???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்! 0 கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் 0 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147 பேர் ராஜினாமா அறிவிப்பு! 0 நடிகர் தனுஷை சொந்தம் கொண்டாடிய மதுரை தம்பதி: வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் 0 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது: டெல்லி உயர்நீதிமன்றம் 0 உலகின் அதிவேக ஏவுகணை: பிரமோஸ் சோதனை வெற்றி! 0 மாநிலங்களவை தேர்தல்: பாஜகவிற்கு வாக்களித்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ-க்கள்! 0 உள்ளாட்சித் தேர்தல் தாமதத்திற்கு திமுக காரணம் என்பது வடிகட்டிய பொய்: ஸ்டாலின் 0 திசை மாறிப்போன குழந்தைகள் மீண்டும் தாய் கட்சிக்கு திரும்புவார்கள்: முதல்வர் நம்பிக்கை 0 பேஸ்புக் தகவல் திருட்டு: விஷயம் இதோடு முடிந்துபோய் விடவில்லை! 0 காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுகிறது: கமல் குற்றச்சாட்டு! 0 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தொடங்கியது! 0 தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா - சென்னையில் இன்று நடக்கிறது! 0 இன்று பகத்சிங்கின் 87வது நினைவு தினம்! 0 குரங்கணி காட்டுத்தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எல்லோரும் ஒன்றுதானா? - º¡.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   28 , 2006  21:19:21 IST

எல்லோரும் ஒன்று என்பது உண்மைதானா?

இல்லை என்பது இன்னொரு உண்மை.

எல்லோரும் ஒன்று என்பது ஒரு தத்துவம். கொள்கை. இலட்சியம். இல்லாததை அடைவதற்காகச் சொல்வது. எல்லோரும் ஒன்று என்று சொல்லும்போதே- அதன் கூட இருப்பது எல்லோரும் ஒன்றில்லை என்பதுதான்.

மனிதர்கள் என்ற அளவில் ஒன்றாக இருக்கும் மனிதர்கள் ஒரே மனிதர்கள் இல்லை. கூட்டமான மனிதர்கள், தனிப்பட்ட முறையில் வித்தியாசமானவர்கள். அதாவது ஒன்றுபோல் இருந்தாலும் ஒன்று இல்லாதவர்கள். நெடுங்காலமாக மனிதர்கள் அப்படித்தான் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு மனிதர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் கூர்மையானது. தனித்தன்மை பெற்றது. மாற்றவோ-சிதைக்கவோ முடியாது.

ஆனால், மனிதர்கள் எல்லோரும் ஒன்று என்று சொல்லும் தத்துவாதிகள் மனிதர்களுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தை மறைத்துவிட்டு- மேலோட்டமாக இருக்கும் பொதுத்தன்மைகளை முன்னிலைப்படுத்துகிறார்கள். திருõப திருõப அதையே சொல்லி மனிதர்கள் எல்லோரும் ஒன்று என ஸ்தாபிக்கப் பார்க்கிறார்கள்.

மனித சரித்திரத்தில்-மனிதன் ஒன்றுதான் என்பதை ஸ்தாபிக்க சக்கரவர்த்திகள் ஒரே நாட்டை உண்டாக்கப்பார்த்தார்கள். அதற்காகப் பக்கத்து நாடுகளை வென்று ஒரே நாட்டை அமைத்தார்கள். ஒரே சட்டம், ஒரே நீதி என்றார்கள். ஆனால் அது நெடுங்காலத்¾¢ற்கு நீடிக்கவில்லை. தனிப்பட்ட மனிதர்கள் தங்களுக்குள் இருந்த தனிப்பட்ட தன்மையால் ஒரே ஆட்சி, ஒரே நாடு- என்È கோட்பாட்டைத் தகர்த்துவிட்டார்கள்.

சமய சான்§È¡ர்கள்- மனிதர்களுக்கு இவ்வுலகில் மனநிம்மதியும், இறந்தபிறகு சொர்க்கலோகமும் தரும் கோட்பாடுகளைப் பரப்பினார்கள். அதற்கு நிறுவனங்கள்-ஆலயங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் எனப் பலவற்றை ஸ்தாபித்தார்கள். ஒரே கோட்பாடு, ஒரே வழிபாடு என்பது தனிப்பட்ட மனிதனுக்குத் திருப்தி தரவில்லை. எனவே ஒரு சமயத்தில் இருந்து பிரிந்து போய் இன்னொரு சமயத்தை நிறுவினார்கள். மனிதன் எல்லாம் ஒன்று இல்லை. ஒரே வழி என்பது மனிதனுக்கு உவப்பானதில்லை என்பதை சமயம் தன்னÇவில் நன்கு நிலைநாட்டி உள்ளது.

அப்புறம் சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகள். அதுவும் மனிதன் ஒன்று இல்லை என்பதை ஒவ்வொரு தலைமுறையிலும் நிலை நிறுத்திக் கொண்டே வருகிறது.

சாதாரணமாகக் கூட்டமாக இருக்கும் மனிதன் தனிமனிதனாக இருக்க ஆசைப்படுகிறான். தனியாக இருக்கும் மனிதன் கூட்டத்தில் சேர்ந்து கொள்ள விரும்புகிறான். ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த முயற்சி வேறு வேறு பெயர்களில் நடைபெறுகிறது. ஆனால் அதன் வழியாக நடைபெறும் காரியம் சொல்வது மனிதன் ஒன்று இல்லை. ஒவ்வொரு மனிதனும் புதிர். அதுவகையில் மனிதன் என்பதை பற்றி சொல்லப்பட்டு இருப்பதை ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் நிராகரித்து வருகிறான்.

ஒரே மனிதன் தன் அளவில் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் விடுவிக்கும் செய்தி நான் மனிதன். அதாவது, தனி மனிதன் என்னை எதன் உள்ளேயும் அடக்க முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அடங்கி ஒடுங்கி இருப்பது போல பாÅனைக் காட்டினாலும்- உண்மையில் அடங்கி இருப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போது வெளியே ஓடுகிறவன்தான் மனிதன். அதற்கு இதுவரையில் உள்ள சரித்திரமே ஆதாரமாக உள்ளது. அதை மூடிமறைத்¾¢டு எல்லோரும் ஒன்று என்பது உண்மை இல்லாதது என்பதை பேசுவதே சமூகக் குற்றம் போல் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் எது உண்மையோ-அது ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. எனவே போலியான பேச்சுì¸û; போலியான அலங்காரம்; போலியான உபசாரம்- சமூகப் பண்பாக மாறி உள்ளது.

எல்லோரும் ஒன்றில்லை என்பதை போலியான பண்பு, போலியான நடவடிக்கைகள் தினந்தினம் நிலை நிறுத்துகின்றன. ஒன்றில்லாத மனிதன் தன்னுமை தனித்திறமையால் அதை பொருட்படுத்தாமல்-நான் அதில் இல்லை என்பதை நிலை நிறுத்திக் கொண்டு வருகிறான்.

யாரும்-யாருக்கும் இணையில்லை.

சேர்ந்து வாழ்கிறோம் என்பதால் எல்லோரும் ஒன்று இல்லை. தனித்தனியானவர்கள் சமூக நலம்-சொந்த நலம் கருதி கூடி வாழ்கிறோம். கூட்டமான வாழ்க்கை- மனிதன் தனியாவன் என்பதை திண்ணமாக நிலை நிறுத்தி உள்ளது.

தனி மனிதன், தனித்திறமை என்பது ஒவ்வொரு செயலிலும், நடவடிக்கையிலும்தான் தனிப்பட்டவன் என்பதை நிலை நிறுத்துவதுதான்.

ஒரே காலத்தில் வாழ்ந்த புத்தரும் மகாவீரரும் ஒன்று இல்லை. மகாத்மா காந்தியும் நேருவும் வித்தியாசப்பட்டவர்கள். பாரதியும் பாரதிதாசனும் வெவ்வேறுவிதமான கவிஞர்கள். அவ்வளவு ஏன்? அண்ணனும் தம்பியும் ஒன்றில்லை. சகோதரிகளும் அப்படியே.

அது தனிப்பட்ட மனிதர்களில் இருந்து சமயம், கட்சி, அரசியல் கோட்பாடுகள் என்று எல்லாவற்றிலும் நிலை கொண்டுள்ளது. ஆனால் அடிப்படையில் அது தரும் செய்தி ஒன்றுதான். அதாவது மனிதர்கள் தனித்தனியானவர்கள். ஆனால் கூட்டமாகச் சேர்ந்து வாழக் கூடியவர்கள். ஒன்று போல் இருந்தாலும் ஒன்றாக இல்லாதவர்கள். நெடுங்காலமாக தனித்தனியாக தனித்து வாழ்க்கிறார்கள்.

மனிதர்கள் எல்லோரும் ஒன்று இல்லை- என்Ú சொல்வது சிரமமாக இருந்தாலும் அது மெய்- அதாவது உண்மை.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article 1, Article 2,Article 3,Article 4 ,Article 5,Article 6, Article 7 ,Article 8, Article 9, Article 10 ,Article 11


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...