அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வாய் வலிக்க பேசினோம்... மை தீர எழுதினோம் - அண்ணா

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   29 , 2010  00:42:22 IST

த சன்டே இந்தியன் முதன்மை ஆசிரியர் என்.அசோகன் தொகுத்துள்ள அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள் நூல் வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24-ம் தேதி சென்னை தேவ நேய பாவணர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் தலைமையேற்க, திராவிட கழக பேச்சாளர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மேலும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நூலின் தொகுப்பாசிரியரான என்.அசோகன் அனைவரையும் வரவேற்று பேசுகையில் ’’ பகுத்தறிவு பகலவன் ஐயா பெரியார் அவர்களின் நினைவு நாள் அன்று இந்த நிகழ்ச்சி நடப்பது எதேச்சையானது என்றாலும் இது மிகவும் பொருத்தமானது. .இந்த நூல் உருவானதற்கு அறிஞர் அண்ணாவிற்கு தான் நன்றி சொல்லவேண்டும். அவர் மிக அருமையான தம்பிகளை விட்டுச் சென்றிருந்தார். இந்த புத்தகத்திற்காக 20 பேரை சந்தித்தோம். அவர்கள் முதுமையில் இருந்தார்கள், அண்ணாவை பற்றி சொல்லுங்கள் என்றதும் அவர்கள் உற்சாகத்துடன் பேசினார்கள். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. மேலும் 2008 ல் இது த சன்டே இந்தியன் சிறப்பிதழாக வெளியானபோது 'அண்ணாவின் கொள்கை என்பதற்கு பதிலாக அண்ணாவின் கொள்ளை என்று தவறாக அச்சாகிவிட்டது. இதைச் சுட்டிக்காட்டி ஒரு வாசகர் கடிதம் எழுதினார். அதில் அவர் குறிப்பிடுகையில் இதை நான் குறையாக கூறவில்லை , இந்த அரிய சிறப்பிதழைக் கொடுத்ததே மிகப்பெரிய விஷயம். அதனால் நீங்கள் கவலை படவேண்டாம் என்று எழுதி இருந்தார். அதில் அச்சிடபட்டுள்ளது போல அண்ணா கொள்ளைதான் அடித்தார் , அவர் கழகத்தில் உள்ள தம்பிகள் நெஞ்சத்தை கொள்ளை அடித்தார் என்று குறிப்பிட்டார்.

திராவிட இயக்கத்துக்கே உரிய ஆளுமையுடன் ' சொர்க்கத்திலும் நரகத்திலும் நம்பிக்கையில்லாதவர்கள் நாங்கள் ' என்று பேச தொடங்கினார் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன். மேலும் அவர் பேசுகையில் அரங்கத்தில் நிறைய வெற்று இடங்கள் இருப்பதை பற்றி நாங்கள் பேசிக்கொண்டோம், எண்ணிக்கையை வைத்து நிகழ்ச்சியை கணிக்க முடியாது, தேசிய பறவையாக மயிலை வைத்து கொள்ளலாமே என்று அண்ணா சொன்னபோது , சிலர் எண்ணிக்கையில் அது மிகவும் குறைவாக தான் உள்ளது என்றனர், அதற்கு அண்ணா எண்ணிக்கையில் அதிகம் இருக்க வேண்டும் என்றால் காக்கையைதான் நீங்கள் தேசியபறவையாக வைக்க வேண்டும் என்றார். இப்படி பட்ட புத்தகம் வெளிவருவது மிக அவசியமானது என்று தான் நான் சொல்வேன். ஒரு எளிய மனிதர் , தான் உடுத்தும் உடையை பற்றி கூட கவலைபடாதவர், சோபாவைக் கூட வேண்டாம் என்று அனுப்பி வைத்தவர், வாழைபழம், ப்ளாஸ்க், மூக்குபொடி என்று வாழ்ந்த அவரை நாம் மறக்க முடியாது. தனித்தமிழ் திராவிட தேசியத்தை உருவாக்கியவர் அண்ணா., போட்டு பழகிய பை,கேட்டு பழகிய பொய், சொல்லி பழகிய மெய் என்று பெரியார் அவர்களிடம் இருந்து கற்று கொண்டதாக சொல்வார், அண்ணா அவர்கள் சொல்வார் என் ஆட்சியில் நான் இட்டது மூன்று கையெழுத்து யாராலும் மாற்ற முடியாதது, ஒன்று தமிழ் நாடு என்று பெயர் சூட்ட கிடைத்த போது, சுய மரியாதை திருமணத்தின் போது, மூன்றாவது இரு மொழி கொள்கையின்போது. அப்போது ஆச்சாரியார் அவர்கள் தமிழ் நாடு என்பதை தமிழ் நாட் என்று வைக்கலாமே என்று சொன்னார் அதற்கு அண்ணா அவர்கள் நாடு என்பது விருப்பங்களின் இடம், பெருவாரியான மக்கள் தமிழை விரும்பும் இடம் என்பதால் நாடு என்றே இருக்கட்டும் என்றார் . இப்படி தமிழையும் தமிழ் நாட்டையும் நேசித்தவர் அண்ணா. அண்ணா அவர்கள் 40 மேலை நாட்டு அறிஞர்களுக்கு நிகரானவர், நான் திராவிடன் என்று சொல்வதில் பெருமையானது, திண்ணியமானது, தனித்தன்மையானது பிரகாசமானதுமாய் கருதுகிறேன் என்றார் அண்ணா” என்றார் தமிழச்சி.

பின் நிகழ்ச்சியில் சிறப்பு பிரதிகள் வழங்கபட்டது. சிறப்பு பிரதிகளை திரு வீரமணி அவர்கள் வெளியிட அண்ணாவின் மகன் சி.என்.ஏ. ராஜேந்திரன் அவர்கள் , அண்ணாவின் மகன் இளங்கோவன் துணைவியார், முன்னாள் மேயர் சா.கணேசன், கவிஞர் செங்குட்டுவன், ராதா மணாளன் மூத்த மகன் செல்வ மகன், ஜே.வி.கண்ணன் மகன் வேதன். ஓவியர் மருது ஆகியோர் பெற்றுகொண்டனர்.

அண்ணா அடையாளம் கண்ட தம்பிகளில் ஒருவரான விஐடி துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் அவர்கள் பேசியதாவது : ’’அண்ணா ஒரு கடல் , நாடு முழுவதும் இருக்கிறார். அப்படிப்பட்ட அண்ணாவைப் பற்றி பேசுவதற்கு என்னை அழைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . அண்ணாவை பொருத்தவரை எல்லோரையும் கவர்ந்த குணம் அவருடைய எளிமை. நான் முதன்முதலில் 7ம் வகுப்பு படிக்கும் போது அவரை பார்க்க நேர்ந்தது , எங்கள் ஊர் குடியாத்தம் ஒரு கம்யூனிசம் நிறைந்த ஊர். பின்னர் 1953 ம் ஆண்டு நான் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் , அப்போது அவருடைய பேச்சை கேட்க குடியாத்ததில் இருந்து சைக்கிளில் சென்று அவருடைய பேச்சை கேட்டு வருவோம். அண்ணா வை பொறுத்த வரை சென்றார் ...கண்டார் .... வென்றார்... என்று சொல்லுவார்கள். அவரால் வார்க்கப்பட்டவர்கள் இன்று நிறைய கட்சிகளில் முக்கிய இடங்களில் இருக்கிறார்கள், பெரியாருக்கும் அண்ணாவிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்றால், பெரியார் சொல்வது கசாயம் போன்றது, அவர் எதையும் யோசிக்கமாட்டார், மனதில் பட்டதை சொல்லிவிடுவார், ஆனால் அண்ணா அதில் கொஞ்சம் இனிப்பு சேர்த்து சொல்வார், அடுத்தவர் மனம் புண்படாதபடி எடுத்து கூறுவார். ஒரு முறை அண்ணாவின் தம்பிகள் பெரியார் அவர்கள் நமது கட்சியை பார்த்து அதிக விமர்சனம் செய்கிறார் என்று சொன்னபோது. யானை குட்டிகளை தூக்கிபோடுவது குட்டியை கொல்வதற்கு அல்ல. பழக்கப்படுத்தவே என்று சொன்னாராம். பெரியார் காமராஜரை ஆதரித்தார். ஆனால் அண்ணா வெற்றி பெற்றார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் பெரியாரின் ஆசையை நிறைவேற்றும் விதம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார். அவர் ஒரு போதும் பெரியாரை மறந்ததில்லை . அண்ணாவிடம் உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்றதும் வாய்மைதான் காரணம் என்றார், அது என்ன வாய்மை என்றதும் ‘ வாய் வலிக்க பேசினோம் ... மை தீர எழுதினோம்.... என்று சொல்வார்.”என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் பேசுகையில்’’ அண்ணாவை நான் பார்த்ததில்லை , அண்ணாவின் தம்பிகளுக்கு தம்பி என்ற தகுதியில் பேசுகிறேன் . அண்ணாவை பற்றி நான் பேசி நீங்கள் தெரிந்து கொள்ள தேவையில்லை .இந்த புத்தகம் ஒரு வரலாற்று பெட்டகம், அடுத்த தலைமுறைக்கு எடுத்த செல்ல வேண்டிய அவசியம் நம்மிடம் இருக்கிறது. இந்தியாவில் 30 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருந்தாலும் தனித்தன்மையான மாநிலம் தமிழ்நாடு .மொழிக்காக தியாகம் செய்தவர்கள் தமிழர்கள் மட்டும்தான் . என்னை போன்ற எளியவனும் பேசும் உரிமை பெற்று தந்தது பெரியாரையும் அண்ணாவையும் சேரும். அரசியலில் எவ்வளவோ முரண்பாடுகள் வரலாம், நாகரிகத்தோடு பக்குவமாக எடுத்து சொல்பவர் அண்ணா. அண்ணா வெற்றி பெற்றாலும் தலைவர் நாற்காலி பெரியாருக்கு ஒதுக்கப்பட்டது.பெரியார் அண்ணாவை பற்றி பேசும் போதும் வெங்காயம் என்று சொல்வார் என்று கேள்விபட்டு இருக்கிறேன். ஆனால் அண்ணா அந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. பதவிக்காக , பதவி மோகத்திற்காக அரசியல் கட்சியை தோற்றுவிக்கவில்லை, இன்றைய அரசியலில் நாகரிகம் இல்லை. வயது வித்தியாசமில்லாமல் , அவருடைய அனுபவம் தெரிந்தும் , கருணாநிதி என்று பெயர் சொல்லும் அளவில்தான் இன்றைய அரசியல் இருக்கிறது . நான் காலம் கடந்து பிறந்துவிட்டேன், 62 ல் நான் பிறந்தபோது செழியன் அவர்கள் பெரம்பலூர் தொகுதியில் நிற்கிறார் , அப்போது அவர் செலவழித்த தொகை 4500 ரூபாய், இப்போது எவ்வளவு செலவழிக்க வேண்டும், அப்படி செலவழித்தாலும் ஜெயிப்பது நிச்சயம் இல்லை. இயக்கத்தில் உள்ளவர்களை தொண்டர்கள் என்று பார்க்கவில்லை, தனது தம்பிகளாகவே பார்த்தார் . காலத்திற்கு ஏற்ப அறிவார்ந்த முடிவுகளை எடுத்தவர் அண்ணா. தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழருக்கு நாடுகேட்டு போராடினார் ஒருவர். 15 லட்சம் பேருக்கு ஒரு நாடு , 30 லட்சம் பேருக்கு ஒரு நாடு, சில லட்சம் பேருக்கு ஒரு நாடு இருக்கும் போது , 10 கோடி பேருக்கு நாடு வேண்டாமா என்று கேட்டார். இந்த சிந்தனை பெரியார் பாசறையில் இருந்து வந்தது. திராவிட நாகரிகம் திராவிடனுக்கே என்று முழங்கியவர் அண்ணா. வடக்கு வாழ்கிறது , தெற்கு தேய்கிறது என்று அப்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாக சொன்னவர் அண்ணா. பெரியாரும், அண்ணாவும் உருவாக்கிய அந்த அரிய பெட்டகத்தை நாம் தான் காப்பற்றவேண்டும் , இனம் இலங்கைதீவில் அழிந்து கொண்டிருக்கிறது, அதை நாம் தான் காப்பாற்ற வேண்டும்,” என்றார்.


இறுதியாகப் பேசிய கி. வீரமணி மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசினார்.’’ அறிவு ஆசான் பெரியார் அவர்களின் நினைவு நாளில் பகுத்தறிவு குடும்பத்தின் பிள்ளை அண்ணாவின் வாழ்வில் 100 அரிய தருணங்கள் நூலை கொண்டு வந்த சண்டே இந்தியன் பத்திரிக்கைக்கு என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் , ஒரு தலைமுறைக்கு மட்டும் அல்ல எல்லா தலை முறைக்கும் சொந்தம் அறிஞர் அண்ணா என்று சொல்லுக்கு எடுத்துகாட்டாய் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார் . ஒரு வார ஏடு , 14 மொழியில் வர கூடிய அந்த வார ஏடு, அதுவும் வடக்கில் இருந்து வந்த அந்த வார ஏடு இந்த நூலை வெளியிடுவது . அண்ணா வென்றிருக்கிறார்.... பெரியார் வென்றிருக்கிறார்...., கலைஞர் வென்றிருக்கிறார் .. என்பதை எடுத்து காட்டுகிறது. அத்தனை பேருக்கும் பொதுவானவர் அண்ணா. அவர் ஒரு எழுத்தாளர், பேச்சாளர் , நாடகம் இயற்றினார், திரைக்காவியங்கள படைக்கும் ஆற்றல் மிக்கவர் , அவரின் ஆங்கில பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அரசியலுக்கு வந்த போது அண்ணா அவர் பதித்த முத்திரையை யாராலும் பெற்றுவிடமுடியாது. சர்ச்சில் வரலாறை எழுத அவருடைய உதவியாளரை வைத்து புத்தகம் எழுதினார். அதேபோல் அண்ணாவின் இந்த நூலும் வெளிவந்துள்ளது. அனைவரும் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும். மேலும் பதிப்புகள் அதிகம் வர வேண்டும். அண்ணா அவர்கள் மிகவும் எளிய மனிதர். இப்படி எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் அறிஞர் அண்ணா. இந்த எளிமை எங்கிருந்து வந்தது. பெரியார் அவர்களிடம்தான். ஒரு முறை பெரியாருடன் வடநாட்டுக்கு போகிறார் அண்ணா. அப்போது குளிர் அதிகமாக இருக்கிறது . பெரியார் அண்ணாவிடம் வா கடைக்கு ஒரு கோர்ட்டு வாங்கி வரலாம் என்று கூட்டி போகிறார். அண்ணாவும் எதாவது ஒரு பெரிய கடைக்கு கூட்டி போவார் என்று நினைத்தார். அப்போது பெரியார் பழைய கடைக்கு கூட்டி போனார், அங்கு உள்ள கடைகளில் அண்ணாவிற்கு சேரும் படியாக ஒரு கோட்டும் இல்லை. அப்போது பெரியார் சொன்னாராம் சும்மா எதாவது ஒன்னு எடு ஆல்டர் செஞ்சுக்கலாம் என்றாராம். இப்படி பட்ட எளிமைதான் அண்ணாவிடமும் வந்தது. மேலும் பெரியாருடனான பல அறிய சம்பவங்களை ஞாபகபடுத்தினார் திரு வீரமணி அவர்கள். பம்பாயில் வி.சி .ராய் அவர்கள் வைத்த விருந்தில் பெரியார் அவர்கள் ஊறுகாய்க்கு என்ன ஆங்கில வார்த்தை என்று தெரியாமலும் அதை எப்படி சமாளித்தார் என்று நகைசுவை ததும்ப சொல்லி அரங்கில் இருந்த அனைவரையும் உற்சாகபடுத்தினார். ஐயா கஞ்சன் அல்ல .. சிக்கனவாதி.. என்ற அவர் அண்ணாவும் அப்படித்தான் என்றார். பின்னர் சன்டே இந்தியன் செய்தியாளர் சுந்தரபுத்தன் அவர்கள் அணைவருக்கும் நன்றி கூறினார்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...