அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வர் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சிங்களத்தில் ஈழம் அடங்கினாலும்...சிங்களத்திற்குள் ஈழம் அடங்காது - கவிஞர் தமிழ்நதி

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   06 , 2011  00:24:17 IST

காலச்சுவடு பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டுவிழாவில் ஈழம்... தேவதைகளும் கைவிட்ட தேசம் என்ற தலைப்பில் வெளியான கவிஞர் தமிழ் நதியின் புத்தகத்தில் வெளிவந்த எழுத்தாளர் நாகர்ஜுனனின் வரிகள் இது. இதுதவிர காலச்சுவடு பதிப்பகத்தில் புத்தாயிரத்தில் தமிழ் களம், தீண்டபடாதமுத்தம், சின்னாரையத்தி, சூத்திரனின் கதை, ஆமென், அமைதியான நறுமணம், சக்தி பிறக்கும் கல்வி போன்ற புத்தகங்களின் வெளியீட்டு விழா 2.1.2011 அன்று மாலை சென்னை தேவ நேய பாவணர் அரங்கத்தில் 6 மணியளவில் நடந்தது.

தமிழ்நதியின் ஈழம் தேவதைகளும் கைவிட்ட தேசம் என்ற கவிதை தொகுப்பை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் வெளியிட வலைப்பூ பதிவாளர் லேகா ராமசுப்பிரமணியன் அவர்கள் பெற்றுகொண்டார்.பின்னர் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் சிறப்புரையில் பேசுகையில்.

’தமிழ் நதியின் இந்த புத்தகம் மிக அழகாக வந்திருக்கிறது, தமிழ்நதி அழகாக எழுதுகிறார், இது ஒரு வித்தியாசமான புத்தகம் , 20ம் நூற்றாண்டிலே ஒரு மிகப்பெரிய மானுட படுகொலை நடந்தது. அதை நேற்றும் பார்த்த, இன்றும் பார்த்துகொண்டிருக்கிற கவிஞர் தமிழ் நதி அவர்கள் கவிதைகளாக பதிவு செய்திருக்கிறார். இவருடைய கவிதைகள் இரத்தம் தொய்த்தும், கண்ணீர் தொய்த்ததுமாக இருக்கிறது, ஒரு இடத்தில் ஒரு பீரங்கி வருகிறது, அதில் ஒரு வீரனின் பெயர் பொறிக்கபட்டு இருக்கிறது, நாங்கள் அந்த பெயரை ஒரு பூவை தொடுவதுபோல் தொடுகிறோம், அப்போது எங்கள் கண்களில் கண்ணீர் வருகிறது என்று சொல்கிறார், மேலும் அந்த போர்களத்தில் ஆணையிரவு கைப்பற்ற பட்ட அந்த இரவு நாங்கள் ஒருவரை ஒருவர் பெருமிதமாக பார்த்துகொண்டோம், என்று சொல்கிறார், அடுத்து முத்துக்குமார் பற்றிய ஒரு பதிவில் முத்துக்குமார் மூடபட்ட கண்ணாடி பெட்டியில் இருக்கிறார். அப்போது ஒரு அரசியல் தலைவர் எழுந்து பேச வருகிறார், அப்போது ஒரு தொண்டன் எழுந்து உட்காரு , முதலில் யாருடன் கூட்டணி என்று சொல்லிவிட்டு பேசு என்கிறான், அது வரை தொண்டர்கள். அன்றுதான் தலைவரை பார்த்து கட்டளையிடுகிறார்கள் .மேலும் இவர் உண்ணாவிரதம் பற்றி குறிப்பிடுகிறார், 28.4.2009 அன்று நம் முதல்வர் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார், சரியாக மூன்றே முக்கால் மணி நேரம், காலை உணவுக்கு பின் , மதிய உணவுக்கு முன் . அந்த உண்ணாவிரதத்திற்கு மறுநாள் பத்திரிக்கையில் செய்தி வருகிறது “ மத்திய அரசு கோரிக்கையை ஏற்றார் ராஜபக்‌ஷே , கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி , இலங்கையை பணிய வைத்த உண்ணவிரதம், போரை நிறுத்திவிட்டதாக அறிவிப்பு , இப்படி பல விஷயங்களை சொல்லி நம்மை சிந்திக்க வைக்கிறார். மேலும் தீபசெல்வனின் ” ஒரே வார்த்தைக்காக தான் ஏங்குகிறார்கள். இறந்த இனம் மீண்டும் துய்க்கும்.” என்ற கவிதை வரிகளை சொல்கிறார். இலங்கை அரசு அங்கு என்ன செய்கிறது “ மரணத்தின் முன் பணிய வைப்பது , கோழையாக்கி கும்பிட வைப்பது , ஒன்றும் வேண்டாம் விட்டுவிடுங்கள் என்று சொல்ல வைப்பது இதை தான் செய்கிறது . மேலும் மணியன் மாமா என்ற கட்டுரை, ஒன்று உள்ளது. அடுத்து நாகர்ஜுனனின் வரிகள் . அவர் சொல்கிறார் ” இந்திய அரசும், தமிழக அரசும் ஈழத்தமிழனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் .” என்று .தொகுப்பு முடிவில் ”எல்லாம் முடிந்தது என்று உட்காருவதில் அர்த்தம் இல்லை, இனிதான் வாழபோகிறோம்.” .என்று சொல்லி முடிக்கிறார் . நீங்கள் கவலைபடாதீர்கள் உங்கள் தொப்புள் கொடி உறவு அறுந்துவிடாது, நீங்கள் மேலும் எழுத வேண்டும். உங்கள் பணி சிறக்க வேண்டும். என்று சொல்லி சுகிர்தராணியின் களப்பணி என்ற கவிதையை வாசித்து அவருடைய உரையை முடித்து கொண்டார்.

சுகிர்தராணியின் தீண்டபடாத முத்தம் என்ற நூலை கவிஞரும் , மொழிப்பெயர்ப்பாளரருமான திரு சுகுமாரன் அவர்கள் வெளியிட எழுத்தாளர் யாழன் ஆதி அவர்கள் பெற்று கொண்டார். பின் சுகுமாரன் அவர்கள் பேசுகையில் ’சுகிர்தராணியின் நூலை வெளியிடுவது இது இரண்டாவது முறை, இது ஒரு வகை மகிழ்ச்சியும் ,ஏமாற்றத்தையும் கொடுத்தது. ஒரு கவிஞனாக இந்த கவிதை தொகுப்பு பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். கவிதை வாசிப்பவரை விட எழுதுபவர்கள் அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில் சக எழுத்தாளர் பற்றி பேச சிலர் வரவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

இது இவருடைய நான்காவது தொகுப்பு . மொத்தம் ஐம்பது கவிதை உள்ளது. 4 தொகுப்புகளையும் ஒரு சேர பார்க்கும் போது ஒரு தொடர்ச்சிகளையும், தரத்தையும் பார்க்கமுடிகிறது. தமிழில் பெண்கள் எழுதுவதில் சில சிக்கல் உள்ளது , பெண்கள் எழுதுவதில் சாரமில்லாதவை, மற்றொன்று இலக்கியவகையில் அடங்காது, இதில் முக்கிய கவிஞருக்கும் பங்கு உண்டு, அழகான பெண்கள் அழகை பற்றி மட்டும்தான் எழுதுவார்கள் , அழகில்லாத பெண்கள் யோனியை பற்றி மட்டும் தான் எழுதுவார்கள் என்று ஒரு இலக்கிய பத்திரிக்கையில் வந்தது. கவிதைகள் மூன்று கூறுகளாக பிரிக்கலாம்

ஒன்று ஒடுக்கபட்டவர்கள் குரல் அது ஜாதியாக இருக்கலாம், இனமாக இருக்கலாம், பாலினமாக இருக்கலாம். இரண்டு பெண்ணின் காமமும் காதலும் பற்றியது,மூன்று இந்த கவிதையில் இடம் பெறும் இயற்கை . இவருடைய தொகுப்பில் மொத்தம் ஏழு கவிதைகள் முத்தம் பற்றிய தலைப்பில் உள்ளது,இன்னொரு 14 கவிதைகள் முத்தம் பற்றியது , ஆனால் எந்த முத்தமும் மகிழ்ச்சியின் அடையாளத்தை குறிப்பது அல்ல, வலியை பற்றி சொல்லபட்டவை. இவருடைய கவிதைகள் மிக அதிகமான விமர்சனங்களை பெறும் என்பது என் கருத்து . மேலும் தீண்டபடாத முத்தம் என்ற கவிதையை வாசித்து அவருடைய உரையை முடித்தார்.

சின்னாரையத்தி என்ற குலச்சல் யூசுப் அவர்களின் மலையாள மொழிப்பெயர்ப்பு நூலை மனித உரிமை போராளி திரு பாலமுருகன் அவர்கள் வெளியிட்டு கவிஞர் ,மொழிப்பெயர்ப்பாளர் , அமெரிக்காவில் உதவி பேராசிரியராக பணியாற்றியவர் திரு பெருந்தேவி அவர்கள் பெற்றுகொண்டார். திருபாலமுருகன் பேசுகையில் மலையாள தேஷத்தில் இடுக்கி ,கோட்டயம் என்ற இடங்களில் வாழ்ந்த மலையரையர்கள் என்ற பழங்குடியினரை பற்றி எழுதபட்ட இந்த நூல் , கொச்சுராமன் என்ற பத்திரம் திருமணம் முதல் நோய்வாய் பட்டு படுத்திருக்கும் வரை இந்த நாவலில் உள்ளது. பழங்குடியாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை அழகாக சொல்லபட்டிருக்கிறது. அவர்களுடைய போராட்டம் பற்றி சொல்லபட்டிருக்கிறது , மலைக்கடவுளான அய்யப்பன் கோவிலில் இருந்து வந்து உங்கள் நிலங்களில் உள்ள தானியங்களை கொடுத்து விடவும் என்று சொல்லுவார்களாம், கோயிலில் இருப்பவர் காடு கோவிலுக்கு சொந்தம் என்று சொல்கிறான், வனத்துறையில் இருந்து வந்து காடு அரசுக்கு சொந்தம் என்று சொல்கிறான், அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதிவாசிக்கு அவனுடைய நிலம் சொந்தமில்லையா , இந்த நாவலின் காலம் 1940 முதல் 1960 வரை இருக்கும் ஆனால் எழுப்பிய கேள்வியின் பலம் பழங்குடி வாழும் மண் பழங்குடிக்கு சொந்தமில்லையா... என்பது , மண்ணுக்காக போராடினால் பயங்கரவாதி என்று சொல்வார்கள். எதிர்த்தால் விமான படை கொண்டு கொல்வார்கள். பழங்குடிக்கு மருத்துவம் பார்க்க சென்றவர் டாக்டர் . பினாயக்‌ஷன். அவரை ஜெயிலில் வைத்தார்கள். ஒரு மனிதன் தீவிரவாதம் பேசுவதை விட ஜனநாயம் பேசுவது மிக கடினம், மானந்தவாடி என்ற ஊரில் இருந்து 3 கி.மீ தொலைவில் வள்ளியூர் காவு என்ற கோவில் இருக்கிறது , அங்கு சென்ற பார்த்த போது நான் அதிர்ந்துவிட்டேன். கோவில் நம் கிராமத்தில் கற்பனை செய்யும் கோவிலை விட சிறிய கோவில்தான் , அங்குதான் 100 ஆண்டுகளாக அடியா என்ற இனத்தை சேர்ந்த பழங்குடியினர் தங்களை தாங்களே வித்து கொண்டார்களாம்,

வர்க்கீஸ் என்பவன் தான் அந்த நிகழ்வுக்கு சாவுமணி அடித்தான் , அவர்களை யோசிக்க வைத்தான், விழிப்புணர்வு செய்தான்,சுயமரியாதையை கற்று கொடுத்தான் ஆனால் அவனுக்கு நக்சலைட் என்று பட்டம் சூட்டினார்கள். அந்த சமூக போராளியை சுட்டு கொன்றார்கள். இன்றும் அங்கு வர்க்கீஸ் பாறை என்று ஒரு கோவில் உள்ளது, பழங்குடி மக்கள் அவனை தெய்வமாக வணங்குகிறார்கள். மேலும் பழங்குடியின் போராட்டம் என்ன, அவர்களின் நிலை என்ன என்பதை மிக அழகாக சொன்ன நூல் அழகாக மொழிபெயர்க்கபட்டுள்ளது , என்று சொல்லி தன் உரையை முடிக்கிறார்.

ஆமென் என்ற மலையாள மொழிப்பெயர்ப்பு நூலை மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா வெளியிட ஓவியர் பெனிடா பெற்று கொண்டார். பின்னர் பால் சக்கரியா பேசுகையில் ”மலையாளத்தில் நூல் வெளியீட்டு விழா நடத்தினாள் மூன்று பேர் இருப்பார்கள் ஒன்று எழுதியவர், இரண்டு வெளியிடுபவர், மூன்று பத்திரிக்கை நண்பர்கள் ,மொத்தம் 20 பேர், 30 பேராக இருந்தால் சந்தோஷம்.ஆனால் இங்கு அரங்கு நிறைந்து இருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு தன் வரலாறு நூல் சுயசரிதை என்பது மிகவும் அந்தரங்கமான ஒன்று. ஏன் பைபிளே 4 பேர் எழுதிய ஒரு மனிதரின் கதை, இயேசுவே அந்த வாழ்க்கையை பற்றி எழுதியிருந்தால் எவ்வளவு உண்மை இருந்திருக்கும். சிஸ்டர் ஜெஸ்மி என்ற துறவியின் தன் வரலாறு இது. இவர் தன்னை இயேசுவின் தோழி என்று சொல்லி கொள்கிறார். பொதுவாக துறவி என்பது இயேசுவின் மனவாட்டி என்று தான் சொல்லுவார்கள், இது கேரளாவில் அதிர்ச்சிக்குரிய செய்தியாக வந்தது. துறவியின் வாழ்க்கைமுறை, மதத்திற்க்காக என்னென்ன துயரங்களை கொள்கிறார்கள் என்று ஒரு கன்னியாஸ்திரி சொல்கிறார். இது பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வந்துள்ளது. குலச்சல் யூசுப் நன்றாக மொழிப்பெயர்த்துள்ளார்’ என்றார்.

சூத்திரனின் கதை என்ற நூலை அ.இ.ரா.வெங்கிடாசலபதி வெளியிட பத்திரிகை ஆசிரியர் பா,கோலப்பன் அவர்கள் பெற்றுகொண்டார்,பின் வெங்கடாசலபதி பேசுகையில் தென் தமிழகத்தின் மலையாள எல்லையில் உள்ள ஒரு மனிதனின் சுய சரிதை. இது 2006 ஆங்கிலத்தில் வெளிவந்தபோது என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ அது எதுவுமே பொய்த்து போகவில்லை, பிற்படுத்தபட்டோர் ஆணைய தலைவர் அறிக்கையை வெளியிட்டவர் ஏ.என்.சட்டநாதன் அவர்களைப் பற்றிய நூல்.தமிழில் சுய சரிதை வெளிவருவது மிக குறைவு, அதை இரண்டு கைகளுக்குள் எண்ணிவிடலாம், 15 ,20 ஆண்டுகளாக தமிழில் தலித் சுயசரிதை வெளிவந்துள்ளது, இதில் பல பதிவுகள் உள்ளது, S.S.பிள்ளை , நீலகண்ட சாஸ்திரி பற்றிய பதிவுகள் சட்டநாதன் பட்ட கஷ்டங்கள், வெளிவந்துள்ளன. இவருடைய நடை நூலின் தொனி இயல்பாக உள்ளது ,கல்விகட்டணத்திற்க்காக அவர் படும் கஷ்டம், அவமானம் , மிகப்பெரும் ஏமாற்றம் என பல பதிவுகள் உள்ளது. இதில் ஒரு பெரிய ஏமாற்றம் என்ன வென்றால் அவருடைய 23ம் வயதிலேயே இது முடிவுறுகிறது. அதாவது 1928 வரைதான் பதிவாகியுள்ளது இன்னும் ஐந்து ஆறு ஆண்டுகள் அவர் எழுதியிருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்றார்.

’சக்தி பிறக்கும் கல்வி’ என்ற எழுத்தாளர் வசந்திதேவியின் கட்டுரை தொகுப்பை பத்திரிகையாளர் ஞானி அவர்கள் வெளியிட ஆய்வாளர் சரவணன் அவர்கள் பெற்று கொண்டார். பின் ஞானி அவர்கள் பேசுகையில் ”வசந்தி தேவி அவர்கள் எனக்கு 25 வருட நண்பர் , துனைமுதல்வராக பணியாற்றி , பின்னர் துணை வேந்தராக பணியாற்றி , பின் அதிகாரம் தரக்குடிய பதவிகளில் இருந்தவர். அப்போதுகூட மக்களுக்காகதான் அவருடைய சிந்தனைகள் எல்லாம் இருக்கும், ஒரு கல்வியாளர், நடுநிலமையோடு இருப்பவர், ஆசிரியர் பக்கம்மும் இருப்பார், மாணவர்கள் பக்கம் இருக்க வேண்டுமானால் அவர்கள் பக்கம், சமூகத்தின் பக்கமும் இருப்பார், ஒரு கல்வி அமைச்சராக கூடிய தகுதி அவரிடம் இருக்கிறது,சமூகத்தின் மீது உள்ள அக்கறை இந்த கட்டுரைகளில் தெளிவாக தெரிகிறது, ஆரம்ப கல்வி பற்றிய கட்டுரை இருக்கிறது, படித்தவர்கள் யாரும் ஆரம்ப கல்வி பக்கம் போவது இல்லை. ஆனால் இவருடைய கட்டுரை ஆரம்ப கல்வி பற்றி இருக்கிறது, உயர் கல்வி பற்றி இருக்கிறது, குறிப்பாக யாருக்கான ஆரம்பகல்வி, என்று எல்லாம் எழுதியிருக்கிறார் , இதையெல்லாம் விட இந்த நூலுக்கு முன்னுரை வழங்கி இருப்பவர் இவருக்கு இணையான கல்வியாளர் s.s. ராஜகோபாலன் அவர்கள் . 2011ன் தொடக்த்தில் இந்த நூல் பற்றி பேச வாய்ப்பு கிடைத்ததற்காக நான் மிகவும் சந்தோசமாகிறேன். காலசுவடுக்கும், ஆசிரியர் வசந்திதேவிக்கும் என் வாழ்த்துகளை சொல்லி விடைபெறுகிறேன்”

’பற்றி எரியும் பாக்தாத்’ என்ற கவிதாமுரளிதரனின் மொழிபெயர்ப்பு நூலை பற்றி மூத்த பத்திரிக்கையாளர் சதானந்தன் அவர்கள் பேசுகையில் வெகுஜன ஊடங்களை பற்றி பேசியவர் ” வெகுஜன ஊடகங்களை கண்ட்ரோல் செய்வது 40 பெரிய வணிக நிறுவனங்கள், விமர்சன குரல் என்பது ஒரு தனி நபர் சொல் என்பது இப்போது வலைப்பூக்களில் மட்டும் தான் உள்ளது , ஊடகம் துளைக்க முடியாத சுவரை உடைத்து வலைபதிவு உண்மையை நேர்மையாக சொல்லும் வலைபதிவு, மேலும் இப்போது உள்ள இலங்கை பிரச்சனையில் இது போன்ற குரல் வெளிவரவில்லை என்பது மிகவும் வருத்ததிற்குரியது என்று சொல்லி காலசுவடுக்கும் , கவிதா முரளிதரனுக்கும் வாழ்த்துக்களை சொல்லி தனது உரையை முடித்தார்.

”புத்தாயிரத்தில் தமிழ் களம்” என்ற நூலை பற்றி ஹென்றி திபேல் அவர்கள் பேசுகையில் ”மனித உரிமை பாதுகாவலர்களை மையபடுத்தி நேர்காணல்களை கொண்ட புத்தகம், மனித உரிமை யின் நவநீதபிள்ளை அவர்கள் மனித உரிமை தினம் என்பதை மனித உரிமை பாதுகாவலர்கள் தினமாக கொண்டாடலாம் என்று சொன்னர். இப்போது மனித உரிமை பாதுகாவலர்கள் தாக்குதல் நடக்கும் காலம், சென்னையில் கூட மனித உரிமை பாதுகாவலர்கள் ஒரு கூட்டத்திற்கு அனுமதி கேட்டபோது சென்னை மாநகரகாவலர் மறுத்து இருக்கிறார்கள். நீதிதுறைமேல் மக்கள் எவ்வளவு நம்பிக்கையற்ற நிலையில் உள்ளார்கள் என்பது, 2010 என்ற கொடுரமான ஆண்டில் மக்கள் நேசிக்கும், தலைமை நீதிபதி பதவி விலக சொன்னர்கள், மேலும் அருந்ததிராய் நேர்காணல் தமிழாக்கம் , பேராசிரியர் கல்வி மணியின் நேர்காணல் , ரவிக்குமார் அவர்களுடைய நேர்காணல் அப்போது அவர் சட்டசபை உருப்பினராக ஆகும் போது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அவர் சொல்ல நேர்ந்தது, சிவகாமி அம்மாள் I.A.S அவர்களின் நேர்காணால் போன்ற மிக அறிய நேர்காணல்களை தொகுத்துள்ளார்கள், மேலும் இந்த நூலை வெளியிட்ட காலசுவடுக்கும், வாழ்த்துக்களை சொல்லி தனது உரையை முடித்தார்.

”அமைதியின் நறுமணம்” என்ற மொழிப்பெயர்ப்பு நூலை பற்றி வாஸந்தி அவர்கள் பேசுகையில் ”அமைதியின் நறுமணம் என்ற கவிதை தொகுப்பு யூரோம் சர்மிளா அவர்களின் தொகுப்பை அழகாக மொழிப்பெயர்ப்பு செய்திருக்கிறார்கள். கண்ணன் அவர்கள் எனக்கு ஒரு MAIL அனுப்பினார் யூரோம் சர்மிளாவின் கவிதை தொகுப்பு மொழிப்பெயர்ப்பட்டுள்ளது அதற்கு நீங்கள் பேச வேண்டும் என்றார், கண் இமைக்கும் நேரத்தில் நான் சரி என்று அனுப்பினேன். நான் யூரோம் சர்மிளா கவிதைகளை படித்ததில்லை, ஆனால் அவரை பற்றி கேள்விபட்டு மிகவும் பிரமிப்பு அடைந்துள்ளேன். மணிப்பூர் மாநிலத்தில் 10 ஆண்டுகளாக சாகும் வரை உண்ணாவிரதம் என்று தனது உடலை ஆயுதமாக கொண்டு போராடி வரும் ஒரு பெண், அவரை கட்டாயபடுத்தி மருத்துமனையில் திரவத்தை செலுத்துவார்களாம். ஒரு ஆண்டு காவலில் இருப்பாராம் , பின் வெளியே வந்து உண்ணாவிரதம் பின் காவல் என்று பத்து ஆண்டுகளாக உண்ணவிரதம் இருக்கும் பெண், தம் மண்ணில் வாழும் மக்கள் ராணுவத்தின் கொடுமையில் இருந்து விடுபடவே இந்த போராட்டம்.ஒரு கவிதை எழுதும் சாமான்யபெண்ணிற்கு எப்படி வந்தது இந்த சக்தி. ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த 10 பொது மக்களை கொன்றது ராணுவம். அப்போது 28 வயது பெண் பத்திரிக்கையாளர் சர்மிளா மத்திய அரசு ராணுவம் மீதான சுதந்திரத்தை விலக்கும் வரை உண்ணாவிரதம் என்று முடிவெடுத்தார். அவருடைய தாய் 10 வருடமாக அவரை பார்க்க வரவில்லையாம் ஏன் என்றால் என்னை பார்த்த உடன் அவள் என் கண்ணீருக்காக உண்ணாவிரதத்தை முடித்து விடுவாள் என்பதற்க்காக . இப்படிபட்ட ஒரு பெண்ணின் கவிதையில் கோபம் இல்லை , அமைதியை வர்ணித்துள்ளார், ஒரு போலிச்காரனின் கழி தாபபொருள் அல்ல என்ற அவ்ருடைய கவிதைகள் எல்லாம் என்னை கவர்ந்தது . 2004 ல் போராளி மனோரமா என்பவரை ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டர்கள் , அப்போது இம்பால் நகரிலே ஒரு பெரிய பெண்கள் கூட்டம் ராணுவ தளத்தை எதிர்த்து சென்றது , அப்போது ராணுவம் அவர்களை எதிர்த்தது, அப்போது அங்குள்ள பெண்கள் தங்கள் ஆடைகள துறந்து நிர்வாணமாக நின்று இதோ எடுத்து கொள் உங்களுக்கு இதுதானே வேண்டும் என்றார்களாம் , அவர்களை பார்த்த ராணுவவீரர்கள் பயந்து ஓடினார்களாம். இப்படிபட்ட சூழ்நிழையில் இருந்து வந்தவர் தான் சர்மிளா, இவர் சிறுவயதில் இருந்தே கவிதை எழுதும் பழக்கம் உள்ளவராம். இவருடைய கவிதையில் அர்சியல் நெடியும் உண்டு.மேலும் மத்திய அரசு ராணுவம் மீதான சுதந்திரத்தை விலக்க வில்லை, இவருடைய போராட்டமும் தொடர்கிறது ,மேலும் அவருடைய கவிதையை வாசித்து தனது உரையை முடித்தார்


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...