் பிறகு ஆடிய ஒரு வகைக் கூத்தின் பெயர் அமலைக்கூத்தாம்.

நிகழ்வில் பேராசிரியர் நாகநாதன், இயக்குனர்கள் ஜனநாதன், மிஷ்கின், நாசர், எழுத்தாளர் பிரபஞ்சன், அரங்கேற்றம் ஆசிரியர் கிள்ளிவளவன், ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

எழுத்தாளர் பிரபஞ்சன் பேசுகையில்,‘‘ தமிழர் வாழ்வு என்பது மகிழ்வான வாழ்வே. ஆனால் சமணமும் பவுத்தமும் வந்தபிறகே தன்னை வருத்திக்கொள்ளும் வடக்கிருந்து உயிர்நீத்தல் போன்றவை அறிமுகம் ஆயின. கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு புகழ்பெற்றது. கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்து உயிர்நீத்தார் பிசிராந்தையார். இவர்களுடன் ஒத்தையார் என்பவரும் உயிர்நீக்கத் துணிகிறார். ஆனால் அவரது மனைவி கருவுற்றிருக்கிற படியால் வேண்டாம் என்று சோழன் கேட்டுக் கொள்ள, குழந்தை பிறந்தபிறகு உயிர்நீக்கிறார் ஒத்தையார். இந்த வரலாறு பெரிதாக அறியப்படாதது. மருது அதை இங்கே வரைந்திருக்கிறார். சோழர்கள் உறையூர், பூம்புகார், திருவாரூர் என மூன்று இடங்களில் ஆட்சி செய்துள்ளனர். மனுநீதி சோழன் என அறியப்படுபவன் உண்மையில் மன்பதை நீதிசோழன். உலகுக்கு நீதி சொன்னவன். அக்கால நீதியை மகன் என்றும் பாராமல் கடைபிடித்தவன். களப்பிரர் காலம் இருண்டகாலம் என்கிறார்கள். தமிழின் சிறந்த இலக்கியங்கள் உருவான காலம் அது. அது எப்படி இருண்டகாலம் ஆகும்? பிராமணர்களுக்க் வழங்கப்பட்ட மங்கலம் போன்ற நில மானியங்களை நிறுத்தியதால் அவர்களின் வரலாறு இருட்டடிக்கப்பட்டிருக்கவேண்டும். உலகின் கலை வடிவங்கள் நவீன காலத்தில் வளர்ச்சி பெறும்போது தம் மண்ணின் வேர்களைத் தேடிச்செல்லும். லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் அப்படித்தான். மருதுவும் அதைத்தான் செய்கிறார். ஆதிமூலமும் செய்தார். மருது இதற்காக இருபது ஆண்டுக்ள் உழைத்துள்ளார். கோயில் கோயிலாகச் சென்று கவனித்து வந்துள்ளார். மக்களுடன் மக்களாக வாழ்ந்த தமிழ் மன்னர்கள் பற்றிய இந்த நூல் நமதுநூலகங்களில் இருக்கவேண்டிய ஒன்று. நம் அரசுகள் செய்யவேண்டியதை மருது தனிமனிதராகச் செய்துள்ளார்’’ என்று பாராட்டினார்.
ஜனநாதன் பேசுகையில்,‘‘ நான் மூன்று படங்கள் எடுத்துள்ளேன். நிறைய படங்கள் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளேன். ஆனாலும் இன்றும் மருது அவர்களிடம் சினிமா கற்றுக்கொண்டுதான் வருகிறேன்’’ என்றார்.
‘பழந்தமிழர்கள் மிகுந்த அறிவாளிகளாக இருந்தார்கள். பித்தாகரஸ் தேற்றம் தெரியாமல் அவர்களால் தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டியிருக்கமுடியாது. மிக சிறப்பான வடிவமைப்பை ஓவியமாக வரையாமல் அவர்களால் அக்கோவிலைக் கட்டியிருக்க முடியாது. பிதாகரஸ் தேற்றத்தைக் குறிக்கும் தமிழ்ப்பாடல் ஒன்று கூட உள்ளது. காலத்துக்கு ஏற்ப தமிழர் வரலாற்றை மீள் வாசிப்பு செய்யவேண்டியது அவசியம். அதை மருது தன் ஓவியங்கள் மூலமாக செய்கிறார்’’ என்றார் ஜனநாதன்.

மிஷ்கின் டிராட்ஸ்கி மருதுவுக்கும் தனக்கும் உள்ள நட்பு பிசிராந்தையார் & கோப்பெருஞ்சோழன் நட்பு என்றார். அதற்கு உதாரணமாக லேண்ட்மார்க்கில் மருதுவுக்குக் கொடுப்பதற்காக புத்தகம் ஒன்று வாங்கியதைக் குறிப்பிட்டார். ‘‘ அந்த நூலை படித்து மருதுவுக்கு வசதியாக அடிக்கோடிட்டேன். பின் மருதுவிடம் அந்நூலை அவருக்குக் கொடுப்பதற்காக வாங்கினேன் என்ற போது, அவர் என் கையைப் பிடித்து கண் கலங்கினார். ஏனெனில் அந்நூலை ஏற்கெனவே எனக்குக் கொடுப்பதற்காக அவர் வாங்கி வைத்திருந்தார். அவருக்காக நான் வடக்கிருப்பேன்!’
‘‘ பல பக்கங்கள் படித்தாலும் விளங்காத பல விஷயங்களை மருதுவின் ஓவியங்கள் இரண்டே நொடியில் விளக்கிவிடுகின்றன. நந்தலாலாவில் கலை இயக்குநர் வேறு ஒருவர். ஆனாலும் மருது அவர்களை என்னுடன் இருக்கவேண்டும் என்று அழைத்தேன். அவர் அஞ்சாதே பார்த்துவிட்டு ஒரு விமர்சனம் செய்தார். ப்ரேமில் நிறைய ஸ்பேஸ் இருக்கிறதே என்று. அதை நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன். நந்தலாலாவில் ஒரு பிரேம் வைத்தால் அதை மருதுவின் தலையசைப்புக்குப் பின் தான் செயல்படுத்துவேன். அதனால்தான் அப்படத்தில் மருதுவை முதல்முதலாக அழகியல் இயக்குநர் என்று கிரெடிட் கொடுத்தேன்.’’ என்று பேசிக்கொண்டே போனார்.
‘‘ நந்தலலா கிக்குஜிரோவின் காப்பி அல்ல. அது அதன் இன்ஸ்பிரேஷன். ஸ்பையர் என்றால் தீ. கிகுஜிரோ பார்த்ததல் ஏற்பட்ட தீ, என் அண்ணன் ஒருவரால் ஏற்பட்ட பாதிப்பு. இரண்டையும் வைத்து அப்படத்தை எழுதினேன். ஆனால் எல்லொரும் காப்பி காப்பி என்கிறீர்கள்.’’ என்று ஆதங்கப்படவும் செய்தார் மிஷ்கின்.
கடைசியில் மருது மீதான ஒரு கவிதையையும் எனக்குக் கிடைத்த வைரம் மருது என்று அரங்கேற்றமும் செய்தார் மிஷ்கின்.
நாசர் பேசுகையில் தனக்கு சினிமா பற்றிக் கற்றுக்கொடுத்தவர் மருது என்றே தொடங்கினார்.‘‘ தேவதை படத்தில் பழந்தமிழ் சமூகம் பற்றி சிறப்பாக வடிவமைத்து உதவியவர் மருது. இப்புத்தகத்த்தில் இருக்கும் ஓவியங்கள் முதன்முதலில் ஓவிய வடிவம் பெற்றது எனக்காகத்தான். ராஜராஜனின் வாள் எனக்குக் கிடைத்தது பொன்ற பெருமை அது’’ என்றார்.
‘‘லியானார்டோ டாவின்சி பல் துறைகளில் வல்லவனாக விளங்கினார். அதுபோல பல்துறையில் சிறந்து விளங்குவது வரலாற்றை மறுவாசிப்பு செய்ய அவசியம். மருதுவின் இந்த ஓவியங்கள் தமிழர்களின் வீழ்ச்சிக்கான காரணத்தை தேடும் விதத்தில் மறு கண்டடைவு செய்யும் விதத்தில் அமைகின்றன. வீரம் என்பது விடாமுயற்சி, தொடர்முயற்சி. அது எல்லாமே இப்புத்தகத்தில் இருக்கிறது. பிக்காஸோ கலை என்பது உண்மையைக் கண்டறியும் கற்பனையே என்றார். இதுவும் அப்படித்தான். மருது போன்ற மிகச்சிறந்த கலைஞரை அவர் வாழும் காலத்தில் பாராட்டுவது மிகவும் சரியான ஒன்று’’ என்றார் பேராசிரியர் நாகநாதன்.

‘‘என் மாமனார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஜமதக்னி. அவர் 10000 பக்கங்கள் கையால் எழுதி மூலதனத்தை மொழிபெயர்த்தார். அதை நூலாக வெளியிட்டபோது அதற்கு அட்டைப்படம் மருதுதான். அவர் அப்புத்தகத்துக்காக மார்க்சை படமாக வரைந்தபோதுதான் அவர் ஆற்றலை நான் கண்டுகொண்டேன்’’ என்று நினைவு கூர்ந்தார் நாகநாதன்.
தடாகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அமுதரசன் வரவேற்புரை ஆற்றினார். கணேச குமாரன் நன்றி கூறினார். நிகழ்வில் நூலை பேராசிரியர் நாகநாதன் வெளியிட பிரபஞ்சன், ஜனநாதன், மிஷ்கின், கிள்ளிவளவன், சௌந்தர், அறிவுமதி, பாவை சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விழா மருதுவின் நண்பர்கள் உற்சாகமாக ஒன்று கூடி அவரைக் கொண்டாடிய ஒரு நிகழ்வாக அமைந்தது.

- அந்திமழை


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...