![]() |
காட்சிகளாக விரியும் கவிதைகள் - நினைவுகளின் நகரம்Posted : புதன்கிழமை, ஜனவரி 05 , 2011 01:39:40 IST
நான் எனது பூட்டிற்கு செய்யும் சாவிகள் தன் பூட்டிற்கு சேருவதாக கருதுபவன் என் வாசகன் என்று சுந்தர ராமசாமி கூறியிருக்கிறார். ராஜா சந்திரசேகர் செய்த சாவிகள் (கவிதைகள் ) பலரது பூட்டை திறக்கலாம்.
சினிமா மற்றும் அதன் சார்புதுறையில் நீண்ட நாட்களாக பயணித்தும் , சினிமாவின் இரக்கமின்மையால் ரணப்பட்டும் ராஜாசந்திரசேகரின் கவிதைகள் பசாங்கற்று , மனிதநேயத்தோடு இருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை அளிக்கலாம். கவிதையாகவும் , சில நேரங்களில் கவிதையிலிருந்து விரியும் காட்சிக்குள் நடமாடும் கதாபாத்திரமாகவும் நான் மாறுவதற்கு வாய்ப்பளிக்கிறது ராஜாசந்திரசேகரின் நினைவுகளின் நகரம். எனது வார்த்தைகளால் அவரது கவிதைகள் பற்றி பேசுவதை விட நினைவுகளின் நகரம் கவிதை தொகுப்பில் உள்ள 194 கவிதைகளில் எட்டு கவிதைகளை உங்கள் முன் வைக்கிறேன் . இந்த கவிதைகள் உங்களை கட்டாயப்படுத்தலாம் 'நினைவுகளின் நகரம்' புத்தகத்தை வாங்கச் சொல்லி... சர்க்கஸ் சிங்கம் தனக்குள் தேடும் தொலைந்த காட்டை சர்க்கஸ் சிங்கம் புகைப்படம் புன்னகைக்கச் சொல்லி எடுத்தவரின் புன்னகையும் இருக்கிறது புகைப்படத்தில் வானம் தன் குஞ்சுக்குப் பறவை ஊட்டியது உணவை பின் கொஞ்ச கொஞ்சமாய் வானத்தை நட்பின் ரகசியங்கள் நட்பின் ரகசியங்களை மிக நுட்பமாய் சொல்லியபடி மலை உச்சி வரை என்னை அழைத்து வந்த நீ தள்ளிவிட்டாய் பின் தற்கொலை கொடூரமானது எனச் சொல்லியபடியே இறங்கிப்போனாய் எந்த வித பதற்றங்களும் அற்று பறவையின் உயிரில் அந்தப் பறவையைக் கொன்றவர்களுக்குத் தெரியவில்லை அதன் உதட்டில் குஞ்சின் பெயர் ஒட்டி இருந்ததும் வாயில் குஞ்சுக்கான உணவிருந்ததும் போதல் எல்லா ரயிலும் போயிருந்தன குழந்தை வரைந்த தண்டவாளத்தில் நண்பர்களும் நட்பும் நண்பர்கள் இறந்து போகும்போதெல்லாம் நட்பும் இறந்து போகிறது தேநீர் குடித்தபடியே ராமசாமி சொன்னான் போனவாரம் எங்களோடு டீ குடித்த முத்தையாவின் இடம் வெறுமையாக இருந்தது. ஆப்பிள் விளையாட்டு காருக்குள் ஆப்பிளைத் தூக்கிப் போட்டு விளையாடும் அப்பாவும் மகளும் சிக்னல் விழுவதற்குள் வெளியே வந்து விழாதா எனப் பார்க்கிறாள் வெயிலைத் துடைத்தபடி சிறுமி ***** ***** நினைவுகளின் நகரம் கவிதைத் தொகுப்பு ராஜா சந்திரசேகர் நதி வெளியீடு - 044 - 23760644 விலை - ரூ 100
|
|